அதிகரிக்கும் இணைய வேகம்... உங்கள் wifi router போதுமா? #GadgetTipsSponsoredவீடு, அலுவலகம், ஹாஸ்டல் என எந்த இடமென்றாலும் வைஃபை என்பது தேவையான ஒன்றாகிவிட்டது. வைஃபை மூலமாக அதிவேக இணைய இணைப்பைப் பெற முடியும், அதிக சாதனங்களை இணைத்துக்கொள்ள முடியும் என்பதே இதன் தேவைக்குக் காரணம். வைஃபையில் முக்கியப் பங்கு வகிப்பது ரெளட்டர்தான். பிராட்பேண்ட் இணைப்பாக இருந்தாலும் இன்டர்நெட் வேகமாக இருப்பதில்லை என்பது ஒரு சிலரின் குற்றச்சாட்டு. வைஃபையின் இணைய வேகத்தை ரெளட்டர் தீர்மானிக்கும் என்றால் ரெளட்டரின் செயல்திறன் எப்படி முடிவு செய்யப்படுகிறது?

ரெளட்டரைத் தேர்ந்தெடுப்பது எப்படி?

Sponsored


ஒரு ரெளட்டரைத் தேர்ந்தெடுக்கும் போது முதலில் கவனிக்க வேண்டிய விஷயம் 802.11 தர மதிப்பீடுதான். இது உலகம் முழுவதும் ரெளட்டரைப் பற்றி அறிந்து கொள்வதற்காக இருக்கும் பொதுவான ஒரு மதிப்பீடு. அனைத்து ரெளட்டர்களிலும் இது கட்டாயமாக இருக்கும். இதில் இருக்கும் 802.11 என்ற எண் அனைத்திற்கும் பொதுவானது, அதற்கு பிறகு குறிப்பிடப்பட்டிருக்கும் a, b, g, n, மற்றும் ac போன்ற எழுத்துகள் மூலம் ரெளட்டரின் வேகத்தை அறிந்துகொள்ள முடியும். 802.11b மூலமாக 11Mbps அளவிலும். 802.11a மற்றும் 802.11g மூலமாக 54Mbps அளவிலும், 802.11n மூலமாக 600Mbps வரையிலும் அதிகபட்சமாக இணைய இணைப்பைப் பெற முடியும். 802.11ac வகை ரெளட்டர்கள் 1.3 Gbps வேகம் கொண்டவை. இவை தற்பொழுதுதான் பிரபலமாகி வருகின்றன. வேகத்திற்கு தகுந்தாற்போல இவற்றின் சிக்னல் வழங்கும் பரப்பளவும் சேர்ந்தே அதிகரிக்கும். வேகமும், பரப்பளவும் எவ்வளவு தேவைப்படுமோ அதற்கு தகுந்தவாறு தேர்ந்தெடுக்கலாம். இதில் முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம் ஒரு ரெளட்டரில் குறிப்பிடப்பட்டிருக்கும் வேகத்தை அப்படியே பெற முடியாது. அது குறிப்பிடும் வேகம் என்பது ஒரு கணினிக்கும் ரெளட்டருக்கும் இடையே இருக்கும் WLAN இணைப்பின் வேகம்தான். அதன் மூலமாக கிடைக்கப்போகும் இணைய வேகம் அல்ல. சிங்கிள் பேண்ட் ரெளட்டர்கள் 2.4 GHz அலைவரிசையில் இயங்கக்கூடியவை, டூயல் பேண்ட் ரெளட்டர்கள் 5 GHz அலைவரிசையில் இயங்கக்கூடியவை என்பதால், சிங்கிள் பேண்ட்டை விட டூயல் பேண்ட் ரெளட்டர்களின் செயல்திறன் அதிகமாக இருக்கும். ஒரே நேரத்தில் அதிக இணைப்புகள், அதிக வேகத்தில் தேவைப்படும் பொழுது டூயல் பேண்ட்டை தேர்ந்தெடுக்கலாம். சாதாரணமான பயன்பாட்டிற்கு சிங்கிள் பேண்ட் ரெளட்டரே போதுமானதாக இருக்கும்.

Sponsored


அதிகத் திறன் கொண்ட ரெளட்டராக இருந்தாலும் இணைய வேகம் குறைவாக இருப்பது ஏன் ?

எவ்வளவுதான் அதிகத் திறன் கொண்ட ரெளட்டராக இருந்தாலும் இணைய வேகம் என்பது பிராட்பேண்ட் சேவையை அளிக்கும் நிறுவனத்தின் கையில்தான் இருக்கிறது. நிறுவனம் எந்த முறையில் சேவையை வழங்குகிறது என்பதையும் பார்க்க வேண்டும். பைபர்நெட் வகை இணைப்பில் அதிக வேகத்தைப் பெற முடியும். எந்த வகை இணைப்பாக இருந்தாலும் அதிக வேகம் வேண்டுமென்றால் அதிகப் பணம் செலுத்த வேண்டியிருக்கும். குறைவான வேகம் கொண்ட பிளானைத் தேர்ந்தெடுத்துவிட்டு அதிகச் செயல்திறன் கொண்ட ரெளட்டரைப் பயன்படுத்தினால் நினைக்கும் வேகத்தைப் பெற முடியாது. எல்லாம் சரியாக இருந்தும் போதுமான வேகத்தைப் பெற முடிவில்லை என்றால் சிக்கல் வைஃபை ரெளட்டர் அமைந்திருக்கும் இடத்தில் இருக்கக்கூடும். ரெளட்டர் இருக்கும் இடத்தைச் சுற்றி எதுவும் சிக்னல்களை தடுக்காதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். பெரிய பரப்பளவில் இருக்கும் இடங்களில் தொலைவு அதிகரிக்க அதிகரிக்க சிக்னல் கிடைப்பதில் சிக்கல் இருக்கலாம். அப்படிப்பட்ட இடங்களில் வைஃபை ரிப்பீட்டர்கள் உதவியாக இருக்கும், இவற்றின் மூலமாக வைஃபை சிக்னல் கிடைக்கும் சுற்றளவை அதிகரிக்க முடியும்.Trending Articles

Sponsored