குறைந்த விலை...அதிக டேட்டா... ஈர்க்கும் ஜியோவின் புதிய பிளான்கள்! #JioPlans



Sponsored



தொலைத்தொடர்பு சந்தையில் நுழைந்தது முதலே பல ஆச்சர்ய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது ஜியோ. கடந்த 2016-ம் ஆண்டு சந்தையில் நுழைந்த ஜியோ தனது போட்டியாளர்களை தோற்கடிக்க ஏவிய அஸ்திரம் 'இலவசம்'. தொடக்கத்தில் 4G டேட்டா மற்றும் கால்கள் என அனைத்துச் சேவைகளையும் இலவசமாகவே கொடுத்தது. இதன் காரணமாக மிக குறுகிய காலத்திலேயே ஜியோவால் 12 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களைப் பெற முடிந்தது. 

ஜியோவின் தாக்கம் ஒட்டுமொத்த மொபைல் சந்தையிலும் பாதிப்பை ஏற்படுத்த மற்ற நிறுவனங்கள் டேட்டா பிளான்களின் விலையைக் குறைத்தன. சில மாதங்களுக்குப் பிறகு ஜியோவும் படிப்படியாக கட்டண சேவைக்கு மாறியது, பிளான்களின் வேலிடிட்டி நாள்கள் குறைக்கப்பட்டன. அதன் பிறகு குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறை தனது பிளான்களில் மாற்றம் செய்து வருகிறது ஜியோ. கடந்த முறை பிளான்களில் மட்டுமன்றி வேறொரு பெரிய மாற்றத்தையும் செய்திருந்தது. அதிவேக டேட்டா முடிந்தபின் உபயோகிக்கும் இன்டர்நெட்டின் வேகத்தை 128kbps லிருந்து  64kbps ஆக குறைந்திருந்தது. 

Sponsored


இந்த வருடத்தில் முதல் முறையாக தனது பிளான்களை மீண்டும் மாற்றியமைத்திருக்கிறது. Jio Happy New Year 2018 Offer எனப் பெயரிடப்பட்டிருக்கும் இதன் மூலமாக முன்பிருந்த பிளான்களின்  விலை மற்றும் டேட்டாவின் அளவில் மாற்றம் செய்திருக்கிறது ஜியோ.

Sponsored


1 ஜி.பி பிளான்கள்

இந்த பிளான்களின் விலை முன்பு இருந்ததிலிருந்து 50 ரூபாய் விலை குறைக்கப்பட்டிக்கிறது. 
ரூ.149 பிளான்
இந்த பிளான் இதற்கு முன்பு 199 ரூபாய். அது தற்பொழுது 149 ரூபாய்க்குக் கிடைக்கிறது. இதன் மூலமாக ஒரு நாளைக்கு 1 ஜி.பி அதிவேக டேட்டாவை பெற முடியும். இதன் வேலிடிட்டி 28 நாள்கள்.

ரூ.349 பிளான்
இந்த பிளான் மூலமாக 70 நாள்களுக்கு தினமும் 1 ஜி.பி அதிவேக டேட்டாவைப் பெற முடியும். இதன் முந்தைய விலை ரூ.399

ரூ. 399 பிளான்
இதற்கு முன்பு 459 ரூபாயாக இருந்த இந்த பிளான் தற்பொழுது 399 ரூபாய்க்குக் கிடைக்கும். இதன் மூலம் தினமும் 1 ஜி.பி அதிவேக டேட்டாவை 84 நாள்களுக்குப் பெறலாம்.

ரூ.449 பிளான்

இந்த பிளான் மூலமாக தினமும் 1 ஜி.பி அதிவேக டேட்டாவை 91 நாள்களுக்குப் பெற முடியும். இதற்கு முன்பு 499 ரூபாயாக இருந்த இதை 449 ரூபாயாக குறைத்திருக்கிறது ஜியோ. 

1.5 ஜி.பி பிளான்கள்
இந்த பிளான்களின் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அதற்குப் பதிலாக தினமும் வழங்கும் டேட்டாவின் அளவை அதிகப்படுத்தியிருக்கிறது ஜியோ.

ரூ.198 பிளான்
28 நாள்கள் வேலிடிட்டியைக் கொண்ட இதன் மூலமாக ஒரு நாளைக்கு 1.5 ஜி.பி அதிவேக டேட்டாவைப் பெற முடியும். இந்த பிளானின் மூலமாக மொத்தமாக 42 ஜிபி டேட்டாவைப் பெற முடியும்.

ரூ.398 பிளான்
70 நாள்கள் வேலிடிட்டியைக் கொண்ட இதன் மூலமாக ஒரு நாளைக்கு 1.5 ஜி.பி அதிவேக டேட்டாவைப் பெற முடியும். இந்த பிளானின் மூலமாக மொத்தமாக 105 ஜிபி டேட்டாவைப் பெற முடியும்.

ரூ. 448 பிளான்

84 நாள்கள் வேலிடிட்டியைக் கொண்ட இதன் மூலமாக ஒரு நாளைக்கு 1.5 ஜி.பி அதிவேக டேட்டாவைப் பெற முடியும். இந்த பிளானின் மூலமாக மொத்தமாக 126 ஜிபி டேட்டாவைப் பெற முடியும்.

ரூ.498 பிளான்

91 நாள்கள் வேலிடிட்டியைக் கொண்ட இதன் மூலமாக ஒரு நாளைக்கு 1.5 ஜி.பி அதிவேக டேட்டாவைப் பெற முடியும். இந்த பிளானின் மூலமாக மொத்தமாக 126 ஜிபி டேட்டாவைப் பெற முடியும்.

கடந்த முறை பிளான்கள் மாற்றப்பட்டபோது பிளான்களின் வேலிடிட்டியைக் குறைத்திருந்தது ஜியோ. அதற்கு மாறாக இந்த முறை அதிக டேட்டாவை அளித்து தனது வாடிக்கையாளர்களை ஆச்சர்யப்படவைத்திருக்கிறது  ஜியோ.



Trending Articles

Sponsored