“சீன மொபைல் மட்டுமல்ல; சீன ஆப்களும் ஆபத்துதான்!” - இந்திய ராணுவத்தின் எச்சரிக்கைSponsoredஇந்திய மொபைல் சந்தையை சீன மொபைல் நிறுவனங்கள்தான் அதிகமாக ஆக்கிரமித்திருக்கின்றன. அதேபோல ஸ்மார்ட்போன்களின் ஆப் ஸ்டோர்களிலும் சீனாவின் ஆதிக்கம் சற்று அதிகம்தான். ஸ்மார்ட்போன்களில் இருக்கும் சீன ஆப்கள் எந்த வேலைக்காக இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்கிறதோ அதைத் தவிர்த்து வேறு சில வேலைகளையும் செய்வதில்தான் பிரச்னையே. அதன் காரணமாகத்தான் ராணுவ வீரர்கள் தங்களது ஸ்மார்ட்போன்களில் இருந்து 42 சீன ஆப்களை நீக்கிவிடுமாறு இந்திய ராணுவம் கேட்டுக்கொண்டுள்ளது.


சீன ஆப்களில் என்ன பிரச்னை?

Sponsored


இந்தியாவின் பாதுகாப்பு சம்பந்தமான தகவல்கள் சீன ஆப்களால் வெளியில் கசியலாம் என்பதுதான் இந்திய ராணுவம் ஆப்களை நீக்கச் சொல்வதற்கான காரணம். சீனாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் மொபைல் நிறுவனங்களின் சர்வர்கள், ஆப்களின் சர்வர்கள் போன்றவை சீனாவில்தான் இருக்கின்றன. ஒரு நபர் மொபைல்களைப் பயன்படுத்தும்பொழுதும், ஆப்களை பயன்படுத்தும்பொழுதும் சேகரிக்கப்படும் தரவுகள் அந்த நிறுவனத்தின் சர்வர்களில் சேகரிக்கப்படும்.

Sponsored


எடுத்துக்காட்டாக ஒரு போனில் கிளவுட் முறையில் டேட்டாக்களை சேகரிக்கும் வசதி இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். இப்பொழுது மொபைலில் பதிவாகும் ஒரு தகவல் பிரதி எடுக்கப்பட்டு சர்வரில் சேமிக்கப்படும். ஒரு தகவல் அழிந்தாலும் அதை மீண்டும் பெற முடியும்; எங்கிருந்து வேண்டுமானாலும் அவற்றை அணுக முடியும் போன்றவை கிளவுட் வசதியின் சிறப்புகள். ஒரு மொபைலில் இருந்து எந்தெந்த தகவல்களை கிளவுடில் சேமிக்கலாம் என்பதை அதைப் பயன்படுத்துபவர் முடிவு செய்ய முடியும். அதே வேளையில் மொபைலில் ஏற்படும் குறைகளைக் கண்டறியவும், வசதிகளை மேம்படுத்தவும் மொபைல் நிறுவனங்கள் ஒரு சில தகவல்களை சேகரிக்கும். ஒரு மொபைலை புதிதாக வாங்கி முதலில் பயன்படுத்த ஆரம்பிக்கும்பொழுதே அதற்கான அனுமதியை மொபைல் நிறுவனம் பெற்றுவிடும்.

ஆனால், பயன்படுத்துபவருக்குத் தெரியாமலேயே அவரின் தனிப்பட்ட தகவல்களை சேகரிக்கும் பொழுதுதான் பிரச்னை ஏற்படுகிறது. அதிலும் அந்தத் தகவல்கள் சீனாவில் இருக்கும் சர்வர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது என்பது அதைவிட அபாயம். மொபைல்களில் இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்கும் ஆப்கள் கூட சில சமயங்களில் இதுபோன்று அனுமதியின்றி தகவல்களைத் திருடுகின்றன. ஓர் ஆப் ஒருவரின் அனுமதியின்றி மைக்கை உபயோகப்படுத்தினால் அவரைச் சுற்றி நடக்கும் சத்தங்களை சேமித்துவிடும். கேமராவை இயக்கி ஒருவரை சுற்றி நடக்கும் விஷயங்களைப் பதிவுசெய்ய முடியும். அதிலும் சீனாவில் உருவாக்கப்பட்ட ஆப்களால் இந்திய ராணுவத்தினரை உளவுபார்க்கும் வாய்ப்பு அதிகமாக இருப்பதாலும், ரகசிய தகவல்கள் கசியலாம் என்பதாலும்தான் இந்திய ராணுவம் இந்த முடிவை எடுத்துள்ளது.

சில வாரங்களுக்கு முன்பு கூட யூசி பிரவுசர் இதுபோன்ற காரணங்களுக்காக கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து நீக்கப்பட்டது. குறைகள் சரி செய்யப்பட்ட பின்னர் சேர்க்கப்பட்டது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர்கூட ஷியோமி மொபைல்கள் ரகசியத் தகவல்களை சீனாவில் இருக்கும் சர்வர்களுக்கு அனுப்புவதாக கூறி ராணுவ அதிகாரிகள் அந்த நிறுவனத்தின் மொபைல்களைப் பயன்படுத்துவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது.

எதற்கெல்லாம் தடை!

அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும் 42 ஆப்களில் பெரும்பாலனவற்றை அதிகம் பேர் பயன்படுத்துகிறார்கள். ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களில் இருக்கும் இந்த ஆப்களை பயன்படுத்தினால் அவற்றை உடனடியாக அன்இன்ஸ்டால் செய்து ஸ்மார்ட்போனை ஃபார்மட் செய்து விடும்படி இந்திய ராணுவம் கேட்டுக்கொண்டுள்ளது. ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் பெரும்பாலோனோர் பயன்படுத்தும் TrueCaller, Share It, யூசி பிரவுசர் போன்ற ஆப்களும் இந்தப் பட்டியலில் இருக்கின்றன. 

ராணுவ வீரர்கள் தங்களது ஸ்மார்ட்போன்களில் இருந்து 42 சீன ஆப்களை நீக்கிவிடுமாறு இந்திய ராணுவம் கேட்டுக்கொண்டுள்ளது.Trending Articles

Sponsored