'View image' ஆப்ஷனை எதற்காக நீக்கியது கூகுள்?



கூகுள் இமேஜஸின் சர்ச் வசதியில், கூகுள் செய்துள்ள சிறிய மாற்றம் ஒன்று அதன் யூசர்களை அதிருப்தியடைய வைத்திருக்கிறது. டெக்னாலஜி நிறுவனங்கள் தங்களது ஆப் டிசைன், செயல்பாடுகள் போன்றவற்றை அடிக்கடி மாற்றுவதும் அதற்கு பயனாளர்கள் உடனடியாக எதிர்ப்பு தெரிவிப்பதும் வழக்கமான ஒன்றுதான். கடந்த வருடம் வாட்ஸ்அப் தன்னுடைய ஸ்டேட்டஸ் வசதியை மாற்றியபோது பலரும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். சமீபத்தில் ஸ்னாப்சாட் தன் ஆப்பில் மாற்றங்கள் செய்ததற்கு பல்லாயிரக் கணக்கான ஸ்னாப்சாட் பயனாளர்கள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். டெக் உலகில் இதுபோன்ற சம்பவங்கள் எல்லாம் அவ்வப்போது நடப்பவைதான். ஆனால், இதற்கும் தற்போது கூகுள் தனது, 'Images' சேவையில் 'View image' ஆப்ஷனைத் தூக்கியதற்கும் ஒரு வித்தியாசம்  இருக்கிறது.

Sponsored


போர்க்கொடி உயர்த்திய Getty இமேஜஸ்

Sponsored


கூகுளின் மீது நீண்டகாலமாக இருக்கும் குற்றச்சாட்டு, அது படைப்பாளிகளின் டிஜிட்டல் படைப்புகள் மற்றும் புகைப்படக் கலைஞர்களின் புகைப்படங்களை உரிய அனுமதியின்றி பயன்படுத்த உதவுகிறது என்பது. ஒரு புகைப்படக்காரர் தான் எடுத்த படங்களை முறையாக பணம் பெற்றுக்கொண்டு தன்னுடைய இணையதளம் மூலம் விற்பனை செய்கிறார் என வைத்துக்கொள்வோம். அந்தப் படங்களை ஒருவர் வாங்கவேண்டுமென்றால், புகைப்படக்காரரின் இணையதளத்திற்கு சென்று பணம் செலுத்தவேண்டும். ஆனால் இன்னொரு வழியும் இருக்கிறது. அது கூகுள் இமேஜில் அந்தப் புகைப்படக்காரரின் பெயரை டைப் செய்தோ, அல்லது படங்களின் பெயரை டைப் செய்தோ டவுன்லோடு செய்வது. இதன்மூலம் ஒருவர் மிக எளிதாக காப்புரிமை பெற்ற படங்களைக்கூட டவுன்லோடு செய்துவிடமுடியும். இந்த சிக்கல் குறித்து நீண்டகாலமாக பலரும் கூகுளிடம் முறையிட்டு வந்தனர். அதில் 'Getty Images' நிறுவனமும் ஒன்று.

Sponsored


Getty இமேஜஸ் நிறுவனம் டிஜிட்டல் புகைப்படங்களை விற்பனை செய்யும் ஒரு தளம். இதில் விற்பனை செய்யப்படும் படங்கள் அனைத்தும் சட்டப்படி காப்புரிமை பெற்றவை. இவற்றையும் கூகுள் இமேஜஸ் வசதியின் மூலமாக பலரும் எளிதில் டவுன்லோடு செய்து பயன்படுத்தினர். உரிய அனுமதியின்றி இப்படி படங்களை பயன்படுத்தியதற்காக பயனாளர்களின் மீது getty இமேஜஸ் சட்டப்படி நடவடிக்கை எடுக்கமுடியும். ஆனால் கூகுள் மீது நடவடிக்கை எடுக்கமுடியாது. காரணம், கூகுளின் விதிமுறைகளின்படி படங்களின் காப்புரிமை தொடர்பான விஷயங்கள் அனைத்தும் பயனாளர்களையே சாரும். ஆனால், இதனை இப்படி குறைப்பது? கூகுளில் இருந்து தங்கள் படங்கள் பறிபோவதை எப்படி தடுப்பது?

