Fusic... Casio G'zOne Revie... இப்படியெல்லாமா மொபைல் பேரு வச்சிருக்காங்க?! #FunnyMobileNames



Sponsored



மொபைல்கள் நமது செல்லப்பிராணிகள் ஆகிவிட்டன. பலர் தங்கள் மொபைல்களுக்கு என தனிப்பெயர் வைத்து சொல்வதும் உண்டு. “அம்மா... என் லோட்டஸ பாத்தியா?”, “அண்ணா... என் ரோஸீ எப்படியிருக்கு?” என வீட்டில் கேட்டவர்கள் “Howz my new mobile.. Tangy..!" என ட்விட்டரிலும் கேட்கிறார்கள். “என் மொபைல் என் உரிமை” என அவர்கள் வைக்கும் பெயர்களைக் கடந்து செல்லலாம். ஆனால், சில மொபைல் நிறுவனங்கள் தங்கள் மொபைல்களுக்கு வைக்கும் பெயரே வேற லெவல் காமெடி ஆன சம்பவங்களை என்ன செய்வது? சில பெயர்களையும் அதன் வரலாற்றையும் பார்க்கலாம்.

1) Samsung :) SGH-T359:

Sponsored


ஃபோனுக்குள் எமோஜி ஒகே. இது என்னப்பா பேருக்குள்ள எமோட்டிக்கான்? கடைல போய் “ஒரு சாம்ஸங்ன்னு சிரிச்சிட்டு SGH-T359 ஒண்ணு கொடுங்க”ன்னா கேட்க முடியும்? “நம்ம மொபைல் வாங்குற எல்லோரும் மகிழ்ச்சியா இருக்கிற மாதிரி ஒரு பேரு சொல்லுங்க”ன்னு டீம் மீட்டிங்க்ல கேட்டிருப்பாங்களோ?

Sponsored



2) Casio G'zOne Revie
வாட்ச், கால்குலேட்டர் என பல இடங்களில் நமக்கு பரிச்சயமான பெயர் Casio. கேஸீயோ மொபைல் தயாரிப்பிலும் ஒருமுறை இறங்கியிருக்கிறது. ஓரளவுக்கு நல்ல வசதிகளுடனே இருந்தது மொபைல். ஆனால், பெயர்தான்... Casio G'zOne Revie. பாக்கெட்டுக்குள் நுழையாத அளவில் மொபைல் தயாரித்தது சாம்ஸங் ஸ்டைல். வாயிலே நுழையாத அளவுக்கு மொபைல் தயாரித்தது கேஸீயோ ஸ்டைல்.

3) Sony Ericsson Live with Walkman:


இசைன்னா இளையராஜா, ரகுமான் என்பதெல்லாம் நம்ம ஆளுங்க தான். உலக அளவில் இசைன்னா சோனிதான். அதுவும் சோனி வாக்மென் எல்லாம் பேய் ஹிட். அந்த வாக்மேன் வசதியோடு வந்த செல்போன்களும் ஹிட். அது தந்த தெம்பில் சோனி தனது ஒரு மொபைலுக்கு வைத்த பெயர் மட்டும் காமெடியானது. ”Sony Ericsson Live with Walkman” என டிவி ஷோ ரேஞ்சுக்கு பெயர் வைத்தது சோனி.

4) Micromax Canvas Fire 4G Plus Q412:
”அடுத்த நாட்டுக்காரந்தான் இப்படின்னு நினைக்காதீங்க மக்களே” என்றபடி இந்தப் பட்டியலில் ஓடி வந்து ஏறியிருக்கிறது மைக்ரோமேக்ஸ். அல்ஜீப்ரா ஃபார்முலாவே பரவாயில்லை என நினைக்க வைக்கும் நம்பர் பெயர். 

5) Nokia X3-02 Touch And Type:
மொபைல் என்ற பட்டியலில் நோக்கியா இல்லாமலா? 3310, 6600 என வெறும் நம்பர்களால் சிக்ஸர் அடித்த நோக்கியாவும் சிலபல சிக்கலான பெயர்களை வைத்திருக்கிறது. அதில் ஒன்றுதான் டச் அண்ட் டைப்பிலான இந்தப் பெயர்

6) Yezz Billy 4.7:
மியாமி நாட்டு மொபைல் நிறுவனம் ஒன்று நிறைய விண்டோஸ் மொபைல்களை வெளியிட்டது. அந்த மொபைல்கலுக்கு Yess Billy எனப் பெயர். இதில் பில்லி யார் தெரியுமா? பில் கேட்ஸாம்.

7) HTC One M8 Harman Kardon:
 கொஞ்சம் மெதுவாக பேசுபவர் கடைக்கு போய் இந்த மாடலைக் கேட்டால், முடிப்பதற்குள் அடுத்த கஸ்டமரைப் பார்க்க போய்விடுவார் சேல்ஸ்மேன். ஏம்ப்பா ஏன்?

8) LG Fusic:
பெயரும் டிசைனும் பார்த்தால் இந்த எல்ஜி மொபைல் இசைப்பிரியர்களுக்கானது என்பது புரிகிறது. ஆனால், அது என்ன Fusic? fast music, favorite music, Fusion music? என்னவாக இருக்கும்?


 



Trending Articles

Sponsored