`கரும்பு உற்பத்தியை அதிகரித்தால் சர்க்கரை நோய் அதிகரிக்கும்'- யோகி ஆதித்யநாத்Sponsoredகரும்பு உற்பத்தி செய்வதில் கவனம் செலுத்தும் விவசாயிகள் மற்ற பயிர்களை விளைவிப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்.

உத்தரபிரதேச மாநிலம் பக்பட் மாவட்டத்தில் சாலை திறப்பு நிகழ்ச்சியில், முதல்வர் யோகி ஆதித்யநாத் கலந்துகொண்டார். இதில் பேசிய முதல்வரின் கருத்து விவசாயிகள் மத்தியில் விமர்சனமாகியுள்ளது. நிகழ்ச்சியில் பேசிய யோகி, `கரும்பு உற்பத்தியில் கவனம் செலுத்தும் விவசாயிகள், மற்ற பயிர்களை உற்பத்தி செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். அதிக அளவில் கரும்பு உற்பத்தியைச் செய்து வருகிறோம். கரும்பு உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம், சர்க்கரை நோயை அதிகரிக்க வித்திடுகிறோம். அதனால், விவசாயிகள் கரும்பு உற்பத்தியைத் தவிர்த்து மற்ற பயிர் உற்பத்தியை மேற்கொள்ள வேண்டும்' என்று பேசிய முதல்வர், 

Sponsored


கரும்பு சாகுபடியில் காப்பீடு நிவாரணம்கோரிய விவசாயிகளுக்கு இந்த ஆண்டில் மட்டும் ரூ.26,000 கோடியை அரசாங்கம் வழங்கியுள்ளது. மேலும், நிலுவையில் உள்ள ரூ.10,000 கோடியைச் சர்க்கரை ஆலைகள் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும்' என்று கூறினார். 

Sponsored
Trending Articles

Sponsored