`எளிய உரையாடல்கள் மூலம் இந்தியைப் பரப்புங்கள்' - அரசு அலுவலர்களுக்கு மோடி அட்வைஸ்!Sponsoredஎளிய உரையாடல்கள் மூலம் இந்தியைப் பரப்ப வேண்டும் எனப் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.  

மத்திய இந்தி குழுவின் கூட்டம் டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில், குஜராத், இமாசலபிரதேசம், அருணாசலபிரதேசம் ஆகிய மாநிலங்களின் முதல்வர்களும், குழுவின் உறுப்பினர்களும் கலந்துகொண்டனர். இதேபோல் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், பிரகாஷ் ஜவடேகர் மற்றும் ரவி ஷங்கர் பிரசாத் ஆகியோரும் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, இந்தியைப் பரப்ப வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார். அவர் பேசுகையில், ``தினசரி உரையாடல்கள் மூலம் இந்தியைப் பரப்ப வேண்டும். 

Sponsored


அரசு காரியங்கள் தொடர்பாக அதிகாரிகள் உரையாடும்போது சிக்கலான உரையாடல்களைத் தவிர்த்து எளிமையான உரையாடல்களை மேற்கொள்ளுங்கள். தொழில்நுட்ப வார்த்தைகளைத் தவிருங்கள். அரசு இயந்திரத்தில் இருக்கும் இந்தி பயன்பாட்டுக்கும், சமூகத்தில் இருக்கும் இந்தி பயன்பாட்டுக்கும் இடையேயான இடைவெளியைக் குறைக்க வேண்டும். இந்தி உள்ளிட்ட இந்திய மொழிகள் அனைத்தின் மூலமாகவும் உலகத்துடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ள முடியும். இதற்குக் கல்வி நிறுவனங்கள் மூலம் உதவலாம்" என வலியுறுத்தியுள்ளார்.

Sponsored
Trending Articles

Sponsored