அடர்ந்த காட்டுப் பகுதியில்... பாதிவழியில் பிறந்த குழந்தை! - ஆந்திராவில் நிகழ்ந்த அவலம் #viralvideoSponsoredமுறையான சாலை வசதி இல்லாததால் நிறைமாதக் கர்ப்பிணி பெண்ணைத் தொட்டில் கட்டி 7 கிலோ மீட்டர் தூக்கிச் சென்ற அவலம் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது.

ஆந்திரப் பிரதேச மாநிலம், விஜயநகரம் மாவட்டத்துக்கு உட்பட்ட வனப் பகுதி கிராமங்களில் பழங்குடியினர் மக்கள் அதிகம் வசிக்கின்றனர். இங்கு, வாழும் கிராம மக்களுக்குப் போதிய சுகாதார வசதிகள் இன்றளவும் கிடைக்கவில்லை. நகரத்துடன் இணைக்கும் முறையான சாலைகள்கூட சரிவரப் போடப்படவில்லை. இதனால், மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அப்படியான ஒரு நிகழ்வுதான் மீண்டும் ஏற்பட்டுள்ளது. நிறைமாதக் கர்ப்பிணியான முத்தம்மாள் என்ற பெண்மணிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டிருக்கிறது. ஆம்புலன்ஸை அழைக்கலாம் என்றாலும் சாலை வசதி இல்லை என்றுகூறி தட்டிக் கழித்துவிடுவர். அதனால், நேரம் தாமதிக்காமல் மூங்கில் கம்பு ஒன்றில் சேலையால் தொட்டில் கட்டி முத்தம்மாவை 7 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லலாம் எனத் தீர்மானித்துள்ளனர்.

Sponsored


அதன்படி, உறவினர்கள் முத்தம்மாவை அழைத்துச் சென்றிருக்கின்றனர். அடர்ந்த காட்டுப்பகுதியில் 4 கிலோ மீட்டர் தூரம் கொண்டு சென்றபோது, முத்தம்மாவுக்கு பிரசவ வழி அதிகரித்ததால், பாதி வழியிலேயே பிரசவம் நடந்தது. தாயும் சேயும் தற்போது நலமுடன் இருக்கின்றனர். இந்த நிகழ்வுகள் அனைத்தையும் தனது மொபைல் போனில் பதிவு செய்துள்ளார் அங்கிருந்த ஒருவர். அவர் கூறும்போது, `இப்படிதான், கிராம மக்கள் உடம்பு சரியில்லாதபோது அல்லது மகப்பேறு காலங்களில் அவதிப்பட்டு வருகிறார்கள். முறையான சாலை வசதியை அமைத்துத் தர பலமுறை அதிகாரிகளிடமும் அரசியல்வாதிகளிடமும் முறையிட்டுள்ளோம். யாரும் கண்டுகொள்ளவில்லை' என்றார் ஆதங்கத்துடன்.

Sponsored
Trending Articles

Sponsored