இந்திய ரூபாய் மதிப்பு சரிவால், வெளிநாடுகளில் படிக்கும் மாணவர்களுக்கு பாதிப்புSponsoredஅமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய்  மதிப்பு கடந்த சில மாதங்களாக சரிவை சந்தித்து வருகிறது. இது பொருளாதாரத்திலும், அனைத்து தரப்பினருக்கும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதன் காரணமாக வெளிநாடுகளில் பயிலும் மாணவர்களும் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவால் அமெரிக்கா மற்றும்  ஐரோப்பிய நாடுகளில் படிக்கும் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது, ரூபாய் மதிப்பு  71 யை எட்டியுள்ள நிலையில், இது மாணவர்கள் மத்தியிலும்,  அவர்களின்  பெற்றோர்கள் மத்தியிலும் அதிக கவலையை ஏற்படுத்தியுள்ளது. தற்போது, எங்களின் அன்றாட மற்றும் படிப்பு செலவுகளுக்கு அதிகளவில் பணம் செலவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. டாலருக்கு  நிகரான ரூபாயின் மதிப்பு முன்னேற்றம் அடையும் வழிமுறைகள் எதுவும் தெரியவில்லை என்று வெளிநாடுகளில் படிக்கும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

Sponsored


ரூபாயின் மதிப்பு குறைவால்,கடந்த ஆறு மாதங்களில், இங்கு தங்கியிருப்பதற்கான செலவுகள்,கல்வி கட்டணம் உயர்ந்துள்ளதாக  கூறப்படுகிறது. அமெரிக்காவில் படிக்கும் மாணவர்களுக்கு அவர்கள் தங்கி படிக்கும் இடத்தை பொருத்து மாதத்திற்கு சராசரியாக  500- 800 டாலர் வரையில் செலவாகிறது. அமெரிக்காவில் கலிபோர்னியா மற்றும் நியூயார்க் நகரங்களில்  தங்கியிருப்பதற்கான செலவுகள் அதிகமாக இருக்கிறது. அதேசமயம், டெக்ஸாஸ் நகரில் செலவுகள் மிகவும் குறைவு. இங்குதான் இந்திய மாணவர்கள் அதிகளவில் படிக்கின்றனர்.

Sponsored


அதேசமயம், ரூபாய் மதிப்பு சரிவால் ஆஸ்திரேலியா மற்றும் கனடா  ஆகிய நாடுகளில் படிக்கும் மாணவர்கள் அதிகளவில் பாதிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.  இங்கிருந்து வெளிநாடுகளில் 3.5 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். இதில் அமெரிக்காவில் மட்டும் 1 லட்சம் மாணவர்கள் பயில்கின்றனர்.வங்கியில் கல்விக்கடன் மூலமாக படிக்கும் மாணவர்கள் தற்போது டியூசன் பீஸ் உயர்வால் கடுமையாக அவதிக்குள்ளாகியுள்ளனர்.

ரூபாய் மதிப்பு வீழ்ச்சியால் வெளிநாடுகளில் படிக்கும் மாணவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் குறித்து பொருளாதார ஆலோசகர் கெளரி ராமகிருஷ்ணன் கூறுகையில்,
’’ அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு கடந்த சில நாட்களாக சரி்ந்து கொண்டே வருகிறது. இது அனைத்து தரப்பு மக்களையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. இதன் காரணமாக  பெட்ரோ்ல் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகரித்துள்ளது. பெட்ரோல்,  டீசல் விலை உயர்வால் அத்தியாவாசிய பொருள்களின் விலை உயர்ந்துள்ளது. மேலும்,  வீடுகளுக்கு பயன்படும் பொருள்களின் விலையையும் உயர்த்த உள்ளதாக நிறுவனங்கள் கூறுகின்றன. இதனால், பெீாதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இதுதவிர, ரூபாய் மதிப்பு வீழ்ச்சியால் இறக்குமதியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது, இந்த பட்டியலில் வெளிநாடுகளில் மேற் படிப்புக்காக சென்றிருக்கும் மாணவர்களும் இணைந்துள்ளனர்.  அங்கு மாணவர்களின் அன்றாடும் செலவிடும் தொகை அதிகரித்து இருப்பதால்,  அவர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.  இதில் குறிப்பாக  அறிவியல் தொடர்பான மேற்படிப்பை வெளிநாடுகளுக்கு சென்று படிக்க திட்டமிட்டுள்ள ஆந்திரா, தெலுங்கானா மாணவர்கள்  மேற்கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் உள்ளனர்.   இந்தநிலையில், மேற்படிப்புக்கு அமெரிக்காவிற்கு மகனை அனுப்பத் திட்டமிட்டு, அதற்கு கல்விக்கடனும் ஏற்பாடு செய்துள்ளனர். தற்போது, ரூபாய் மதிப்பு சரிவால்,  கூடுதல் செலவு ஆக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கின்றனர். மேலும், விசா விண்ணப்ப கட்டணமும் ( Visa Application fees)  உயர்ந்துள்ளதாக கவலையுடன் தெரிவிக்கின்றனர்.

ரூபாய் மதிப்பு சரிவு  மாணவர்களின்  பெற்றோர்களை  கவலையில் ஆழ்த்தியுள்ளது. இதனால்,  ஏற்பட்டுள்ள கூடுதல் செலவை ஈடுசெய்ய லோன் வாங்கும் முயற்சியி்ல் அவர்கள்  ஈடுபட்டுள்ளனர்.  தற்போது, அமெரிக்காவில் பயிலும் மாணவர்கள்  செமஸ்டர் கட்டணம் செலுத்த கூடுதலாக  செலவிட  வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இது அவர்களுக்கு மனரீதியிலான நெருக்கடியை ஏற்படு்த்தியுள்ளது. அமெரிக்காவில் பயிலும் மாணவர்கள் மூன்று மாதங்களுக்கு முன்பு கோடைக்கால  கல்விக்கட்டணம் செலுத்த வேண்டியிருந்தது. அப்போது, ரூபாயி்ன் மதிப்பு சரிந்திருந்தது. இதைத்தொடர்ந்து, அதன் மதிப்பு உயர்ந்தவுடன் கல்விக்கடனை செலுத்தி விடலாம் என்று கருதி  சுமார் ஒன்றரை மாதங்கள் காத்திருந்தனர். ஆனால், ரூபாயின் மதிப்பில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதையடுத்து, அவர்கள் அபராதத்துடன் கல்விக்கடனை செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.  இப்படி ரூபாய் மதிப்பு சரிவு மாணவர்களுக்கும் ஒரு வித நெருக்கடியை ஏற்படுத்திக்  பாதிப்பையும் ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது.’’ என்றார்Trending Articles

Sponsored