யூ.பி.எஸ்.சி இணையதளத்தில் ஹேக்கர்கள் கைவரிசை!- வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்இணையதள ஹேக்கர்களின் கைவரிசையால் யூ.பி.எஸ்.சி இணையதளம் நேற்று இரவு முடக்கப்பட்டது. 

Sponsored


இந்தியக் குடிமைப்பணித் தேர்வு, ஐ.இ.எஸ், உள்ளிட்ட மத்திய அரசில் உள்ள பல்வேறு துறைகளுக்காகத் தேர்வு அறிவிப்புகள், காலிப் பணியிடங்கள் அறிவிப்புகள் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் http://www.upsc.gov.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்படும். இந்த இணையதளத்தைத் தேசிய தகவல் மையம் நிர்வகித்து வருகிறது. 

Sponsored


Sponsored


யூ.பி.எஸ்.சி 2018-ம் ஆண்டுக்கான தேர்வு விண்ணப்பங்களைப் பெறுவதற்காக பணி நேற்று முதல் தொடங்கப்பட்டது. இந்த நிலையில், யூ.பி.எஸ்.சி இணையதளம் நேற்று ஹேக்கர்களால் முடக்கப்பட்டது. இந்த விவரம் தேர்வாளர்கள் இணையத்துக்குச் சென்றபோதுதான் இணையதளம் முடங்கிய விவரம் தெரியவந்தது. இணையதளத்தில், `டோரேமொன்!!!!!! பிக் அப் தி கால்' I.M.STEWPEED என்ற வாசகத்துடன் ஒரு டோரேமான் கார்ட்டூன் திரையில் வெளியானது. 

இதையடுத்து, வெளியான கார்ட்டூனை ஸ்கீரின் ஷாட் எடுத்து ட்விட்டரில் பகிர ஆரம்பித்தனர். இதுதான் டிஜிட்டல் இந்தியா என நெட்டிசன்கள் வறுத்தெடுக்கத் தொடங்கிவிட்டனர். தற்போது, இணையதளத்தை மீண்டும் செயல்பட வைக்கும் முயற்சியில் மென்பொருள் வல்லுநர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இணையதளத்தில் வெளியான கார்ட்டூன் ஜப்பானிய தொடரில் வெளிவரும் ஒரு கதாபாத்திரம் எனக் கூறப்படுகிறது.Trending Articles

Sponsored