10 ஜிபி ரேம்... 512 ஜிபி மெமரி... மற்ற யாரும் தந்திடாத அந்த மேஜிக்... வாவ் விவோ ஸ்மார்ட்போன்!



ஸ்மார்ட்போன்களில் புதுப்புது தொழில்நுட்பங்களைப் புகுத்தி மக்களை ஆச்சர்யப்பட வைக்கும் ஆப்பிள், சாம்சங், நோக்கியா போன்ற நிறுவனங்கள்கூட செய்யத் தடுமாறிய விஷயங்களை அசால்ட்டாக செய்து முடித்திருக்கிறது விவோ நிறுவனம். சீனாவைச் சேர்ந்த விவோ நிறுவனம் அடுத்ததாக அறிமுகப்படுத்தவிருக்கும் Vivo Xplay7 என்ற ஸ்மார்ட்போன்தான் டெக் உலகத்தில் இப்பொழுது ஹாட் டாபிக். என்ன செய்திருக்கிறது விவோ, பரபரப்பாகப் பேசப்படும் அளவிற்கு  இந்த ஸ்மார்ட்போனில் அப்படி என்ன ஸ்பெஷல்? 

Sponsored


சில வருடங்களுக்கு முன்னால் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் பிரபலமாக ஆரம்பித்திருந்த காலக்கட்டம். டிஸ்ப்ளே அளவு,ரேம், இன்டர்னல் மெமரி, பேட்டரி என அனைத்துமே அப்போதிருந்த மொபைல்களில் குறைவுதான். ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் புதிதாக இருந்த பாதுகாப்பு வசதியான பேட்டர்ன் லாக் மக்களிடையே வரவேற்பைப் பெற்றிருந்தது. அதைத் தவிர்த்து இன்று பரவலாகிவிட்ட ஃபிங்கர்பிரின்ட் ஸ்கேனர் அப்போது எளிதில் கிடைக்காத தொழில்நுட்பமாகத்தான் இருந்தது. விலை உயர்ந்த மொபைல்களில் மட்டுமே ஃபிங்கர்பிரின்ட் ஸ்கேனர் வசதி கிடைத்தது. விலை குறைந்த மொபைல் வைத்திருப்பவர்களுக்கும் ஃபிங்கர்பிரின்ட் ஸ்கேனரைப் பயன்படுத்த வேண்டும் என்ற ஆசையை தீர்த்து வைத்தன ப்ளே ஸ்டோரில் கொட்டிக்கிடந்த நூற்றுக்கணக்கான ஆப்ஸ். அப்பொழுது ப்ளே ஸ்டோரில் கிடைத்த ஃபிங்கர்பிரின்ட் ஸ்கேனர் ஆப்ஸ் போலியானவைதான். அவற்றை இன்ஸ்டால்  செய்த பிறகு விரலைத் திரையின் மேல் வைத்தால் ஸ்கேனிங் செய்வதுபோல காட்டும், உண்மையில் அந்த ஆப் செயல்படாது. அது உண்மையாகவே ஸ்கேன் செய்கிறது என்று நினைத்துக்கொண்டிருந்தவர்கள் பல பேர். சில வருடங்களுக்கு பிறகுதான்   நிஜமான  ஃபிங்கர்பிரின்ட் ஸ்கேனர்கள் பயன்பாட்டிற்கு வர ஆரம்பித்தன. சொல்லப்போனால் அதிலும்கூட மக்களுக்கு ஏமாற்றம்தான் ஃபிங்கர்பிரின்ட் ஸ்கேனர்கள் என்றால் திரைக்குக் கீழே இருக்கும் என நினைத்தவர்களுக்கு அது மொபைலின் பின்புறமாக இருந்தது சற்று அதிர்ச்சியைத்தான் கொடுத்தது. 

Sponsored


Sponsored


மக்கள் எதிர்பார்த்தது திரைக்கு மேல் கையை வைத்தால் ஸ்கேன் செய்யக்கூடிய ஸ்கேனர்தான். அடுத்த ஐபோன்ல வந்துரும்...அடுத்த கேலக்ஸில வந்துரும் எனப் பல வருடங்களாக எதிர்பார்த்துக் காத்திருந்தவர்களுக்கு தனது மொபைலில் அண்டர் ஸ்க்ரீன் ஃபிங்கர்பிரின்ட் ஸ்கேனரைக் கொடுத்து ஆச்சர்யப்பட வைத்திருக்கிறது விவோ நிறுவனம். இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் உலகின் முதல் ஸ்மார்ட்போன்  vivo X20 Plus UD தான். இந்த ஸ்மார்ட்போனை ஏற்கெனவே அறிமுகப்படுத்திவிட்டது. திரைக்கு மேலே கையை வைத்தால் போதும்; நிஜமாவே இந்த மொபைலில் பயன்படுத்தப்பட்டிருக்கும் சென்சார் விரலை ஸ்கேன் செய்யும். சினாப்டிக்ஸ் நிறுவனத்தின் இந்த சென்சார் ஈரம், குளிர், வியர்வை என அனைத்துச் சூழ்நிலைகளிலும் சிறப்பாகச் செயல்படும். 

அதே வசதியை இந்த ஸ்மார்ட்போனிலும் பயன்படுத்தியிருக்கும் விவோ நிறுவனம் Vivo Xplay7 ஸ்மார்ட்போனில்  வேறு என்னென்ன வசதிகளை அறிமுகப்படுத்தப்போகிறதோ என டெக் உலகம் காத்துக்கிடக்கிறது. இந்த ஸ்மார்ட்போனைப் பற்றிய தகவல்கள் ஒவ்வொன்றாக இணையத்தில் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. அப்படிச் சமீபத்தில் வெளியான தகவல் இதன் ரேம் மற்றும் இன்டர்னல் மெமரியின் அளவு பலரையும் ஆச்சர்யப்பட வைத்திருக்கிறது. இந்த போனில் 10GB ரேம் 256GB மற்றும் 512GB இன்டர்னல் மெமரி இருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. மொபைல் கூடிய விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதால் இந்தத் தகவல்கள் பெரும்பாலும் உண்மையாகவே இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். அது மட்டுமின்றி 4K OLED டிஸ்ப்ளே, 4X Zoom வசதி கொண்ட டூயல் கேமரா, பிராசசரின் வேகம் குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை என்றாலும் செயல்திறன் அதிகம் கொண்ட Snapdragon 845 SoC பயன்படுத்தப்பட்டிருக்கலாம், மற்றும் 92.9% screen-to-body ratio இருப்பதால் டிஸ்ப்ளேவின் பரப்பளவு அதிகமாக இருக்கும். விலையும் ஐம்பதாயிரத்திற்கு உள்ளேதான் நிர்ணயிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. தற்போது வெளியாகியிருக்கும் தகவல்களின்படியே Vivo Xplay7 வெளியானால் இந்த வருடத்தின் மிக முக்கியமான ஸ்மார்ட்போனாகக் கருதப்படும்.   


 



Trending Articles

Sponsored