இந்தப் பிரச்னையைச் சுட்டிக்காட்டி இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஐரோப்பிய கமிஷனிடம் getty இமேஜஸ் புகார் அளித்தது. கூகுள் இப்படி செய்வதை நிறுத்தவேண்டும் என வலியுறுத்தியது. ஆனால் கூகுள், பிரச்னையை ஐரோப்பிய கமிஷனுக்கு வெளியிலேயே தீர்க்க முடிவெடுத்து, Getty இமேஜஸ் உடன் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு ஒப்பந்தமும் போட்டுக்கொண்டது.

Getty - கூகுள் ஒப்பந்தம்

இதன்படி கூகுள் தனது சேவைகளில் Getty இமேஜஸின் படங்களைப் பயன்படுத்திக் கொள்வதற்காக அந்நிறுவனத்துடன் ஒப்பந்தம் ஒன்றை சமீபத்தில் கையெழுத்திட்டுள்ளது. மேலும், முறையற்ற டவுன்லோடுகளைத் தவிர்ப்பதற்காக கூகுள் இமேஜஸ் சேவையில் இருந்த 'View image' ஆப்ஷனையும் கூகுள் தூக்கிவிட்டது. கூடுதலாக படங்களுக்கான 'Attribution'-ஐ படங்களுக்கு அருகே தெளிவாகக் காட்டும்படி செய்திருக்கிறது. இதில் திருப்தியடைந்த Getty இமேஜஸ் நிறுவனம் முதலில் தான் அளித்த புகாரையும் வாபஸ் வாங்கிவிட்டது. இதனால்  தற்போது Getty, கூகுள் இரண்டுமே ஹேப்பி. ஆனால் கூகுள் யூசர்ஸ்?

செம கடுப்பில் இருக்கிறார்கள். நேற்றுவரைக்கும் ஏதேனும் படங்களை கூகுளில் தேடினால் வரிசையாக காட்டும். அதில் ஏதேனும் படத்தை க்ளிக் செய்தால், அருகில் 'View image' என்ற ஆப்ஷனும் இருக்கும். இதைப் பயன்படுத்தி எளிதாக அந்தப் படத்தை டவுன்லோடு செய்துவிடமுடியும். ஆனால், தற்போது வெறும் படமும், 'Visit' ஆப்ஷன் மட்டுமே காட்டப்படுகிறது. எனவே இந்தப் படத்தை டவுன்லோடு செய்யவேண்டுமென்றால் அந்த இணையதளத்திற்கு சென்றுதான் டவுன்லோடு செய்யமுடியும். இந்த மாற்றம் குறித்து பலரும் தங்கள் அதிருப்தியை சமூகவலைதளங்களில் பகிர்ந்துவருகின்றனர். ஆனால் கூகுளோ, "இதன்மூலமாக பயனாளர்களும், இணையதள உரிமையாளர்களுக்கும் இடையே ஒரு பாலமாக கூகுள் இமேஜஸ் அமையும். இருவருமே பயனடைவார்கள்" என விளக்கமளித்திருக்கிறது.

என்ன செய்யலாம்?

அடிக்கடி கூகுள் இமேஜஸ் பயன்படுத்துபவர்களுக்கு, இது கொஞ்சம் கடினமான முடிவு என்றாலும், படைப்பாளிகளைப் பொறுத்தவரை நல்ல விஷயம்தான். காரணம், அவர்களின் டிஜிட்டல் படைப்புகள் மற்றும் புகைப்படங்கள் அதிகளவில் அனுமதியின்றி டவுன்லோடு செய்யப்படுவது குறையும். இந்த சிக்கலை கையாள்வதற்காக சிலர் வேறு சில உத்திகளையும் கையாள்கின்றனர். கூகுள் சர்ச் வசதிக்கு பதிலாக 'bing' பயன்படுத்துவது அதில் ஒன்று. இரண்டாவது சில எக்ஸ்டென்சன்கள் மூலம் 'view image' ஆப்ஷனைப் பெறுவது. கூகுள் இந்த எக்ஸ்டென்சன்களையும் நீக்க வாய்ப்பு இருக்கிறது. 



Trending Articles

Sponsored