ரூ. 3,000 கோடியில் படேலின் 182 மீட்டர் உயர சிலை அமைக்க ஒப்பந்தம்!காந்திநகர்(குஜராத்) : சர்தார் வல்லபாய் படேலுக்கு சிலை அமைக்க பிரபல கட்டுமான நிறுவனம் எல் அண்ட் டி  சுமார் 3000 கோடி ரூபாயில் ஒப்பந்தம் செய்துள்ளது.

சர்தார் வல்லபாய் படேலுக்கு,   குஜராத் மாநிலம் நர்மதா மாவட்டம் நர்மதா ஆற்றின் நடுப்பகுதியில் சர்தார் சரோவர் டேமில் இருந்து 3.2 கி.மீ தொலைவில் ‘சாதுபெட்’ என்ற இடத்தில் 182 மீட்டரில்  பிரமாண்ட சிலை அமைக்கப்படுகிறது.

Sponsored


இந்த சிலையை அமைக்க பிரபல கட்டுமான நிறுவனம் எல் அண்ட் டி  சுமார் 3000 கோடி ரூபாயில் ஒப்பந்தம் செய்துள்ளது.

இது தொடர்பாக அந்நிறுவனத்தின் நிர்வாகத் துணைத்தலைவர் எஸ்.என்.சுப்பிரமணியன் கூறுகையில், "ஒருமைப்பாட்டு சிலை` யான சர்தார் வல்லபாய் படேல் சிலை 42 மாதங்களில் கட்டி எழுப்பப்படும்.

இந்த வளாகத்திலேயே பெரிய பூங்கா, ஹோட்டல், மாநாடு மையம், மகிழ்ச்சியுடன் பொழுதுபோக்கும் பூங்கா, ஆராய்ச்சி நிலையம், கலாச்சார பாரம்பரியம் வளர்ந்த விதம் மற்றும் சுதந்திர போரை விளக்கும் வகையில் கண்காட்சி மையம் என பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் அமைக்கப்படும். உலகிலேயே உயரமான சிலையாக இது அமையும்" என்றார்.

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored