`தண்டவாளத்தில் டூவிலர் பயணம்’ - கனமழையை எதிர்கொள்ள முடியாமல் தவிக்கும் ராஜஸ்தான் மக்கள்!Sponsoredராஜாஸ்தான் மாநிலத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக, வேறு வழியின்றி, ரயில்வே தண்டவாளங்களில்  டூவிலர்களை ஓட்டும் நிலைக்கு அப்பகுதி மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

Photo Credit: ANI

Sponsored


ராஜஸ்தானில் பெய்து வரும் கனமழை, அப்பகுதி மக்களுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், பல்வேறு மாவட்டங்கள் வெள்ள பாதிப்புக்கு ஆளாகியுள்ளன. வெள்ளத்த்தை அடுத்து தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள், பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளன. பல்வேறு மாவட்டங்களில் சாலைகளில், நீர் தேங்கி காணப்படுகிறது. வாகனங்கள் சாலையில், பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

Sponsored


அந்த வகையில், தோல்பூர் மாவட்டத்தில் சாலைகள் முழுவதிலும் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கிறது. இதனால், அப்பகுதியில் போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது. வேறு வழியின்றி, ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு செல்ல, பயணிகள் சாலைகளுக்கு மாற்றாக, ரயில்வே தண்டவாளங்களை உபயோகித்து வருகின்றனர். ஒருவர் பின் ஒருவராக டூவிலரில் ஊர்ந்து செல்கின்றனர். வெள்ளம் ஓடும் பகுதிக்கு மேலிருக்கும், இந்த தண்டவாளங்களில், டூவிலர் மூலம் ஆபத்தான பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர் அப்பகுதி வாசிகள்.Trending Articles

Sponsored