பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து கேரளாவில் 'பந்த்'!Sponsoredதிருவனந்தபுரம்:

பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து கேரளாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

எண்ணெய் நிறுவனங்கள்,பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 7.50 உயர்த்தி  உள்ளது.இதற்கு நாடு முழுவதும் மக்களிடையே பலத்த எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

இந்நிலையில் பெட்ரோல் விலை உயர்வை கண்டித்தும்,விலை உயர்வை திரும்ப பெற  வலியுறுத்தியும் கேரளாவில் மார்க்சிஸ்ட் உள்ளிட்ட எதிர்கட்சிகள், இன்று முழு  அடைப்புக்கு அழைப்பு விடுத்தன.

அதன்படி இன்று காலை 6 மணிக்கு முழு அடைப்பு போராட்டம் தொடங்கியது.இதன்  காரணமாக மாநிலம் முழுவதும் பேருந்து,ஆட்டோ உள்ளிட்ட வாகனப் போக்குவரத்து  வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் கேரளாவில் இருந்து வெளி மாநிலங்களுக்கு செல்லும் பேருந்துகளும்  செல்லவுமில்லை;வரவுமில்லை.

ஒரு சில கேரள பஸ்கள் மட்டும் கேரள எல்லை வரை செல்கிறது.திடீரென பஸ்கள்  இயக்கப்படாததால் கேரளா செல்ல முடியாமல், கோவை  உள்ளிட்ட அம்மாநில எல்லையையொட்டி இருக்கும் தமிழக பகுதி மக்கள்  தவிப்புக்குள்ளானார்கள்.

Sponsored
Trending Articles

Sponsored