17 நாள்கள் ஸ்டாண்ட்பை பேட்டரி... இன்னும் இரண்டு மொபைலை களமிறக்கிய ஜியோமி! #Redmi5



  

ரெட்மி 5 மற்றும் ரெட்மி 5 பிளஸ் என்ற இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களை சீனாவில் அறிமுகப்படுத்தியிருக்கிறது ஜியோமி. ரெட்மி நோட் 4 ன் தொடர்ச்சியாக ரெட்மி நோட் 5 என்ற மொபைல் வெளியாகலாம் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில் இந்த மொபைல்கள் வெளியாகியிருக்கின்றன. இரண்டு மொபைல்களுமே 18:9 டிஸ்ப்ளே வசதியைக் கொண்டிருக்கின்றன. எனவே, வழக்கமான ரெட்மி மொபைல் போல இல்லாமல் ஒரு புது தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

Sponsored


ரெட்மி 5 வசதிகள்

Sponsored


Sponsored


5.7 இன்ச்  18:9 1440 × 720 டிஸ்ப்ளே
1.8 GHz குவால்கோம் ஸ்னாப்ட்ராகன் 450 ஆக்டாகோர் ப்ராசஸர்.
2/3  ஜிபி ரேம் மற்றும் 16/32 ஜிபி இன்டர்னல் மெமரி.
12 மெகாபிக்ஸல் பின்புற கேமரா.
5 மெகாபிக்ஸல் முன்புற கேமரா.
3300mAh திறன் பேட்டரி .
ஆண்ட்ராய்டு 7.1.2 நெளகட் இயங்குதளம். 

குறைந்த விலையில் 18:9 வசதியைக் கொண்ட ஜியோமியின் முதல் மொபைல் இது. மொபைல் முழுவதும் அலுமினியம் உலோகத்தால் வடிவமைக்கப்படிருக்கிறது. இதன் டிஸ்ப்ளே மற்ற 18:9 டிஸ்ப்ளேக்களைவிட சிறப்பான காட்சிகளை அளிக்கும். இந்த மொபைல்களில் டூயல் கேமரா அமைப்பு இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது ஆனால் 12 மெகாபிக்ஸல் கேமரா மட்டுமே இருக்கிறது. முன்புறமாக 5 மெகாபிக்ஸல் கேமராவுக்கு ஃப்ளாஷ் வசதி தரப்பட்டுள்ளது. 3300mAh பேட்டரி திறன் கொண்டிருக்கும் இதன் எடை 157 கிராம். 7.7 மி.மீ மட்டுமே தடிமன் கொண்டது என்பதால், கையில் வைத்துப் பயன்படுத்த எளிதாக இருக்கும். 2  ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி இன்டர்னல் மெமரி கொண்ட மாடல் 799 யுவான்களாக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவில் விற்பனைக்கு வரும் பொழுது மதிப்பில் 8000 ரூபாயாக விலை நிர்ணயம் செய்யப்படலாம்.

ரெட்மி 5 பிளஸ் வசதிகள்

5.99 இன்ச்  18:9 2160 × 1080 டிஸ்ப்ளே
2.0 GHz குவால்கோம் ஸ்னாப்ட்ராகன் 625 ஆக்டாகோர் ப்ராசஸர்.
3/4  ஜிபி ரேம் மற்றும் 32/64 ஜிபி இன்டர்னல் மெமரி.
12 மெகாபிக்ஸல் பின்புற கேமரா.
5 மெகாபிக்ஸல் முன்புற கேமரா.
4000mAh திறன் பேட்டரி.
ஆண்ட்ராய்டு 7.1.2 நெளகட் இயங்குதளம். 

முந்தைய மாடலைவிட சற்று பெரிய டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கிறது ரெட்மி 5 பிளஸ். ரெட்மி நோட் 4 இல் இருக்கும் அதே ஸ்னாப்ட்ராகன் 625 ப்ராசஸர் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் இருக்கும் 4000mAh பேட்டரிக்கு 17 நாள்கள் ஸ்டாண்ட்பை காலம் என்கிறது ஜியோமி. பேட்டரி அதிகம் என்பதால், இதன் எடையும் தடிமனும் சற்று அதிகம். 8.05 மி.மீ தடிமனும் 180 கிராம் எடையும் கொண்டிருக்கிறது ரெட்மி 5 பிளஸ். ரிமோட் வசதிக்காக IR சென்சார் இரண்டு மொபைல்களிலும் தரப்பட்டிருக்கிறது. பெரும்பாலான ஜியோமி ஸ்மார்ட்போன்களில் நேவிகேஷன் பட்டன்கள் திரைக்கு வெளியே இருக்கும். இது 18:9 டிஸ்ப்ளே என்பதால் மூன்று பட்டன்களும் திரைக்கு உள்ளே கொடுக்கப்பட்டிருக்கின்றன. 3  ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இன்டர்னல் மெமரி மாடல் இந்திய மதிப்பில் 9700 ரூபாயாக விலை நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. Type-C வசதி, ஃபாஸ்ட் சார்ஜிங் போன்ற வசதிகள் இதில் மிஸ்ஸிங். ஆனால், விலை குறைவாக இருப்பதால், இது பலரின் தேர்வாக இருக்கும். மிக விரைவில் இந்தியாவில் இந்த இரண்டு மொபைல்களும் அறிமுகப்படுத்தப்படலாம்.



Trending Articles

Sponsored