நோட் 4 ஹிட்... அப்போ நோட் 5 மெகா ஹிட்!’ ரெட்மியின் புதிய அட்டாக் #RedmiNote5



Sponsored



இந்த ஆண்டிற்கான தனது முதல் அஸ்திரத்தை ஏவியிருக்கிறது ஷியோமி. புது டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் இரண்டு புதிய மொபைல்கள் மற்றும் ஒரு எல்ஈடி ஸ்மார்ட் டிவியை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இந்த அறிமுக விழாவில் முதலில் மேடை ஏறிய மனு குமார் ஜெயின் இந்தியாவில் 26.8 % மார்கெட் ஷேர்களை கைப்பற்றி மொபைல் விற்பனையில் முதலிடம் மற்றும் உலக அளவில் நான்காவது இடத்தை பிடித்திருப்பது, கடந்த வருடம் 9,624,110 ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்தது, ஆன்லைன் மொபைல் விற்பனையில் முதலிடம் பிடித்திருப்பது என கடந்த வருடம் ஷியோமியின் சாதனைகளைப் பற்றி விளக்கினார்.

ஏற்கெ னவே கடந்த வருடத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போன் மிகப்பெரிய வெற்றியடைந்தது. இன்று வரை ரெட்மி நோட் 4 சந்தையில் முன்னிலையில்தான் இருந்து கொண்டிருகிறது. அதற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து அதன் அடுத்த தலைமுறை மொபைல்களான Redmi Note 5, மற்றும்  Redmi Note 5 Pro என்ற இரண்டு ஸ்மார்ட்போன்களை  அறிமுகப்படுத்தியிருக்கிறது ஷியோமி. 

Sponsored


ரெட்மி நோட் 5 மற்றும் ரெட்மி நோட் 5 ப்ரோ

Sponsored


ரெட்மி நோட் 4 அடைந்த வெற்றிக்கு காரணமாக அதன் பேட்டரி லைஃப், பில்டு குவாலிட்டி, அதன் வசதிகள் மற்றும் சரியான விலையைக் கூறலாம். அதே வழியைப் பின்பற்றி இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் வடிவமைக்கப்பட்டுள்ளன. ரெட்மி நோட் 5 என்று இங்கே அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் ஸ்மார்ட்போனை கடந்த வருடம் டிசம்பரில் சீனாவில் Xiaomi Redmi 5 Plus என்ற பெயரில் ஏற்கெனவே அறிமுகப்படுத்திவிட்டது. இரண்டு மாதங்கள் கழித்து இந்தியாவில் அறிமுகப்படுத்துகிறது. டிஸ்ப்ளேதான் ரெட்மி நோட் 5 போனில் குறிப்பிடத்தக்க வேண்டிய விஷயம். 5.99 இன்ச்  18:9 2160 × 1080 டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கிறது இந்த ஸ்மார்ட்போன், இது ரெட்மி நோட் 4 உடன் ஒப்பிடும் பொழுது சற்று அதிகம். வழக்கமாக வெளியே கொடுக்கப்பட்டிருக்கும் மூன்று நேவிகேஷன் பட்டன்களும் திரைக்கு உள்ளே இடம்பெயர்ந்திருக்கின்றன. ப்ராசஸரில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை, ரெட்மி நோட் 4 இல் இருக்கும் அதே ஸ்னாப்ட்ராகன் 625 ப்ராசஸர் இதிலும் இருக்கிறது. செயல்திறன் மற்றும் வெப்பத்தை குறைவாக வெளிப்படுத்துவதால் வேறு ப்ராசஸர் தேவைப்படவில்லை என தெரிவித்திருக்கிறது ஷியோமி. 12 மெகாபிக்ஸல் பின்புற கேமரா கொடுக்கப்பட்டிருக்கிறது. முந்தைய ரெட்மி நோட் 4 ஐ விட சற்று குறைவாக தெரிந்தாலும் இதில் இருக்கும் கேமராவால் அதை விடச் சிறப்பான போட்டோக்களை எடுக்க முடியும். ரெட்மி நோட் 4 ல் இருந்த கேமராவால் குறைந்த அளவு வெளிச்சத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தரம் குறைவாகவே இருக்கின்றன என்ற விமர்சனங்கள் அதிகமாக வந்ததால் ஷியோமி இந்த ஸ்மார்ட்போனின் கேமராவை மேம்படுத்தியிருக்கிறது. 5 மெகாபிக்ஸல் முன்புற கேமராவிற்கு ஃபிளாஷ் கொடுக்கப்பட்டிருக்கிறது. 4000mAh பேட்டரியைக் கொண்டிருப்பதால் சிறந்த பேட்டரி பேக்கப்பை அளிக்கும் என நம்பலாம். ஆண்ட்ராய்டு 7.1.2 நெளகட் இயங்குதளம் இதில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. கடந்த முறை மொபைல் அதிகமாக சூடாகிறது என்ற குற்றச்சாட்டும் அதிகமாக எழுந்ததால் அதைக் குறைக்கவும் இதில் சில வசதிகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

இதன் எடை  180g மற்றும் தடிமன் 8.05 மி.மீ. விலை விஷயத்திலும் அசத்தியிருக்கிறது ஷியோமி, 3GB+32GB வேரியன்ட் 9,999 ரூபாயாகவும், 4GB+64GB வேரியன்ட் 11,999 ரூபாயாகவும் விலை நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.


