ஐபோன்கள் யூஸர்களை அலறவைத்த அந்த ஒரு தெலுங்கு எழுத்து..!



ரத்தில் என்றுமே நம்பர் 1 என்றாலும் அடிக்கடி புதுப்புது 'Bug'களால் திணறிவருகிறது ஆப்பிள் நிறுவனம். கடந்த வருடத்தின் இறுதியில் இப்படிப் பல குறைகள் ஆப்பிளின் ஆபரேட்டிங் சிஸ்டம்களைப் பதம்பார்க்கவும், ஒவ்வொன்றாகச் சரிசெய்து வந்தது ஆப்பிள். இந்நிலையில் தற்போது ஒரே ஒரு தெலுங்கு எழுத்து ஒட்டுமொத்த ஆப்பிள் மெசேஜிங் ஆப்ஸ்களையும், ஆப்பிள் டிவைஸ்களையும் கிராஷ் செய்துவருகிறது. ஆப்பிள் IOS 11.2.5 வெர்ஷனில் முதன்முதலாக இந்தப் பிரச்னையை இத்தாலி நாட்டைச் சேர்ந்த வலைப்பூ ஒன்று கண்டறிந்தது. பின்னர் மற்ற ஆப்பிள் யூசர்களும் இதனை சோதனை செய்து சமூகவலைதளங்களில் பதிவிடவே வைரலாகிவிட்டது பிரச்னை. 

Sponsored


என்ன சிக்கல்?

Sponsored


ஆப்பிள் 11.2.5 வெர்ஷனில் இயங்கும் மெசேஜிங் ஆப்ஸ்களுக்கு குறிப்பிட்ட தெலுங்கு எழுத்தை அனுப்பினால் உடனே கிராஷ் ஆகிவிடும். உதாரணமாக ஐபோன் பயனாளர் ஒருவருக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பினால், உடனே நோட்டிஃபிகேஷனில் காட்டும். பின்னர் அதனை அவர் ஐ மெசேஜில் திறந்துபார்க்க வேண்டும். ஆனால், அந்தக் குறிப்பிட்ட தெலுங்கு எழுத்தை அனுப்பினால் முதலில் வழக்கம்போல நோட்டிஃபிகேஷன் வரும். அதனை க்ளிக் செய்து திறக்க முயற்சி செய்தால் ஆஃப் கிராஷ் ஆகிவிடும். தனியாக சென்று ஐ மெசேஜ் ஆப்பை திறந்தாலும் அது திறக்காது. அப்போதும் கிராஷ் ஆகும்.

Sponsored


இந்தப் பிரச்னை ஐ மெசேஜ் ஆப்பிற்கு மட்டுமல்ல; ஃபேஸ்புக் மெசேஞ்சர், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட், ஜிமெயில் என எல்லா இடங்களிலும் இருப்பதாக உலகம் முழுவதும் இருந்து ஆப்பிள் பயனாளர்கள் ரிப்போர்ட் செய்துவருகின்றனர். ஃபேஸ்புக் மெசேஞ்சரில் ஒருவருக்கு மெசேஜ் அனுப்பினாலும் ஐபோன் கிராஷ் ஆகிவிடுகிறது. க்ரூப்சாட்களில் அனுப்பினாலும் கிராஷ் ஆகிவிடுகிறது.

எதனால் இந்தப் பிரச்னை?

கேட்ஜெட்களில் இயங்கும் ஒவ்வொரு மொழியையும், சில குறிப்பிட்ட வழிமுறைகளின் மூலமாகவே புரிந்துகொள்கின்றன. இதில் சிக்கல்கள் ஏற்படும்போது இதுபோன்ற 'Bugs' ஏற்படும். இந்தத் தெலுங்கு எழுத்து விஷயத்திலும் இதேதான். அந்த எழுத்தை ஆப்பிள் OS-கள் புரிந்துகொள்ளும்போது சிஸ்டத்தில் ஏதோ ஒரு சிக்கல் ஏற்படுகிறது. அதனால்தான் இந்தப் பிரச்னை என்கின்றனர் டெக்கீஸ். ஐபோனின் iOS மட்டுமின்றி MacOS, WatchOS போன்றவையும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளன. இப்படி மொத்த ஆப்பிள் ஆபரேட்டிங் சிஸ்டத்திலும் சிக்கல் இருக்கிறது. எனவே, அடுத்த அப்டேட் விட்டால் மட்டுமே இதிலிருந்து ஆப்பிள் பயனாளர்கள் தப்பிக்க முடியும்.

ஆனால், இதனைத் தற்காலிகமாக தவிர்க்க சில வழிகள் இருக்கின்றன. அதாவது ஐபோனுக்கு இதுபோன்ற மெசேஜ் வந்திருப்பது தெரிந்தால், உங்களின் வேறொரு மொபைலில் இருந்து ஐபோனுக்கு ஏதேனும் ஒரு மெசேஜ் அனுப்புங்கள். அந்தப் புதிய மெசேஜ் நோட்டிஃபிகேஷனில் காட்டியதும், ஐ மெசேஜ் ஐகானை க்ளிக் செய்து 'New message' ஆப்ஷனைத் தேர்வு செய்யவேண்டும். அப்படிச் செய்தால் ஐ மெசேஜ் வெற்றிகரமாகத் திறந்துவிடும். பின்னர் சிக்கலுக்குரிய முந்தைய மெசேஜை முழுமையாக அழித்துவிட்டால் பிரச்னை முடிந்தது. இது ஐ மெசேஜ் ஆப்பிற்கு மட்டும்தான். மற்ற ஆப்களுக்கு பொருந்தாது. மேலும், தேவையில்லாமல் யாரேனும் அந்த எழுத்தை மெசேஜ் செய்தால், அவரை Block செய்துவிடலாம்.

என்ன சொல்கிறது ஆப்பிள்?

இதுபோன்ற பிரச்னைகள் வந்தால் அடுத்த அப்டேட்கள் மூலமாகச் சரிசெய்வது ஆப்பிளின் பாணி. கடந்த வருடம் சிஸ்டம் அட்மினின் பாதுகாப்புத் தொடர்பான சிக்கல்கள் வந்தபோதும், இதேபோல ஐபோன் கிராஷ் செய்யும் மெசேஜ்கள் தொடர்பாகப் பிரச்னைகள் வந்தபோதும் அப்படித்தான் செய்தது. இந்தமுறையும் அதையேதான் அந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது. "ஆப்பிளின் அனைத்து OS-களிலும் இந்தப் பிரச்னையை விரைவில் சரிசெய்துவிடுவோம்; iOS-ன் லேட்டஸ்ட் வெர்ஷனில்தான் இந்தப் பிரச்னை. பழைய வெர்ஷன்கள் இந்த bugகால் பாதிக்கப்படவில்லை" எனவும் கூறியுள்ளது.

(இதுதான் அந்த எழுத்து.)

இப்படி, ஒரே ஒரு தெலுங்கு எழுத்து ஒட்டுமொத்த ஆப்பிள் ஆப்பரேட்டிங் சிஸ்டம்களுக்கும் சவால் விட்டிருக்கிறது.



Trending Articles

Sponsored