தெலங்கானா பேருந்து கவிழ்ந்து விபத்து - பலி எண்ணிக்கை 57ஆக அதிகரிப்புSponsoredதெலுங்கானா மாநிலம் கொண்டாகட்டு மலைப் பகுதியிலுள்ள பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் பலி எண்ணிக்கை 57 ஆக அதிகரித்துள்ளது. இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் கொண்டாகட்டு மலைப்பகுதியிலுள்ள ஆஞ்சநேயர் கோயிலிருந்து 88 பயணிகளுடன் பேருந்து கீழே இறங்கிக்கொண்டிருந்தது. அப்போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அந்தப் பேருந்து பள்ளத்தாக்கில் விழுந்தது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த ஆம்புலன்ஸ் மற்றும் காவல்துறையினர் விரைந்தனர்.

Sponsored


Sponsored


விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இந்தக் கோர விபத்தில் 7 குழந்தைகள் உள்பட 52 பேர் வரை இறந்ததாக முதல்கட்டத் தகவல் வெளியானது. விபத்தில் காயமடைந்து 20-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில், காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள 5 பேர் சிகிச்சைப் பலனின்றி இறந்தனர். இதையடுத்து, பேருந்து கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 57 ஆக அதிகரித்துள்ளது. Trending Articles

Sponsored