இந்தியர்களின் எதிர்கால சேமிப்பு எதை நோக்கியது? - தனியார் வங்கி நடத்திய சுவாரஸ்ய ஆய்வுSponsoredஇந்தியர்கள் தாங்கள் சேமிக்கும் பணத்தை எதற்குப் பயன்படுத்துகிறார்கள் என ஹெ.எஸ்.பி.சி (HSBC) வங்கி ஒரு சுவாரஸ்யமான ஆய்வை நடத்தியுள்ளது. 

பணிபுரிபவர்கள் பெரும்பாலானவர்கள் தங்களின் ஓய்வின் போது எவ்வளவு சேமித்து வைத்திருக்கிறோம் என பார்ப்பதில்லை. பலரும் பலவித தேவைகளுக்காகவே பணத்தை சேமிக்கின்றனர். ‘எதிர்கால ஓய்வு - இடைவெளியை இணைத்தல்’ என்ற தலைப்பில் இந்தியாவில் உள்ள 16,000 பணிபுரிபவர்களிடம் இணையத்தில் ஒரு ஆய்வை மேற்கொண்டது ஹெச்.எஸ்.பி.சி வங்கி. இதில் பல பிரிவுகளில் கேள்விகள் முன்வைக்கப்பட்டிருந்தது. ஆய்வு முடிவில் பலரும் பல சுவாரஸ்யமாக வாக்களித்துள்ளனர். 

Sponsored


வங்கியின் ஆய்வு, 

Sponsored


1) 33 சதவிகிதம் பேர் அதாவது மூன்றில் ஒரு பங்கு மக்கள் பேர் மட்டுமே தங்களின் எதிர்காலத்துக்காக முறையாகச் சேமிக்கின்றனர். 

2) 19 சதவிகிதத்தினர் தங்களின் எதிர்கால மருத்துவம் சார்ந்த செலவுகளுக்காகச் சேமிக்கின்றனர். 

3) 51 சதவிகிதம் மக்கள் தங்களின் குடியிருப்பு பராமரிப்புக்காக சேமிக்கின்றனர். 

4) 56 சதவிகிதத்தினர் தாங்கள் வாங்கும் சம்பளத்தை அதே மாதத்தில் முற்றிலும் செலவழித்து விடுகின்றனர். 

5) 53 சதவிகிதம் பேர் தங்களின் குறுகிய கால இலக்குகளுக்காகச் சேமிக்கின்றனர். 

6) 45 சதவிகிதம் மக்கள் இன்று மகிழ்ச்சியாக இருக்கலாம் நாளைச் சேமிக்கலாம் என்ற கருத்தை முன்வைத்துள்ளனர். 

7) 69 சதவிகிதம் பேர் தாங்கள் தொடர்ந்து வேலை செய்யவேண்டும் எனத் தெரிவித்துள்ளனர். 

8) 54 சதவிகிதம் பேர் தங்களின் வேலை முடிந்தவுடன் சொந்தமாக தொழில் தொடங்க விருப்பப்பட்டுள்ளனர். 

9) 76 சதவிகிதத்தினர் தங்களின் முதிய வயதில் சுதந்திரமாக இருக்கவே விருப்பம் தெரிவித்துள்ளனர்.
 Trending Articles

Sponsored