`அவர் மீது ஓர் ஈர்ப்பு இருந்தது’ - இந்தியாவின் முதல் திருநங்கை ஜி.எஸ்.டி கமிஷனர் திருமணத்துக்குத் தயார்!Sponsoredட்டப்பிரிவு 377 நீக்கப்பட்டதையடுத்து, ஒடிசாவில் பணியாற்றும் ஜி.எஸ்.டி வரி வசூல் பிரிவு இணை கமிஷனர் ஐஸ்வர்யா ரிதுபர்னா பதான் திருமணத்துக்குத் தயாராகிறார். இந்திய அரசுத்துறையில் பணியாற்றும் ஒரே திருநங்கை இவர்தான். 

திருமணம் குறித்து ஐஸ்வர்யா, ``2 வருடங்களாக இருவரும் சேர்ந்து வாழ்ந்து வருகிறோம். நாம்  திருமணம் செய்துகொள்வோம் என்ற போது, உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு முடிவு எடுப்போம் என்று என்னிடத்தில் அவர் கூறினார். தற்போது, உச்ச நீதிமன்றம் எங்களுக்கு சாதகமான தீர்ப்பை தந்துள்ளது. அடுத்த வருடம் திருமணம் செய்துகொள்ள முடிவு எடுத்துள்ளோம்'' என்கிறார்.

Sponsored


ஒடிசாவில் உள்ள கந்தமால் மாவட்டம், கானபாகிரி கிராமத்தில் பிறந்த ஐஸ்வர்யா 2010-ம் ஆண்டு ஒடிசா மாநில நிதித்துறையில் ஆண் ஊழியராகப் பணியில் சேர்ந்தார். 2014- ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் திருநங்கைகளை மூன்றாம் பாலினமாக அறிவித்ததையடுத்து தன்னை திருநங்கை என்று வெளிப்படையாகத் தெரிவித்தார். அடுத்த ஆண்டே உறுப்பு மாற்று அறுவைசிகிச்சையும் செய்துகொண்டார். 

Sponsored


தன் ஆண் தோழர் பற்றி ஐஸ்வர்யா கூறுகையில், ''அவரை நான் புவனேஸ்வரத்தில் சந்தித்தேன். 3 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டார். நான் வாய் திறந்து சிரித்தேவிட்டேன். அவர் மீது ஒரு ஈர்ப்பு இருந்தது. என் போன் எண் கேட்டார். நானும் கொடுத்தேன். அப்படியே எங்கள் காதல் வளர்ந்தது. பள்ளியில் ஆசிரியைகள்கூட என்னை ஒதுக்கினர். தாயாரின் நகைகளை அணிந்து என்னை அழகு பார்ப்பேன். அதைப் பார்த்த என் தந்தை அடித்து நொறுக்குவார். அந்த நகைகளை அணியும்போது எனக்குள் மகிழ்வாக இருக்கும். 'என் தந்தையோ என்னை ஆண் மாதிரி நடந்துகொள்' என்பார். நான் உள்ளுக்குள் பெண்ணாகவே உணர்ந்தேன். 

என் தோழரின் பெற்றோர் பூரி நகரில் வசிக்கின்றனர். இதுவரைக்கும் அவர்களிடத்தில் என்னைப் பற்றி சொல்லவில்லை. பெற்றோரின் சம்மதத்தைப் பற்றி கவலைப்படவில்லை. என்னை திருமணம் செய்துகொள்ளத் தயாராக இருக்கிறார். நான் சுய காலில் நிற்கும் பெண். என்னை கட்டிக்கப்போகிறவர் என்னை ஏற்றுக்கொண்டால் போதும். திருமணத்துக்குப் பிறகு, ஒரு பெண் குழந்தையைத் தத்தெடுப்பேன். அவளை மிஸ். யூனிவர்ஸ் போட்டியில்கூட பங்கேற்க வைப்பேன். என்னால் அனுபவிக்க முடியாத பெண்மை உணர்வை அவள் வழியாக நான் காண்பேன்'' என்று மகிழ்வுடன் கூறியுள்ளார்.   Trending Articles

Sponsored