`இரவில் நாய் மற்றும் கொசுத் தொல்லை' - கட்டண வார்டுக்கு மாற்றப்பட்ட லாலு பிரசாத் யாதவ்!Sponsoredராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் தலைவரும், பீகார் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சருமான லாலு பிரசாத் யாதவ் மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் 24.03.2018 அன்று சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் 14 வருட சிறைத் தண்டனையும், 60 லட்சம் அபராதமும் விதித்துள்ளது.

ஏற்கெனவே, மாட்டுத்தீவன ஊழல் வழக்குகள் மூன்றில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு சிறைத் தண்டனைப் பெற்ற லாலு பிரசாத் யாதவ், மாட்டுத்தீவன ஊழலின் நான்காவது வழக்கான தும்கா கருவூல வழக்கிலும் குற்றம் நிரூபிக்கப்பட்டு ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் சிறைத் தண்டனை அனுபவித்து வருகிறார். சிறையில் இருக்கும்போது அவருக்கு அடிக்கடி உடல்நிலை மோசமாகி விடுகிறது. இதனால் அவர் அவ்வப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

Sponsored


சமீபத்தில் இவருக்கு உடல்நலம் குன்றியதை அடுத்து ராஞ்சியில் உள்ள ரிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. பொதுவார்டில் அவருக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுவந்தது. ஆனால், பொதுவார்டில் இரவு நேரங்களில் நாய் குரைப்பதாலும், கொசுத் தொல்லை அதிகமாக இருப்பதாலும் அவதிப்பட்டுவந்த லாலு, சிறை அதிகாரிகளிடம் தனக்கு வார்டை மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இதை சிறை அதிகாரிகள் மருத்துவமனை நிர்வாகத்திடம் எடுத்துச் சொல்ல தற்போது லாலு கட்டண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார். கட்டண வார்டில் ஏசி உள்ளிட்ட சலுகைகள் உள்ளன. இதற்காக அவர் தினமும் ரூ.1000 கட்டணம் செலுத்த வேண்டும்.

Sponsored
Trending Articles

Sponsored