ஆப்பிள் வாட்ச் முதல் ஐபோன் X வரை... ஆப்பிள் அறிமுகம் செய்த அதிசயங்கள் Live Updates #AppleEventSponsored00:25 AM:

வொயர்லெஸ் சார்ஜர் மூலம் ஐபோனை சார்ஜ் ஏற்ற முடியும். ஐபோன் X-ன் விலை 64000 ரூபாயாக இருக்கும். அக்டோபர் 27 முதல் ப்ரி ஆர்டர் செய்யலாம். நவம்பர் 3ம் தேதி ஐபோன் X விற்பனைக்கு வருகிறது. 

Sponsored


ஐபோன் X:

Sponsored


ஐபோன் வரிசை போன்களில் மிகவும் சிறந்த வெளியீடு இது தான். விளிம்புகளற்ற டிஸ்ப்ளேயுடன் வெளிவந்துள்ளது ஐபோன் X. தண்ணீர் மற்றும் தூசுகளால் பாதிக்கப்படாத வண்ணம் தயாரிக்கப்பட்டுள்ளது. ஐபோன் 8-ல் உள்ளது போலவே கண்ணாடியை போன்ற வெளிப்புற அமைப்பு. சூப்பர் ரெட்டினா டிஸ்ப்ளேயுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 458 ppi ஐபோன்களில் அதிகபட்ச பிக்சலை கொண்ட போன் இது.  ஹோம் பட்டன் இல்லாமல் இந்த ஐபோன் வடிவமைக்கப்பட்டுள்ளது. திரை தட்டினாலே ஐபோன் ஆன் ஆகும். பாதுகாப்பு காரணிகளாக டச் ஐடி மற்றும் ஃபேஸ் ஐடி இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இவை முறையே 50 ஆயிரம் மற்றும் 10 லட்சத்தில் ஒரு முறை தான் தவறாக அன்லாக் செய்யும். ஃபேஸ் ஐடி முக மாறுதல்கள் என்ன நடந்தாலும் அன்லாக் செய்யும். ஆனால் புகைப்படத்தை காட்டினால் அன்லாக் செய்யாது. ஒருவர் தூங்கும் போது முகத்துக்கு நேராக காட்டினால் ஐபோன் ஓப்பன் ஆகாது. கண்கள் திறந்த நிலையில் தான் அன்லாக் ஆகும். ஒருவேளை நீங்கள் அச்சுஅசல் தோற்றமுடைய இரட்டையராக இருந்தால் மட்டும் பாஸ்கோட் வைத்துக் கொள்வது நல்லது. இதனை அறிவிக்கும் போது ஃபேஸ் ஐடி வேலை செய்யாமல் போக ஆப்பிள் ஐபோன் அறிவிப்பாளர் க்ரெய்க் அசடு வழிந்தார். A11 ப்ராஸசர் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது ஐபோன் 7ல் பயன்படுத்தப்பட்டுள்ள ப்ராசஸரை விட 25% அதிக திறன் கொண்டது. 

அனிமேட்டட் எமோஜிக்கள் மூலம் இனி சாட் செய்யும் விதத்தில் அனிமோஜிக்களை வழங்கியுள்ளது. நமது முகபாவனைக்களுக்கு ஏற்றவாறு விலங்குகளில் முக பாவனைகளை மாற்ற முடியும். 

11:45 PM

செப்டம்பர் 15 முதல் இந்த ஐபோன்களை ப்ரி ஆர்டர் செய்ய முடியும். செப்டம்பர் 22 முதல் இந்த ஐபோன்கள் விற்பனைக்கு வருகின்றன..

ஐபோன் 8 மற்றும் ஐபோன் 8 ப்ளஸின் விலை!

ஐபோன் 8 - 699$ - இந்திய மதிப்பில் சுமார் 44500 ரூபாய்

ஐபோன் 8 ப்ளஸ்- 799$ - இந்திய மதிப்பில் சுமார் 51100 ரூபாய்

இவைதான் ஐபோன் 8 மற்றும் ஐபோன் 8 ப்ளஸின் சிறப்பம்சங்கள்

11:30 PM

ஐபோன் 8 மற்றும் ஐபோன் 8 ப்ளஸ்

வெளியானது ஐபோன் 8 மற்றும் ஐபோன் 8 ப்ளஸ்

ஐபோன் 7-ஐ போன்ற தோற்றத்தில் வெளியானது ஐபோன் 8 மற்றும் ஐபோன் 8 ப்ளஸ். எதிர் பார்த்தது போலவே டூயல் கேமராவுடன் வெளியாகியுள்ளது. 8 அடுக்கு கலர் ப்ராசஸுடன் வெளிவந்துள்ளது . இது தண்ணீர் மற்றும் தூசுலிருந்து பாதுகாப்பாக இருக்கும் தன்மையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் டிஸ்ப்ளே 4.7 இன்ச் மற்றும் 5.5 இன்ச். 

