பட்ஜெட்டுக்குள் முடியும் பக்கா ஸ்பீக்கர்ஸ்... வசதிகளும் விலையும்! #HomeStudioSponsoredஎன்னதான் ஆயிரம் ரூபாய் செலவு பண்ணி ரெண்டு காதையும் அடச்சுவச்சு ஹெட்செட்ல பாட்டு கேட்டாலும், நல்ல ஹோம்தியேட்டர்ல பாட்டு கேக்குற அனுபவமே தனிதான். ஆனா அது எல்லோருக்கும் சாத்தியமாகுறதில்லை. சொந்த வீடா இருந்தா பரவாயில்லை. ஒரு குத்துப்பாட்ட பேஸ் அதிகமா வச்சு கூட கேக்கலாம். ஆனா வாடகை வீட்டுல இருக்குற பேச்சிலர்ஸ் எல்லாரும் பாவம் பாஸ். அவங்களால ஒரு பாட்டைக் கூட நிம்மதியா கேக்க முடியாது. அந்தப் பாட்டைக் கூட பக்கத்து ரூம்ல இருக்குறவங்களுக்கு தொல்லைத் தராம  கேக்கணும். இதுல அடிக்கடி வீடு வேற மாற வேண்டியிருக்கும், ரூம்ல இடம் கொஞ்சம்தான் இருக்கும். இந்த நிலைமையில எப்படி 5.1 ஸ்பீக்கர் எதிர்பாக்குறது கஷ்டம்.

நல்ல எஃபெக்டுல பாட்டும் கேக்கணும், ஆனா சின்னதா இருந்தா போதும் நினைக்குறவங்களுக்கு நல்ல சாய்ஸ் 2.1 சேனல் ஸ்பீக்கர் சிஸ்டம்தான். பெரிய ஹோம்தியேட்டரோடு ஒப்பிடும்போது விலை குறைவு, கொஞ்சம் இடமிருந்தாலேபோதும், எங்கு வேண்டுமானாலும் எளிதில் எடுத்துச் செல்லலாம் என்பது இதன் சிறப்புகள். சந்தையில் கிடைக்கக் கூடிய சிறந்த 2.1 சேனல் ஹோம்தியேட்டர்களில் சில..

Creative SBS A-120

Sponsored


Sponsored


கொஞ்சமா சவுண்ட் இருந்தாலும் அது குவாலிட்டியா வேணும்னு நினைக்கிறவங்க இதைத் தேர்வு செய்யலாம். Woofer தவிர்த்து இருக்குற இரண்டு ஸ்பீக்கர்களின் அவுட்புட் 2.5wதான். கேபிளோடு இணைக்கப்படிருக்கும் ஒரு கண்ட்ரோல் டிவைஸ் மூலமாக ஒலியை கட்டுப்படுத்தலாம். விலை 1,599 ரூபாய்.

iBall Tarang

வெளிப்புறத்தில் மரத்தாலான டிசைன் கொடுக்கப்பட்டு அழகாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. முன்புறத்தில் மூன்று கண்ட்ரோல்கள் இருக்கின்றன. இதனுடன் கொடுக்கப்பட்டிருக்கும் இரண்டு ஸ்பீக்கர்களையும் கேபிள் மூலமாக Woofer உடன் இணைக்க முடியும். டிவி, கணினி, மொபைல் என அனைத்திலும் பயன்படுத்த முடியும். ஆனால் Usb, மெமரி கார்டு ஆகியவற்றை பயன்படுத்த முடியாது என்பது இதன் குறை. அதிகபட்சமாக இது 40 W பவரை வெளிப்படுத்தும். விலை 2,399 ரூபாய்.

F&D A110

மிகக்குறைந்த அளவு மின்சக்தியை பயன்படுத்துமாறு வடிவமைக்கப்பட்டிருக்கிறது இந்த மாடல். வால்யூம் மற்றும் பேஸ் ஆகியவற்றிற்கான கண்ட்ரோல்கள் மெயின் ஸ்பீக்கர்கரின் வலது பக்கத்தில் இருக்கிறது. மெயின் ஸ்பீக்கர்கருக்கு மட்டுமின்றி மற்ற இரண்டு ஸ்பீக்கர்கர்களிலும் இருக்கும் மெட்டல் டிசைன் இதற்கு சிறப்பான தோற்றத்தை அளிக்கிறது. Usb மற்றும் மெமரி கார்டை பயன்படுத்தும் வசதி இதிலும் கிடையாது. 35 W பவரை வெளிப்படுத்தும் இதன் விலை 2,090 ரூபாய்.

Philips MMS4545B/94

மற்ற ஸ்பீக்கர்கர்களுடன் ஒப்பிடும் பொழுது இதில் வசதிகள் அதிகம். கொடுக்கும் விலைக்கு ஏற்ற வசதிகளை தருகிறது. ப்ளூடூத் வசதி இருப்பதால் மொபைல் போன்ற டிவைஸ்களை இணைப்பது சுலபம். Usb, மெமரி கார்டு ஆகியவற்றையும் பயன்படுத்தலாம். ரிமோட் கண்ட்ரோல் வசதியும் இருக்கிறது. 40W பவரை  வெளிப்படுத்தும் இதன் விலை 3,099 ரூபாய்.

Panasonic SC-HT18

FM ரேடியோ ரசிகர்களுக்கு ஏற்ற ஸ்பீக்கர் சிஸ்டம் இது. எல்லா ஸ்பீக்கர்  மாடல்களிலும் FM ஆப்ஷன் இருந்தாலும் அது சரியாக வேலை செய்யாது. ஆனால் இதில் ரேடியோவுக்காக தனி ஆண்டெனா இருப்பதால் எந்தப் பிரச்னையும் இருக்காது. USB வசதி இருப்பதால் அதை பென்டிரைவ் மூலமாகவும் பாடல்களைக் கேட்கலாம். 45 W பவரை இது வெளிப்படுத்தும்.  இந்த ஸ்பீக்கரை  சுவரில் பொருத்திக்கொள்ள முடியும். ரிமோட் மூலமாகவும் இதை கண்ட்ரோல் செய்யும் வசதி இருக்கிறது. விலை 3,350 ரூபாய்.Trending Articles

Sponsored