இந்தியாவில் முதன்முறையாக ட்ரோன் வழியாக அரசு சான்றிதழ் விநியோகம்!ந்தியாவில் ட்ரோன்கள் பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில் புதிய கொள்கை வகுக்கப்பட்டுள்ளது . வரும் டிசம்பர் 1-ம் தேதி முதல் புதிய கொள்கை அமலுக்கு வருகிறது. உணவுப் பதார்த்தங்களை ட்ரோன்  வழியாக விநியோகிக்க அனுமதி  இல்லை. எனினும் சில கட்டுப்பாடுகளுடன் ஆளில்லாத விமானத்தின் பயன்பாடு எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. கேரளாவில் முதன்முறையாக அரசு சான்றிதழ் விநியோகிக்க ட்ரோன் பயன்படுத்தப்பட்டுள்ளது. 

Sponsored


pic courtesy :  manorama

Sponsored


மலப்புரம் மாவட்டம், பொன்மணி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் அனீஷா. சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் இவர் குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழ்கள் தொலைந்துபோயின. அனீஷா பொன்மணியில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாமில் தங்கியுள்ளார். தன் குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழ்கள் தொலைந்து போனதால் டூப்ளிகேட் வழங்கும்படி அனீஷா விண்ணப்பித்தார். இதையடுத்து கடைசி குழந்தையின் பிறப்பு சான்றிதழ் ட்ரோன் வழியாக நிவாரண முகாமில் தங்கியிருந்த அனீஷாவுக்கு விநியோகிக்கப்பட்டது. செப்டம்பர் 4-ம் தேதி நிவாரண முகாமில் ட்ரோன் இறங்கியதும் அங்கிருந்த அனைவருக்கும் வியப்புடன் பார்த்தனர். பின்னர் அதில் இணைக்கப்பட்டிருந்த  பிறப்புச் சான்றிதழை எடுத்துக் கொண்டனர். இந்தியாவிலேயே அரசு அளிக்கும் சான்றிதழ்  இம்முறையில் விநியோகிக்கப்பட்டதும் இதுவே முதன்முறை. 

Sponsored


அனீஷா கூறுகையில், ''வெள்ளத்தில் என் மூன்று குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழும் காணாமல் போய்விட்டது. டூப்ளிகேட் அளிக்குமாறு விண்ணப்பித்திருந்தேன். செப்டம்பர் 4-ம் தேதி ஷீபாவின் பிறப்புச் சான்றிதழை ட்ரோன் கொண்டு வந்தது. இந்த அனுபவம் வித்தியாசமாக இருந்தது'' என்றார். Trending Articles

Sponsored