ஓப்போ மொபைல் எல்லாம் யார் வாங்குறாங்க என்கிறீர்களா? இந்தாங்க ஒரு ஷாக் ரிப்போர்ட்!



Sponsored




வெள்ளிக்கிழமையானால், ஒரு நடிகரின் தலையெழுத்து புதிதாக எழுதப்படுகிறது என்பார்கள். அந்த மேஜிக் இப்போது, மொபைல் சந்தையிலும் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. ஒரே ஒரு ஹிட் மாடல் போதும். அந்த பிராண்டை எங்கேயே கொண்டுபோய் சேர்த்துவிடுகிறது. 

Counterpointresearch என்ற தளம் மொபைல் தொடர்பான சர்வேக்களுக்கும், மார்க்கெட் தகவல்களுக்கும் பெயர் பெற்றது. அவர்களின் ஜூலை மாத ரிப்போர்ட் பலருக்கு அதிர்ச்சி வைத்தியத்தை அளித்திருக்கிறது. உலக அளவிலான மொபைல் விற்பனையில் ஆப்பிள் 7 மற்றும் ஆப்பிள் 7+ தான் இன்னமும் சக்கைப்போடு போடுகின்றன. உலக அளவில் 100 மொபைல்கள் விற்றால், அதில் 4 பேர் ஆப்பிள் 7 தான் வாங்குகிறார்கள். அடுத்த இடத்தில்,7+ இருக்கிறது. 2.9 பேர் அதை வாங்குகிறார்கள்.

Sponsored


Sponsored


நன்றி: Counterpoint Research

இந்தப் பட்டியலில் சர்ப்ரைஸ் என்ட்ரி ஓப்போதான். ஓப்போ ஆர்11 மாடலை நூறு பேரில் 2.1% பேர் வாங்குவதாக Counterpoint Research ரிப்போர்ட் சொல்கிறது. ஓப்போவுக்கு இந்த இடம் கிடைக்க உதவியது, இந்திய மொபைல் சந்தைதான். அதே சமயம், ஒப்போவை விஞ்சும் வகையில் விளம்பரம் செய்யும் விவோவின் எந்த மாடலும் டாப் 10ல் இடம்பிடிக்கவில்லை.

சாம்சங்குக்கு வாழ்வளித்த கேலக்ஸி 8 ஐந்தாம் இடத்தில் இருக்கிறது. இந்திய ஆன்லைன் சந்தையின் சூப்பர்ஸ்டார் ரெட்மி நோட் 4 அடுத்த இடத்தில் இருக்கிறது.

நன்றி: Counterpoint Research

இது, மாடல்களின் அடிப்படையிலான கணக்கு. ஒட்டுமொத்த பிராண்டையும் அது விற்கும் மொபைல்களையும் கணக்கில் கொண்டால், இன்னமும் சாம்சங்தான் மொபைல்களின் கில்லி. இதற்கு அடுத்த இடத்தில் ஆப்பிள் இருந்தது. அந்த இரண்டாம் இடத்தின் சீனாவைச் சேர்ந்த ஹூவாய் நிறுவனம், கடந்த இரண்டு மாதங்களாக கைப்பற்றியிருக்கிறது. இந்தியச் சந்தையில் பெரிய ரவுண்டு வராத நிறுவனம் எப்படி இந்த இடத்துக்கு வந்தது என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி. சீன மொபைல் சந்தையில் ஹூவாய் தான் டாப். மேலும், ஐரோப்பா சந்தையிலும் ஹூவாய் தவிர்க்க முடியாத பெயர். இந்த இரண்டும்தான் ஆப்பிளை முந்த உதவியிருக்கிறது. அதே சமயம், ஹூவாயின் எந்த மாடலும் டாப்10 விற்பனையான மாடல்களில் வரவில்லை என்பதும் கவனிக்கவேண்டிய விஷயம். 

சீன நிறுவனங்கள், தொடர்ந்து உலக மொபைல் சந்தையைக் கலக்கிவருகின்றன. அதிகம் விற்கும் ஆண்ட்ராய்டு மொபைல்களில் சாம்சங்கைத் தவிர மற்ற அனைத்துமே சீன பிராண்டுகள்தான். அதிகம் விளம்பரம் செய்வது ஒரு நிறுவனத்தின் வெற்றி ரகசியம் என்றால், இன்னொரு நிறுவனம் விளம்பரத்துக்காக ஒரு பைசா கூட செலவு செய்வதில்லை என மார்க்கெட்டிங்கில் வெரைட்டி காட்டுகிறார்கள். ஆனால், மொபைலின் வசதிகளில்தான் எந்த மாற்றமும் இருப்பதில்லை என கவலைகொள்கிறார்கள், நெட்டிசன்ஸ்.

அடுத்த மாதம் ஐபோன்8, நோக்கியா, லெனோவோவின் புதிய மாடல் என நிறைய எதிர்பார்க்கும் மொபைல்கள் சந்தைக்கு  வரவிருப்பதால், இந்த ஆண்டு முடிவதற்குள் இந்தப் பட்டியலில் நிறைய மாற்றங்கள் வரும் என எதிர்பார்க்கலாம்.



Trending Articles

Sponsored