160 அரசு சேவைகள்... ஒரே செயலி... டிஜிட்டல் இந்தியாவின் அடுத்த ஸ்டெப்! #UMANGSponsored”டிஜிட்டல் இந்தியா” கொள்கையை முழுவீச்சில் செயல்படுத்திவரும் மத்திய அரசு பெரும்பாலான சேவைகளை டிஜிட்டலில் கிடைக்கும் வகையில் மாற்றியமைத்து வருகிறது. பணப்பரிமாற்றத்துக்கான பீம் செயலி, டிஜிலாக்கர் போன்ற செயலிகளை அறிமுகப்படுத்தி வருகிறது இந்திய அரசு. அதன் தொடர்ச்சியாக கடந்த வாரம் 23-ம் தேதி வெளியிடப்பட்டிருக்கிறது "உமாங்". புது டெல்லியில் நடைபெற்ற ஐந்தாவது உலகளாவிய சைபர் ஸ்பேஸ் மாநாட்டில்  பிரதமர் நரேந்திர மோடி இந்தச் செயலியை அறிமுகப்படுத்தியிருக்கிறார். இந்தச் செயலியின் மூலமாக அரசு அளிக்கும் சேவைகளை எளிதில் அணுக முடியும்.

 
உமாங் செயலியின் வசதிகள்.

Sponsored


இந்தச் செயலி ஆண்டராய்டு, ஐ.ஒ.எஸ், விண்டோஸ் என அனைத்து மொபைல் இயங்குதளங்களிலும் கிடைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Sponsored


33 துறைகளின் கீழ் அரசு வழங்கும் 162 சேவைகளை இதன் மூலமாக பெற முடியும். இதில் மத்திய அரசு மட்டுமின்றி 4 மாநில அரசுகளின் துறைகளும் அடங்கும்.

மத்திய அரசின் முக்கிய சேவைகளான ஆதார், டிஜிலாக்கர், பாரத் பில் பேமென்ட் சிஸ்டம் போன்ற முக்கிய சேவைகளை அணுகும் வகையில் இந்தச் செயலி உருவாக்கப்பட்டிருக்கிறது.

ஆங்கிலம் உட்பட 12 இந்திய மொழிகளில் இந்தச் செயலியைப் பயன்படுத்த முடியும்.

பயனர்களின் தகவல்களைப் பாதுகாக்கும் வகையில் முழுவதுமாக என்கிரிப்ஷன் செய்யப்பட்டிருக்கிறது இந்தச் செயலி.

பாரத் பில் பேமென்ட் வசதியின் மூலமாக மின்சாரம், தண்ணீர், தொலைபேசி மற்றும் டி.டி.ஹெச் கட்டணம் போன்றவற்றை செலுத்தலாம்.

சி.பி.எஸ்.சி மாணவர்கள் இந்தச் செயலி மூலமாக தேர்வு நிலையங்கள், தேர்வு முடிவுகள் போன்றவற்றை அறிந்துகொள்ளலாம்.

"லைவ் சாட்" வசதி கொடுக்கப்பட்டிருக்கிறது. இதன்மூலமாக செயலியிலோ அல்லது சேவைகளிலோ எழும் சந்தேகங்களை தீர்த்துக்கொள்ள முடியும். இந்த வசதியை காலை 8 மணி முதல் இரவு 8 வரை பயன்படுத்திக்கொள்ளலாம்.

விவசாயம், கல்வி, மருத்துவம், போக்குவரத்து, எரிசக்தி, வீட்டுவசதி போன்ற பல்வேறு துறைகளின் சேவைகளைப் பெற முடியும்.
இந்தச் செயலி மூலமாக டிஜிலாக்கரில் இருக்கும் ஆதார் அட்டையைப் பார்க்கவும் டவுன்லோட் செய்யவும் இயலும். டிஜிலாக்கரில் வேறு ஏதேனும் சான்றிதழ்கள் இருந்தால் அவற்றையும் இதன் மூலமாக அணுகலாம். 

அரசு மருத்துவமனைகளில் மருத்துவரைப் பார்ப்பதற்கான அப்பாயின்மென்டை இந்தச் செயலி மூலம் பதிவு செய்துகொள்ளலாம். நாடு முழுவதும் இந்த வசதி கிடைப்பதாக மத்திய அரசு தெரிவித்தாலும் எய்ம்ஸ் மருத்துவமனைகள், புதுச்சேரியில் ஜிப்மர் போன்ற குறிப்பிட்ட மருத்துவமனைகள் மட்டும் தற்பொழுது பட்டியலில் இருக்கின்றன.

ஜி.எஸ்.டி தொடர்பான தகவல்களையும் பெற முடியும். பிஃஎப் தொடர்பான அனைத்து சேவைகளையும் பெற முடியும். 
பான்கார்டு தொடர்பான சேவைகளையும் இதன் மூலமாக பெறலாம்.

இதுதவிர பாஸ்போர்ட் சேவைகள், சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு, பயிர்க் காப்பீடு, வருமானவரித்துறை போன்ற பல சேவைகளையும் இதன் மூலமாக பெற முடியும்.


உமாங் செயலியை எப்படி பயன்படுத்துவது?

ஆண்டராய்டு, ஐ.ஒ.எஸ், விண்டோஸ் பயன்பாட்டாளர்கள் அவரவர்களின் ஆப் ஸ்டோர்களில் இருந்து இந்தச் செயலியை தரவிறக்கலாம். "UMANG" எனத் தேடவும்.


மொபைல் எண்ணை பதிவு செய்வதன் மூலமாக செயலியில் குறிப்பிட்ட எண்ணுக்கு வரும் OTP எண்ணை உள்ளிட வேண்டும்.

அடுத்ததாக வரும் MPIN என்பது தற்காலிக கடவுச்சொல். இதன் மூலமாக செயலியை மற்றவர்கள் அணுகுவது தவிர்க்கப்படும்.


பாதுகாப்புக் கேள்விகள் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட கணக்கு மறந்துபோனால் அதை  மீட்டெடுக்க உதவும்.


ஆதார் எண் மற்றும் பான் கார்ட் எண்ணை விருப்பமிருந்தால் அளிக்கலாம். கொடுத்தே ஆக வேண்டிய கட்டாயமில்லை. அதே வேளையில் குறிப்பிட்ட சில பரிவர்த்தனைகளுக்கு அவை கட்டாயம்.


உமாங் செயலியில் பதிவுசெய்யப்பட்ட கணக்கை நிரந்தரமாக நீக்குவதற்கும் வசதி இருக்கிறது. ஒரு சில வசதிகளைப் பெறுவதில் சிரமம் இருக்கிறது. அடுத்த அப்டேட்களில் குறைகள் சரி செய்யப்பட்டு, கூடுதலாக வசதிகளும் கொடுக்கப்படலாம்.

சேவைகளை மட்டுமின்றி பல பிரச்னைகளுக்கு மொபைல் மூலம் தீர்வு காணமுடியும். அவற்றையும், அரசு கவனத்தில்கொள்ள வேண்டும்.Trending Articles

Sponsored