காதலர்களுக்கு இடையே துப்பாக்கிச் சண்டை... போலீஸை அழைத்த கேட்ஜெட்! #GadgetTippedCrimes அத்தியாயம் 3



அமெரிக்காவின் முக்கியமான மாகாணம் நியூ மெக்ஸிகோ. அங்கிருக்கும் அழகிய கிராமம் தான் திஜெரஸ் (Tijeras). மொத்தமே 600 பேர் வாழும் கிராமம். அந்த ஊரைச் சேர்ந்தவர் பேரோஸ் (Eduardo Barros). அவரும் அவரது காதலியும் அந்த ஊரில்தான் வாழ்ந்துவந்தார்கள். பேரோஸின் காதலிக்கு ஒரு மகளும் உண்டு.

Sponsored


அது ஒரு மாலைப்பொழுது. பேரோஸின் வீட்டிலிருந்த பால்கனியில் இருவரும் அமர்ந்திருந்தார்கள். விடுமுறை நாள்; மாலை நேரம்; பால்கனியில் காபி என எல்லாமே ரொமான்டிக் தான். எல்லாம் சரியாக போய்க்கொண்டிருந்தது. அப்போது பேரோஸின் கேர்ள் ஃப்ரெண்டின் மொபைலுக்கு ஒரு மெஸெஜ் வந்தது. அதை பேரோஸ் பார்க்க, அவரது முகம் மாறியது. தனது கேர்ள் ஃப்ரெண்டு தன்னை ஏமாற்றுவதாக நினைத்தார் பேரோஸ். அவர் வேறொருவரையும் காதலிப்பதாக அவருக்கு சந்தேகம். காதலியிடம் அதுபற்றி பேரோஸ் கேட்க, “அப்படிலாம் ஒண்ணுமில்லை” என்றார் காதலி. பேரோஸுக்கு நம்பிக்கை வரவில்லை. விவாதம் முற்றியது. பேரோஸுக்கு கோவம் தலைக்கேறியது. 

Sponsored


ஒரு கட்டத்தில் காதலி எழுந்து வீட்டுக்குள் செல்ல, தன்னை மதிக்காமல் அவர் போவதாக பேரோஸ் நினைத்தார். அவரும் எழுந்து உள்ளே வந்து, காதலியைத் தள்ளிவிட்டார். வீட்டுக்குள் குழந்தைத் தூங்கிக்கொண்டிருந்தது. ”அவ எழுந்திடப் போறா” என காதலி சொல்ல, பேரோஸுக்கு இன்னமும் கோவம் அதிகமானது. தன் காதலியை அடிக்கத் தொடங்கினார்.

Sponsored


பேரோஸ் தனது பையிலிருந்து ஒரு துப்பாக்கியை எடுத்தார். அது 9 எம்.எம். துப்பாக்கி. பேரோஸின் மீது ஏற்கெனவே பல குற்ற வழக்குகள் உண்டு. அவர் கையில் துப்பாக்கி கிடைத்தால், அந்தக் கோபத்தில் சுட்டுவிடவும் தயங்க மாட்டார் என்பது அவர் கேர்ள் ஃப்ரெண்டுக்கு நன்றாகத் தெரியும். தன்னைக் காப்பாற்றிக்கொள்ள இன்னொரு அறைக்கு ஓடினார் காதலி. துரத்திச் சென்ற பேரோஸ் அவரை துப்பாக்கியால் முகத்தில் அடிக்க, அவர் தரையில் விழுந்தார். அந்த நேரம் பார்த்து காதலியின் மொபைலுக்கு அழைப்பொன்று வந்தது. காலர் ஐடியில் ’போலீஸ்’ பெயர் வர, பேரோஸுக்கு டென்ஷன் எகிறியது. மொபைலைத் தூக்கித் தரையில் எறிந்துவிட்டு, தனது காலால் பத்து முறைக்கும் அதிகமாக தன் காதலியின் முகத்தில் எட்டி உதைத்தார். சிறிது நேரத்தில் போலீஸ், சம்பவ இடத்துக்கு வந்துவிட்டார்கள். பேரோஸ் தனது அறைக்குச் சென்று தாழிட்டுக்கொள்ள, காதலியையும் அவர் குழந்தையையும் மீட்டிருக்கிறது காவல்துறை. பின், பேரோஸையும் கைதுசெய்துவிட்டார்கள்.

911க்கு யார் அழைத்தது, எப்படி போலீஸுக்கு தகவல் போனது என்பது மட்டும் விடைத் தெரியா கேள்வியாக இருந்தது. குற்றவாளியின்  வீட்டில் வாய்ஸ் அஸிஸ்டென்ட் ஆன அமேசான் எக்கோ இன்ஸ்டால் செய்யப்பட்டிருந்தது. வீட்டு லேண்ட்லைனும் எக்கோவுடன் தொடர்பில் இருந்தன. தன்னைக் காப்பாற்றிக்கொள்ள “Alexa call911”  என்று அந்தப் பெண் அலறியிருக்கிறார். அந்தக் கட்டளையை அலெக்ஸா தொலைபேசிக்கு கடத்தி 911ஐ அழைத்திருக்கிறது. அதன்பின், 911 பாதிக்கப்பட்டப் பெண்ணின் மொபைலுக்கு அழைத்திருக்கிறார்கள். அதைப் பார்த்துதான் பேரோஸ் டென்ஷன் ஆகியிருக்கிறான்.

அத்தியாம் 1                                       அத்தியாயம் 2

பேரோஸ் தனது காதலியை மிரட்டியது, அடித்ததால் அந்தப் பெண் அலறியதைக் கேட்டது என அத்தனைக்கும் போலீஸே சாட்சியாக இருக்கிறது. இத்தனைக்கும் வீட்டிலிருந்த அலெக்ஸா காரணமானது. 

கேட்ஜெட்களும், செயற்கை நுண்ணறிவுப் பொருள்களும் எதிர்பாராத விதங்களிலும் நமக்கு பயனுள்ளதாக இருக்கக்கூடும் என்பதற்கு இந்தச் சம்பவமும் ஒரு எடுத்துக்காட்டுதான். 



Trending Articles

Sponsored