வாட்ஸ்அப், ஃபேஸ்புக் போர் அடிக்குதா... இந்த இணையதளங்களுக்கு ஒரு விசிட் அடிக்கலாமே!Sponsoredன்னதான் ஃபேஸ்புக், வாட்ஸ்அப் பெரும்பாலோனோரின் நேரத்தை ஆக்கிரமித்து இருந்தாலும் அதையும் தாண்டி நாம் பல நேரங்களில் வெறுமையாக உணருவது உண்டு. சில சமயங்களில் என்ன செய்வதென்றே தெரியாத அளவுக்கு வெட்டியாக இருப்போம். இந்த முகநூல், வாட்ஸ்அப், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் இவையெல்லாம் இல்லாமல் எப்படி வெட்டியாக நேரத்தைக் கழிப்பது என்று யோசித்துக் கொண்டிருப்பவரா நீங்கள்? எனில், இப்போது சொல்லப்போகும் இணையங்கள் எல்லாம் உங்களுக்குதான்.

Touch pianist :

நீங்கள் இசைப்பிரியரா ? எனில் நீங்களே உங்களுக்குப் பிடித்தமான உங்களின் சொந்த இசையை இந்த இணையதளத்தின் மூலம் உருவாக்கி, நீங்களும் ஒரு பியானிஸ்ட் ஆகலாம். இதுக்கு நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் வெறும் key board key யை அழுத்துவது மட்டுமே !

Sponsored


Sponsored


Solve the riddle :

பெயரிலேயே புரிந்திருக்கும். சின்ன வயதில் விளையாடிய விடுகதை விளையாட்டின் technical வடிவம்தான் இது. மொத்தம் 81 நிலைகள் இருக்கும். அடுத்த நிலைக்குச் செல்லச்செல்ல விடுகதை கொஞ்சம் கடினமாக இருக்கும் பாஸ். ஆனால், நல்ல பொழுதுபோக்காக இருக்கும்.

Funny or die :

மேலே சொன்னவை எல்லாம் வேணாம்; சிரிச்சு ரிலாக்ஸா இருக்குற மாறி ஏதாவது வேண்டும் என்று யோசித்தால், funny or die என்ற இணையதளம் பக்கம் போய் பாருங்க. புதுப்புது காமெடி போட்டோக்களும், வீடியோக்களும், GIFகளும் இங்கு களைகட்டும். கொஞ்சம் சிரிங்க பாஸ் !  

Is it normal ?

எல்லோருக்குள்ளும் நிறைய கேள்விகள் இருக்கும். நிறைய கேள்விகளுக்கான உங்களின் தனிப்பட்ட கருத்துகளும் இருக்கும். அதையெல்லாம் சொன்னா யாரும் கேட்க மாட்டார்கள் என்று இனியும் யோசிக்க வேண்டாம். இங்கு யார் வேண்டுமானாலும், என்ன கேள்வி வேண்டுமானாலும் கேட்கலாம். ஏன் உங்களின் பதில்களையும் பதிவு செய்யலாம். இது எதுவுமே வேண்டாம் என்றால் அங்கே என்ன நடக்கிறது என்பதை வேடிக்கை பார்த்தும் பொழுதைக் கழிக்கலாம்.

Oddee  :

நீங்கள் வெட்டியாக செலவிட விரும்பும் நேரத்தையும், உங்களைச் சுற்றி நடக்கும் வித்தியாசமான தகவல்களை உங்கள் போனிலே தருவதன் மூலம் பயனுள்ளதாக மாற்றுகிறது இந்த இணையதளம். இதில் பயனுள்ள தகவல்கள் என்பது உங்களுக்கு மகிழ்ச்சி தருவதாகவும் இருக்கலாம்; மிக பயங்கரமானதாகவும் இருக்கலாம்; சில சமயங்களில் மொக்கையான ஒன்றாகக்கூட இருக்கலாம்.

The faces of facebook :

நம்மில் பலருக்கு முகநூலில் மற்றவரின் profile photo பார்ப்பதுதான் மிகப்பெரிய பொழுதுபோக்காக இருக்கும். அதற்குதான் இந்த சிம்பிள் the faces of facebook.  அதாவது கிட்டத்தட்ட 1.2 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் முகநூல் கணக்கு வைத்து இருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொருவரின் profile photoவையும்  இங்கு ஒரே இடத்திலே பார்த்துவிடலாம்

This is sand :                                                                                                 

Sand art பலருக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. இதை உங்களின் திரையிலே பண்ண முடியும் என்றால் ஆச்சர்யமாக இருக்கிறதா ? இதோ அதற்கான வழிமுறைகள் :

முதலில் உங்களுக்குப் பிடித்த டிசைன் ஒன்றை வரைந்துகொள்ளுங்கள்

பின்பு c என்னும் பட்டனை அழுத்தி உங்களுக்கு பிடித்த நிறத்தை உங்கள் டிசைனுக்கு கொடுங்கள்

கடைசியாக மணலால் நிரப்ப வேண்டும் என்று விரும்பும் இடத்தை கிளிக் செய்தால் போதும் நீங்களும் sand artist தான் !

college humor :

என்ன தான் கல்லூரிப் பருவத்தை விட்டு வெளியே வந்து இருந்தாலும் சிலருக்கு அந்த கல்லூரி நினைவுகள் மனதை விட்டு அகலாது. இந்த இணையதளம் தரும் வீடியோக்களும், போட்டோக்களும் உங்களுக்கு உங்கள் கல்லூரி நாளை நினைவு படுத்துவதோடு சிரிப்புக்கும் உத்தரவாதம் தருகிறது.Trending Articles

Sponsored