நான்கு கேமரா... ஒரு நாள் பேட்டரி... பட்ஜெட் விலை... ஹானர் ஸ்மார்ட்போன் எப்படி? #Honor9Lite



2017-ல் உலகின் அதிகம் விற்ற ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் வரிசையில் மூன்றாம் இடத்தைப் பிடித்திருந்தது ஹூவாய். சீனாவிலும் உலக அளவிலும் மொபைல் சந்தையை தன் கையில் வைத்திருக்கும் ஹூவாய் இன்னும் கைப்பற்ற வேண்டியது இந்தியச் சந்தையை மட்டும்தான். கடந்த சில வருடங்களுக்கு முன்பு இந்தியாவில் நுழைந்த ஜியோமி, ஓப்போ, விவோ போன்ற மற்ற சீன நிறுவனங்கள் சந்தையில் கலக்கிக்கொண்டிருக்க ஹூவாய் மட்டும் சும்மா இருக்குமா? இந்த வருடத்தில் அதிக ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்ய முடிவெடுத்திருக்கும் என்பதைத் தெரிவிக்கும் விதமாக வருட தொடக்கத்திலேயே அதிரடியாக களத்தில் இறங்கிவிட்டது.

Sponsored


கடந்த வருடம் டிசம்பரில் Huawei Honor 9 Lite என்ற ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகப்படுத்தியிருந்தது. பொதுவாக மற்ற சீன நிறுவனங்கள் புதிய மொபைலை முதலில் சீனாவில் அறிமுகப்படுத்திய பிறகு இரண்டு மூன்று மாதங்கள் கழித்துதான் இங்கே அறிமுகப்படுத்தும். ஆனால், ஹூவாய் தாமதப்படுத்தாமல் ஒரு மாதத்துக்குள்ளாகவே ஹானர் 9 லைட் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியிருக்கிறது. 

Sponsored


ஹானர் 9 லைட்  வசதிகள்

Sponsored


இப்பொழுது ஸ்மார்ட்போனில் ட்ரென்ட்டாக இருப்பது 18:9 டிஸ்ப்ளே தான். இருபதாயிரம் ரூபாய்க்கு கீழே இந்த வசதியைக் கொண்ட இரண்டு ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது ஹூவாய். இது மூன்றாவது மொபைல். 5.65 இன்ச் IPS 1080 x 2160 டிஸ்ப்ளே 428 ppiயைக் கொண்டிருப்பதால் காட்சிகளின் தரத்துக்கு குறைவிருக்காது. ஹானர் 9i ஸ்மார்ட்போனில் இருக்கும் அதே 1.7GHz ஹைசிலிக்கான் கிரின்  659 ஆக்டாகோர் ப்ராசஸர் இதில் இருக்கிறது. இதில் கேமராவுக்கும் குறைவில்லை 13+2 மெகாபிக்சல் டூயல் பின்புற கேமரா மற்றும் 13+2 மெகாபிக்சல் டூயல் முன்புற கேமரா என இந்த ஸ்மார்ட்போனில் இருப்பது மொத்தம் நான்கு கேமராக்கள் செல்ஃபி ரசிகர்களுக்கு ஏற்ற வசதி இது அவர்களுக்கு இது அதிகமாக தேவைப்படலாம். புகைப்படம் எடுப்பதற்கு பல்வேறு விதமான மோட்கள் இருக்கின்றன.

ஹானர் 9 லைட்டில் அனைவரையும் கவர்ந்திழுக்கும் மற்றொரு விஷயம் இதன் பின்புறம். இந்த மொபைலின் பின்புறமும் கண்ணாடிபோல் இருக்கிறது எந்தவித கோடுகளும் இல்லாமல் பின்புறம் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிக்கிறது. இதிலிருக்கும் ஃபிங்கர்பிரின்ட் சென்சார் 0.25 வினாடிகளில் மொபைலை அன்லாக் செய்யும் அளவுக்கு வேகமாக செயல்படும் என்கிறது ஹூவாய். 3ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இன்டர்னல் மெமரி மற்றும் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டர்னல் மெமரி என இரண்டு வகைகளில் விற்பனைக்கு கிடைக்கிறது. ஹைபிரிட் சிம் ஸ்லாட் இருப்பதால், அதன் மூலமாக 256 ஜிபி வரை மெமரிகார்டை பயன்படுத்த முடியும்.

ஹூவாய் நிறுவனத்தின் கஸ்டமைஸ்டு இயங்குதளமான EMUI ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளத்தில் இயங்குகிறது ஹானர் 9 லைட். 3000 mAh பேட்டரிதான் கொடுக்கப்பட்டிக்கிறது என்றாலும் இதுவே ஒரு நாளைக்கு தாக்குப்பிடிக்கும் என்று உத்திரவாதம் அளிக்கிறது. மொபைலின் மொத்த எடை 149 கிராம் என்பதால், கைகளில் வைத்துப் பயன்படுத்த எளிதாக இருக்கும். இதற்கு முன்னர் இந்த செக்மென்டில் அறிமுகப்படுத்திய மொபைல்களைப் போலவே இதிலும் Type-C வசதி கிடையாது அதை மட்டும் இந்த ஸ்மார்ட்போனில் கொடுத்திருந்தால் மற்ற நிறுவனங்கள் ஹூவாய்யைப் பார்த்து மிரண்டு போயிருக்கும். இந்த ஒரு வசதியை மற்றும் தவிர்த்து விட்டுப் பார்த்தால் இந்த விலையில் நல்ல தோற்றமும், வசதியும் கொண்ட மொபைலை வாங்க விரும்புபவர்களுக்கு இது சிறந்த தேர்வாக இருக்கும். 3+32 வேரியன்ட்  10,999 ரூபாயாகவும்  4+64 வேரியன்ட் 14,999 ரூபாயாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டிக்கிறது. வருகிற 21-ம் தேதி முதல் ஃப்ளிப்கார்ட் இணையதளத்தில் விற்பனைக்கு வருகிறது ஹானர் 9 லைட் .



Trending Articles

Sponsored