அடுத்தது ரெட்மி நோட் 5 ப்ரோ என்ற ஸ்மார்ட்போனை எக்ஸ்க்ளுஸிவாக இந்தியாவில் அறிமுகப்படுத்தியிருக்கிறது ஷியோமி. ஷியோமி நிறுவனத்தில் இருந்து இந்தியாவில் வெளியாகும் இரண்டாவது டூயல் கேமராவைக் கொண்ட ஸ்மார்ட்போன் இது. இந்த செக்மன்டில் முன்னிலையில் இருக்கும் மற்ற டூயல் கேமரா ஸ்மார்ட்போன்கள் இதன் வருகையால் ஓரம்கட்டப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இந்த ஸ்மார்ட்போனிலும் 5.99 இன்ச்  18:9 2160 × 1080 டிஸ்ப்ளே இருக்கிறது. கேமராதான் இதன் குறிப்பிடத்தக்க அம்சம் 12MP+5MP டூயல் பின்புற கேமரா மற்றும் 20 MP முன்புற கேமராவை  கொண்டிருக்கும் ரெட்மி நோட் 5 ப்ரோ மூலமாக மிட் ரேன்ஜ் ஃப்ளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களை விடவும் சிறப்பான புகைப்படங்களை எடுக்க முடியும் என்று சவால் விடுகிறது ஷியோமி. மேலும் புகைப்படத்தின் தரத்தை மேம்படுத்துவதற்காக AI வசதியையும் கொடுத்திருக்கிறது. 1.8 GHz ஆக்டாகோர் ஸ்னாப்ட்ராகன் 636 ப்ராசஸர்  இதில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது, இந்த ப்ராசஸரைப் பயன்படுத்தும் உலகின் முதல் ஸ்மார்ட்போன் இது. LPDDR4X வகை ரேம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது இதன் மூலமாக சிறந்த செயல்திறனை பெற முடியும். அதே போல AI மூலமாக இயங்கும் ஃபேஸ் அன்லாக் வசதியையும் புதிதாக இந்த ஸ்மார்ட்போனில் அறிமுகப்படுத்துகிறது ஷியோமி. இதிலும்  4000mAh பேட்டரி கொடுக்கப்பட்டிருக்கிறது.  4GB+64GB வேரியன்ட் 13,999 ரூபாயாகவும், 6GB+64GB வேரியன்ட் 16,999 ரூபாயாகவும் விலை நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது . இரண்டு மொபைல்களிலும் ஹைபிரிட் சிம் ஸ்லாட் இருக்கிறது. கோல்ட், ரோஸ் கோல்ட், லேக் ப்ளூ, மற்றும் கறுப்பு வண்ணங்களில் கிடைக்கும். இவ்வளவு வசதிகளை கொடுத்த ஷியோமி Type-C போர்ட்டை ஏனோ கண்டுகொள்ளாமல் விட்டு விட்டது. அதுவும் இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.  வரும் 22-ம் தேதி முதல் இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் விற்பனைக்கு கிடைக்கும்.

எப்பொழுது வெளியாகும் என அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Mi LED Smart TV 4 யையும் அறிமுகப்படுத்தியிருக்கிறது ஷியோமி. இந்தியாவில் வெளியாகும் முதல் Mi டிவி இது. 55 (3840 x 2160) இன்ச்  திரையைக் கொண்ட இதில் 4K மற்றும் HDR வசதிகள் இருக்கின்றன. இதை உலகின் மிக மெல்லிய டிவி என்று கூறுகிறது ஷியோமி, இதன் தடிமன் 4.9மி.மீ மட்டுமே. 13 இந்திய மொழிகள் இதில் இருக்கின்றன. ஸ்மார்ட் டிவியான இதில் 2GB ரேம் மற்றும் 8GB இன்டர்னல் மெமரி இருக்கிறது. PatchWall  என்ற புதிய இயங்குதளத்தில் இயங்கும் இது அட்டகாசமான வசதிகள் பலவற்றைக் கொண்டிருக்கிறது. 39,999 ரூபாயாக இதன் விலை நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.



Trending Articles

Sponsored