11:15  PM

ஆப்பிள்  டிவி 4K அறிமுகம்

இதுவரை ஆப்பிள் டிவிக்களில் இல்லாத சிறப்பம்சம் வாய்ந்த 4K மற்றும் HDR வசதியுடன் வெளியாகியுள்ளது. A10X பிராஸசர் மூலம் இரண்டு மடங்கு அதிகதிறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஸ்பைடர் மேன் படத்தை 4K-ல் கண்டு மகிழலாம். 4K  தொழில்நுட்பத்தில் திரைப்படங்கள் பழைய விலையிலேயே கிடைக்கும்.

11:00 PM

ஆப்பிள் வாட்ச்சின் விலை:

ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 1 : 16000 ரூபாய்
ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 3 : 21000 ரூபாய்
ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 3 செல்லூலாருடன் : 25000 ரூபாய்

ஆப்பிள் வாட்ச் உலகின் இதய துடிப்பை அளக்கும் நம்பர் 1 வாட்ச். ஆப்பிள் வாட்ச் இயங்கு தளம் 4 செப்டம்பர் 19 வெளியாக உள்ளது. இனி ஆப்பிள் வாட்ச் ட்ரம்ப் போடும் ட்விட்டையும் காட்டும். ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 3-ல் 40 மில்லியன் பாடல்களை கேட்டு ரசிக்கலாம்

10:50 PM


ஆப்பிள் வாட்ச்சின் வளர்ச்சி சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு 50 % அதிகம். ஆப்பிள் வாட்ச் ஒருவருக்கு சிறந்த நாளை தரும் என நம்புகிறோம் : டிம் குக். ஆப்பிள் வாட்ச்கள் தான் தற்போது உலகின் நம்பர் 1 வாட்ச்...ரோலக்ஸை பின்னுக்கு தள்ளியது. வாடிக்கையாளர்களுக்கு 97 % திருப்தியை இந்த தயாரிப்புகள் தருகின்றன.

10:45 PM:

ஐபோன் அறிமுகம் செய்யும் மேடைக்கு வந்தார் ஆப்பிள் சிஇஓ. ஸ்டீவ் ஜாப்ஸுக்கு மரியாதை செலுத்தும் விதமான அவரது புகைப்படம் ஸ்க்ரீனிங் செய்யப்படுகிறது.

10:30 PM

ஐபோன் அறிமுக நிகழ்ச்சிக்கு தயாராகும் ஸ்டீவ் ஜாப்ஸ் தியேட்டர்

ஆப்பிள் நிறுவனம் தனது அடுத்த ஐபோன் மாடலை இன்றைய ஆப்பிள் நிகழ்ச்சியில் அறிமுகம் செய்கிறது. இந்த ஐபோன் அறிமுக நிகழ்ச்சி ஸ்டீவ் ஜாப்ஸ் தியேட்டரில் நடக்கிறது. இந்த அரங்கில் அறிமுகம் செய்யப்படும் முதல் ஐபோன் இது தான். ஐபோன் அறிமுகம் செய்யும் 10வது வருட நிகழ்ச்சியில் இன்று புதிய மாடல் ஐபோனை ஆப்பிள் சிஇஓ டிம் குக் அறிமுகம் செய்வார். அரங்கினுள் அனைவரும் அமர வைக்கப்பட்டுள்ளனர். இந்த அரங்கினில் அமைக்கப்பட்டுள்ள லெதர் நாற்காலிகளின் விலை மட்டும் 14000 அமெரிக்க டாலராம். 

வழக்கமாக எண்களால் பெயரிடப்படும் ஐபோன் மாடல்களில் இருந்து மாறுபட்டு இந்த முறை ஐபோன் X என்று பெயரிடப்படலாம் என்று கூறப்படுகிறது. ஐபோன் 8-ல் என்ன வசதிகளெல்லாம் இருக்கும் என்ற கணிப்புகள் ஏற்கெனவே வெளியாகி இருந்தன. 
 Trending Articles

Sponsored