ஹேய் ஆப்பிள் பாய்ஸ்... iOS11 தரும் இதெல்லாம் எப்பவோ ஆண்ட்ராய்டுல வந்தாச்சு!



Sponsored



iOS 11- ஐ அனைத்து ஐபோன் வாடிக்கையாளர்களுக்கும் தந்துவிட்டது ஆப்பிள். முதல் சில நாள்களில் அப்டேட்களைப் பெரும்பாலானோர் டவுன்லோடு செய்ய மாட்டார்கள். இதுவும் ஒரு நல்ல உத்திதான். அடுத்தடுத்த நாள்களில் வாடிக்கையாளர் சந்திக்கும் பிரச்னைகளைக் களைந்து, உடனடி பேட்ச்களைத் தருவார்கள். அதனால், மொபைலோ லேப்டாப்போ... வருகின்ற அப்டேட்களை உடனடியாக அப்டேட் செய்யாமல், சில நாள்கள் பொறுத்திருந்து அப்டேட் செய்வது நல்லது.

iOS 11- ன் பல வசதிகள் ஆப்பிள் பயனர்கள் பல நாள்களாக எதிர்பார்த்தவை. ஆனால், அவை புதிய வசதிகள் அல்ல. ஆண்ட்ராய்டில் அவை வந்து பல வருடங்கள் ஆகிவிட்டன. 

Sponsored


1) Control Centre:

Sponsored



கன்ட்ரோல் சென்டர் என்பை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி இருக்க வேண்டும். Wifi அதிகம் பயன்படுத்துபவர்கள் இருந்தால், எப்போதும் மொபைல் நெட்டிலே இருப்பவர்களும் உண்டு. “கால்குலேட்டர் மொபைலில் இருக்கா?” எனக் கேள்வி கேட்பவர்களுக்கும் மத்தியில்தான் தினம் அந்த கால்குலேட்டரை 100 முறை பயன்படுத்துவர்களும் இருக்கிறார்கள். அதனால், கன்ட்ரோல் சென்டர் கஸ்டமைஸ் செய்துகொள்ளும் ஆப்ஷனை ஆண்ட்ராய்டு கொண்டு வந்தது. இப்போது, ஆப்பிளும் கொண்டு வந்துவிட்டது.

2) File manager:

“என்னப்பா சொல்ற? ஐபோன்ல ஃபைல் மேனேஜர் இல்லையா? அப்புறம் எப்படி? நல்ல ஃபைலை நாமே நம்ம இஷ்டப்படி பாக்க முடியாதா?” என ஆச்சர்யப்பட்ட ஆண்ட்ராய்டுவாசிகள் நிறையப்பேர். அவர்கள் ஏளனப்பேச்சிலிருந்து தங்கள் வாடிக்கையாளர்களைக் காப்பாற்றியிருக்கிறது ஆப்பிள். ஆண்ட்ராய்டில் டீஃபால்டாகவே இருந்த ஆப்ஷன் அது. அதில் ஒரு ஃபைலை காப்பி செய்து, விரும்பிய இடத்தில் பேஸ்ட் செய்யலாம், கணினி உதவி இல்லாமலே.

3) AR support:

இது கொஞ்சம் புதிதுதான். ஆனால், கூகுளின் டேங்கோ வசதிகொண்ட மொபைல்களில் ஏற்கெனவே வந்துவிட்டது ஆக்மெண்ட்டட் ரியாலிட்டி. மற்ற ஆண்ட்ராய்டு மொபைல்களில் இந்த வசதி கிடையாது. ஆனால், ஆண்ட்ராய்டு மொபைலிலும் இதற்கென டெப்த் சென்ஸிங் கேமராக்கள் தேவைப்படும். ஆப்பிளில் ஐபோன்6 இருந்தாலே போதும். மேஜிக்குகளைச் செய்யலாம் என்கிறது ஆப்பிள்.

4) SIRI:

சிரி பழையதுதான். ஆனால், பாதி நேரம் சிரிக்கு நாம் சொல்வது புரியாது. அதற்கு நமது உச்சரிப்பு மட்டும் காரணம் அல்ல. சத்தமான சூழ்நிலையும் காரணமாக இருக்கலாம். அப்போது, டைப் செய்து கட்டளைக்குச் சிரிக்கச் சொல்ல முடியாது. கூகுள் நவ்-ல் இந்த வசதி உண்டு. இப்போது, சிரியிலும் இதைக் கொண்டு வந்திருக்கிறது ஆப்பிள்.

5) ஸ்க்ரீன்ஷாட்டில் வரையலாம்:

இனி ஐபோனில் ஸ்க்ரின்ஷாட் எடுத்தால் அந்தப் படம் ஓரமாக நிற்கும். அதைப் பெரிதாக்கினால், பல ஸ்கெட்ச்களுடன் பெரிதாகும். அந்தப் படத்தின் மேல் நாம் நினைப்பதை எழுதலாம்; கிறுக்கலாம்; வரையலாம். சாம்சங் கேலக்ஸி நோட்டில், Spen பயன்படுத்தி வரையும் வசதி பல ஆண்டுகளுக்கு முன்பே வந்தது. ரெட்மி போன்ற மொபைல்களிலும் இந்த வசதி உண்டு. ஆப்பிள் ஐபோனில் இப்போது வந்திருக்கிறது.

6) ஒன் ஹேண்ட் கீபோர்டு:

மொபைல் வந்த புதிதில் இரண்டு கைகளால் டைப் செய்வதே சிரமமாக இருந்தது. இப்போது Gen Z எல்லாம் ஒரு கையால் மின்னல் வேகத்தில் டைப் செய்கிறார்கள். ஆண்ட்ராய்டில், பல தேர்ட் பார்ட்டி ஆப்ஸ் மூலம் ஒன் ஹேண்ட் கீபோர்டுகள் வந்தன. இப்போது, ஆப்பிள் டீஃபால்டாகவே இந்த ஆப்ஷனைக் கொண்டு வந்திருக்கிறது.



Trending Articles

Sponsored