தரமான உலக பல்கலைக்கழகங்கள் வரிசையில் முதன் முறையாக இந்திய கல்வி நிறுவனம்!Sponsoredரமான உலக பல்கலைக்கழகங்கள் பட்டியலில் முதன் முறையாக இந்தியாவை சேர்ந்த பல்கலைக்கழகம் ஒன்று இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.

பெங்களுருவில் செயல்படும் இந்திய அறிவியல் நிறுவனத்துக்கு ( ஐஐஎஸ்சி) இந்த பட்டியலில் 99வது இடம் கிடைத்துள்ளது. இது தொடர்பாக 'டைம்ஸ் ஹையர் எஜுகேசன்' இதழ் உலகம் முழுக்க செயல்படும் பொறியில் மற்றும் தொழில்நுட்பக் கல்லுரிகளை வகைப்படுத்தியுள்ளது.

Sponsored


இந்த பட்டியலில் அமெரிக்காவை சேர்ந்த, ஸ்டான்ஃபோர்ட், கால்டெக் மற்றும் மசாசூசெட்ஸ் ஆகிய பல்கலைக்கழகங்கள் முதல் 3 இடங்களை பிடித்துள்ளன.

அதேவேளையில் கடந்த ஆண்டு இந்த பட்டியலில் அமெரிக்காவை சேர்ந்த 34 பல்கலைக்கழகங்கள் இடம் பிடித்திருந்தன. இந்த ஆண்டு 31 பல்கலைக்கழகங்களே இடம் பெற்றுள்ளன. ஆசிய நாடுகளை சேர்ந்த 22 பல்கலைக்கழகங்கள் கடந்த ஆண்டு பட்டியலில் இடம் பெற்றிருந்தன. இந்த ஆண்டு 25 ஆக அதிகரித்துள்ளது. இதில் முதல் 30 இடங்களுக்குள் ஆசியாவை சேர்ந்த 6 கல்வி நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன.

இந்த பட்டியலில் இந்திய கல்வி நிறுவனம் ஒன்று இடம் பிடிப்பது இதுவே முதன் முறை.

 

Sponsored
Trending Articles

Sponsored