ஹெச்.டி சேனல்கள் குறைந்த விலையில்... தமிழக அரசு கேபிள் செட் டாப் பாக்ஸ் வாங்குவது எப்படி?Sponsoredஇந்தியாவே டிஜிட்டல் இந்தியாவாக மாறிக்கொண்டிருக்கும் இந்த தருவாயில், நம் தமிழ்நாட்டில் டிஜிட்டலாக மாறியிருக்கிறது அரசு கேபிள் டிவி நிறுவனம். 'டைரக்ட் டு ஹோம்' (டி.டி.ஹச்) ன் வருகைக்குப் பிறகு அரசு கேபிள்கள் டிவி நிறுவனம் செயலிழந்து போனது என்றே சொல்லலாம். 2011-ல் முதல்வர் பதவியேற்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அரசு கேபிள் டிவி நிறுவனத்தை மீட்டெடுத்து 'தமிழ்நாடு அரசு கேபிள் டிவி கார்பரேஷன்' என்று பெயர் மாற்றினார். அதன் மூலம் மாதம் 70 ரூபாய்க்கு 100 சேனல்கள் வழங்கப்பட்டன. இந்தியாவிலேயே மிக குறைந்த விலைக்கு கேபிள் டிவி வழங்கும் மாநிலமாக மாறியது தமிழகம். 2011-ல் 5 லட்சம் வாடிக்கையாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்நிறுவனம், 2016 ல் தமிழகம் முழுவதும் 70.52 லட்சம் வாடிக்கையாளர்களைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு டிஜிட்டல் உரிமம் வழங்க வேண்டுமென்று மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தியதன் காரணமாக, மத்திய அரசின் தகவல் மற்றும் ஓளிபரப்புத்துறை அமைச்சகம் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனதிற்கு 17.4.2017 அன்று டிஜிட்டல் உரிமம் (DAS) வழங்கியது. இந்தியாவிலேயே மாநில அரசின் நிறுவனதிற்கு டிஜிட்டல் உரிமம் வழங்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறையாகும். அதன்படி, சென்னை நூங்கம்பாக்கத்திலுள்ள தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் கட்டுப்பாட்டு அறை MPEG2 தொழில்நூட்பத்திலிருந்து MPEG4 தொழில்நூட்பத்திற்கு 01.09.2017 அன்று மாற்றபட்டது.
அனலாக் முறையை பயன்படுத்தி வந்த தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் டிஜிட்டல் முறைக்கு மாறியது தனியார் டி.டி.ஹச் நிறுவனங்களுக்கு நெருக்கடி தான். 125 ரூபாய்க்கு 180 சேனல்களை வழங்குகிறது. தனியார் நிறுவனங்களுடன் ஓப்பிடும் போது இது மிக மிகக் குறைவு.

Sponsored


அரசு கேபிள் மூலம் நிகழ்ச்சிகளைப் பார்க்க, இலவச செட்டாப் பாக்ஸ் வழங்கப்படும் என்று அ.தி.மு.கவின் 2016ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. அதன்படி, தற்போது தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் இலவச செட்டாப் பாக்ஸ்களை வழங்கிவருகிறது. இது இலவசம் என்று கூறப்பட்டாலும், செயல்பாட்டுக் கட்டணமாக 200 ரூபாய் மட்டும் செலுத்தவேண்டும் என்று அரசுத் தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஆனால், பல இடங்களில் கேபிள் டி.வி ஆபரேட்டர்கள் 500 முதல் 700 ரூபாய் வசூலிப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.

Sponsored


இதுகுறித்து சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் எம்.மணிகண்டன், ”செயல்பாட்டுக்கட்டணமாக 200 ரூபாய் மட்டும் ஒரேயொரு தடவை செலுத்தினால் போதும். அதற்குமேல் கொடுக்கத் தேவையில்லை. அதன்பிறகு மாதாந்திர கட்டணம் மட்டுமே செலுத்தினால் போதும். இதையும் மீறி செட்டாப் பாக்ஸுக்காக அதிக தொகை வசூலித்தால், கேபிள் ஆபரேட்டர்களின் உரிமம் ரத்துசெய்யப்படும்” என்று எச்சரித்துள்ளார். கூடவே, ‘தமிழகத்தில் கேபிள் டிவி இணைப்புகள் டிஜிட்டல் மயமாக்கப்பட உள்ளதால் மொத்தம் 70.52 லட்சம் செட்டாப் பாக்ஸ்கள் வழங்கப்பட உள்ளன’ என்றும் தெரிவித்துள்ளார்.
ஆகவே பொதுமக்களே.. 200 ரூபாய்க்கு மேல கொடுக்காதீங்க.

செட்டாப்பாக்ஸ் பெறுவது எப்படி?
கேபிள் இணைப்புப் பெற்றிருக்கும் பொதுமக்கள், தங்களின் கேபிள் ஆபரேட்டர்களிடமிருந்து விண்ணப்பப் படிவத்தைப் பெற்று பூர்த்தி செய்து கொடுத்தால்போதும், செட்டாப் பாக்ஸ் தரப்படும்.


செட்டாப் பாக்ஸுக்கு என்று தனியாக பணம் கேட்டாலோ... மேலே குறிப்பிட்டுள்ள தொகைக்கும் மேலாக மாதாந்திர கட்டணத்தை வசூலித்தாலோ பொதுமக்கள் உடனடியாக புகார் அளிக்கலாம்.

புகார் எண் : 18004252911
அரசு கேபிள் டிவி அலுவலக எண் : 044-2843 2911Trending Articles

Sponsored