15 நிமிடத்தில் குவிக் சார்ஜிங்... வாட்டர்ப்ரூஃப்... டூயல் கேமரா... மெர்சல் அரசன் மோட்டோX4! #MotoX4



Sponsored



மோட்டோரோலா நிறுவனம் MotoX4 என்ற புதிய ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. மோட்டோரோலா நிறுவனம் தனது முதல் X சீரிஸ் ஸ்மார்ட்போனை கடந்த 2013-ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. அப்பொழுதே கூடுதல் வசதிகளுடன் விற்பனையில் அசத்தியது. அதன் பின்னர் தனது நான்காம் தலைமுறை X சீரிஸ் ஸ்மார்ட்போனான X4 ஐ கடந்த சில மாதங்களுக்கு முன்பு மற்ற நாடுகளில் அறிமுகப்படுத்திவிட்டது மோட்டோரோலா. தற்பொழுது இந்தியாவில் விற்பனைக்கு கொண்டுவந்திருக்கிறது.

மீடியம் ஃப்ளாக்ஷிப் செக்மென்டில் மோட்டோரோலா நிறுவனம் வழக்கமாக இந்த சீரீஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தும். விலைக்கு தகுந்தவாறு வசதிகள் இருப்பது இதன் சிறப்பு.

Sponsored


மோட்டோ X4 வசதிகள்

Sponsored


  • 5.2 இன்ச் LTPS IPS LCD 1080 x 1920 திரை.
  • 2.2 GHz குவால்கோம் ஸ்னாப்ட்ராகன் 630 ஆக்டாகோர் ப்ராசஸர்.
  • 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டர்னல் மெமரி.
  • 12+8 மெகாபிக்சல் டூயல் பின்புற கேமரா.
  • 16 மெகாபிக்சல் முன்புற கேமரா.
  • 3000mAh பேட்டரி திறன்.
  • ஆண்ட்ராய்டு 7.1 நெளகட்  இயங்குதளம்.

வழக்கமான மோட்டோரோலா  ஸ்மார்ட்போன்களைப் போன்றே கட்டமைக்கப்பட்டிருக்கிறது மோட்டோ X4. அலுமினியம் மெட்டல் ஃபிரேம் மற்றும் பின்புறத்தில் க்ளாஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே, இது சிறப்பாக தோற்றமளிக்கிறது. ஒரு கையில் வைத்தும் எளிதில் பயன்படுத்த முடியும். க்ளாஸ் பயன்படுத்தப்பட்டிருந்தாலும் அவ்வளவு எளிதில் உடையாத வடிவமைப்பைக் கொண்டிருக்கிறது மோட்டோ X4.


டூயல் கேமரா அமைப்பைக் கொண்ட இதில் 16 மெகாபிக்சல் முன்புற கேமரா ஃபிளாஷ் வசதியுடன் இருக்கிறது. 64 ஜிபி இன்டர்னல் மெமரியைக் கொண்ட இதனை 2TB வரை நீட்டித்துக்கொள்ளலாம். இதில் இருக்கும் டூயல் கேமராவில் ஒன்று வைடு ஆங்கிள் லென்சையும் மற்றொரு கேமரா டெப்த் லென்சாகவும் பயன்படும். இந்த ஸ்மார்ட்போனின் குறிப்பிடத்தக்க அம்சம் இதன் நீர்புகாத்தன்மை வடிவமைப்பு. IP68 தரச்சான்றிதழ் பெற்றுள்ள மோட்டோ X4 தண்ணீர் மற்றும் தூசி மூலமாக பாதிப்படையாத வகையில் வடிவமைக்கப்படிருக்கிறது. நீரில் 1.5  மீட்டர்களுக்கு அடியில் 30 நிமிடங்களுக்கு பாதிப்படையாமல் இருக்கும். மேலும் தூசியாலும் பாதிக்கப்படாது. எனவே, நீரிலும் தூசி நிறைந்த இடங்களிலும் பயமின்றி இதைப் பயன்படுத்தலாம்.

3000mAh பேட்டரி குறைவாக தெரிந்தாலும் ஒரு முறை முழுவதுமாக சார்ஜ் செய்தால் ஒரு நாளுக்கு தாக்குப்பிடிக்கும் என்கிறது மோட்டோரோலா. விரைவான சார்ஜ் ஏற்றும் வசதி இருப்பதால் வெறும் 15 நிமிடத்திலேயே 6 மணி நேரம் செயல்பட தேவையான சார்ஜ் ஏறிவிடும். Type-C  வசதியும் இதில் இருக்கிறது. ப்ளூடூத் 4.2 வசதி இருப்பதால் ஒரே நேரத்தில் நான்கு ஆடியோ டிவைஸ்களை இணைத்துக்கொள்ள முடியும். 

மோட்டோரோலா நிறுவனத்தை கூகுளிடமிருந்து லெனோவோ வாங்கிய பின்பு வடிவமைப்பில் பெரிய மாற்றங்களுடன் வெளியாகும் X சீரிஸ் மாடல் இது. கொடுக்கும் விலைக்கு சிறிய திரை, பழைய வடிவமைப்பு என சில குறைகள் இருக்கின்றன. வாட்டர்ஃப்ரூப் வசதி தேவைப்படுபவர்களுக்கு இந்த ஸ்மார்ட்போன் சிறந்த தேர்வாக இருக்கும். 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டர்னல் மெமரி மாடல் 22,999 ரூபாய்க்கு கிடைக்கிறது. 3 ஜிபி ரேம் மாடல் 20,999 ரூபாயாக விலை நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.



Trending Articles

Sponsored