டிசைனும் விலையும் ஓ.கே... ஆனால் அந்த ஒண்ணு மட்டும் மிஸ்ஸிங்..! #LGQ6



Sponsored



"என்ன பாஸ் சொல்றீங்க... LG பிராண்ட்ல ஆண்ட்ராய்டு மொபைல் இருக்குதா" என்ற அளவுக்குத்தான் எல்ஜி மொபைல்கள் நமக்குப் பரிச்சயமாகி இருக்கின்றன. எல்ஜி நிறுவனம் பல ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தினாலும், அவை ஸ்மார்ட்போன் சந்தையில் எந்தவொரு பெரிய தாக்கத்தையும் ஏற்படுத்துவதில்லை. இந்நிலையில், மீடியம் பட்ஜெட் செக்மென்டில், அசத்தலான வடிவமைப்பில் அந்நிறுவனம் அண்மையில் அறிமுகப்படுத்தியிருக்கும் ஸ்மார்ட்போன் LG Q6.

LG G6 சிறப்பம்சங்கள் :

Sponsored


  • 5.5 இன்ச் IPS LCD 2160×1080 
  • Full vision திரை
  • கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு
  • ஸ்னாப்டிராகன் 435 ஆக்டா கோர் பிராஸசர்
  • 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இன்டர்னல் மெமரி
  • 13 மெகா பிக்ஸல் பின்புற கேமரா மற்றும் 5 மெகா பிக்ஸல் முன்புற கேமரா
  • 3000 mAh பேட்டரி திறன்
  • ஆண்ட்ராய்டு 7.1.1 நெளகட் இயங்குதளம்

15,000 ரூபாய்க்குக் கீழே இருக்கும் மொபைல்களில் சற்று வித்தியாசமான வடிவமைப்பில் இருப்பது இந்த ஸ்மார்ட்போன் மட்டும்தான். பார்ப்பதற்குக் கிட்டத்தட்ட சாம்சங் S8 போலவே வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இதன் ஃபுல் விஷன் திரை நிச்சயமாக புது அனுபவத்தைத் தரும். திரையை மையமாக வைத்து வடிவமைக்கப்பட்டிருப்பதால், மற்ற 5.5 இன்ச் திரை மொபைல்களை விட கைகளில் அடக்கமாக இருக்கிறது. எனவே, இதை ஒரு கையில் வைத்துப் பயன்படுத்துவது எளிதாக இருக்கும்.

Sponsored


100° வைடு ஆங்கிள் முன்புற கேமரா மூலம் மற்ற மொபைல்களை விட, ஃசெல்பி எடுத்தால் அதிக பரப்பளவை கவர் செய்ய முடியும். அலுமினியம் மெட்டல் பயன்படுத்தப்பட்டிருந்தாலும் பின்புற பேனல் பிளாஸ்டிக்கால் வடிவமைக்கப்பட்டிருப்பது கீறல்களை ஏற்படுத்தலாம். ஆனால் கீழே விழுந்தாலும் அதிர்வுகளைத் தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. 6 மாதத்துக்குள் கீழே விழுந்து திரை உடைந்தால், அதை இலவசமாக மாற்றிக்கொள்ளும் வசதியை எல்ஜி நிறுவனம் அளிக்கிறது.

இன்டர்னல் மெமரி 32 ஜிபி மட்டும் இருந்தாலும் மெமரி கார்டு மூலமாக 2 TB வரை நீட்டித்துக்கொள்ளலாம். மேலும் ஒரே நேரத்தில் மெமரி கார்டு மற்றும் இரண்டு சிம் கார்டுகளைப் பயன்படுத்த முடியும்.

ஆனால் ஸ்மார்ட்போனை இவ்வளவு கவனமாக வடிவமைத்த எல்ஜி நிறுவனம் ஒரு இடத்தில் மட்டும் கொஞ்சம் சறுக்கியிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் ஃபிங்கர்பிரின்ட் சென்சார் வசதி கிடையாது. அதற்குப்பதிலாக முகத்தைப் பயன்படுத்தி மொபைலை அன்லாக் செய்யும் வசதி இருக்கிறது. மொபைலை முகத்திற்கு முன் காட்டினால் போதும். அதில் உள்ள சென்சார் உங்கள் முகத்தின் தனிப்பட்ட  வடிவத்தைக் கொண்டு நீங்கள்தானா என்பதை உறுதிசெய்து செயல்படும். பகலில் இது அருமையான வசதி. ஆனால் இருட்டில் இந்த வசதி செயல்படுவதில் சிரமம் இருக்கிறது.

குறைந்த விலையில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது LG Q6. ஃபிங்கர்பிரின்ட் வசதியைத் தவிர மற்ற இடங்களில் ஸ்கோர் செய்கிறது. ஃபுல் விஷன் டிஸ்பிளே, கட்டமைப்பு, தோற்றம், மற்ற வசதிகள் ஓகேதான். ஃபிங்கர்பிரின்ட் சென்சார் வசதிதானே அதை அட்ஜஸ்ட் செய்துகொள்ளலாம் என்பவர்கள் தாராளமாக இதைத் தேர்ந்தெடுக்கலாம்.

சிறந்த வடிவமைப்பு, தரம் இருந்தாலும் விலை சற்று அதிகமாக இருப்பது எல்ஜி நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களின் மைனஸ் பாயின்ட். ஆனால், இந்த ஸ்மார்ட்போனை சரியான விலையில் அறிமுகப்படுத்தியிருக்கிறது எல்ஜி நிறுவனம். இதன் விலை ரூபாய் 14,999. இது போன்ற திரை அமைப்பு கொண்ட  ஸ்மார்ட்போனுக்கு இது சரியான விலை என்பதாலும், வேறு எந்த போட்டியாளரும் இல்லாத காரணத்தாலும் LG Q6 வெற்றி பெறும் வாய்ப்புகள் அதிகம்.



Trending Articles

Sponsored