பார்வையற்றவர்கள் பார்க்க, படிக்க, நடக்க உதவும் விரல் சைஸ் கேட்ஜெட்! #Orcam



மது உடலில் கண்கள் எவ்வளவு முக்கியமானவை? கண்பார்வை இல்லாமல் வாழ்வது எவ்வளவு கடினம்? கண் பார்வையை இழந்தவர்களுக்குப் புதிய சிகிச்சை முறைகள் இருந்தாலும் அவை அனைவருக்கும் பொருந்தாதவை. ஒரு சில காரணங்களால் கண்பார்வை இழப்பவர்கள், மீண்டும் தங்கள் பார்வையை அடைய முடியாத நிலைமைக்குச் செல்கின்றனர். அப்படி இருப்பவர்களின் வாழ்க்கை “எங்கும் வெளியே செல்ல முடியாது, யாரையும் அடையாளம் கண்டுகொள்ள முடியாது” என எவ்வளவு கொடுமையானதாக மாறுகிறது. 

Sponsored


Photo Courtesy: OrCam

Sponsored


நடைபெறாது என்று சொன்ன பலவற்றையும் நடத்திக்காட்டி ஆச்சர்யப்படுத்திய தொழில்நுட்பத்தைக் கொண்டு, தற்போது இதற்கும் ஒரு தீர்வைக் கண்டுள்ளனர் வல்லுநர்கள். இஸ்ரேலில் கண்டறியப்பட்டுள்ள புதிய கேட்ஜெட் 'MY EYE'. இதை OrCam என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. இது செயற்கை நுண்ணறிவு மூலம் பார்வையற்றவர்களுக்கு உதவுவதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. 

Sponsored


MY EYE ஒரு விரல் போன்ற கருவி. சிறியது மற்றும் எடை குறைவானது (22.5 கிராம்கள் மட்டுமே). இது வழக்கமாகப் பயன்படுத்தும் கண்ணாடிகளுடன் இணைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு பக்கம் கேமரா, மற்றொரு பக்கம் ஒலிபெருக்கி (Speaker), இவற்றை இணைக்கும் மற்றும் தகவல்களை வார்த்தைகளாக மாற்றும் அமைப்பு, இவற்றோடு பேட்டரி என இவ்வளவுதான் அந்த ஒட்டுமொத்த கருவியும். 

Photo Courtesy: OrCam

நாம் போகுமிடங்களில் உள்ளதையெல்லாம் கேமரா படமெடுத்து அனுப்ப, அதை உடனடியாக ஆராய்ந்து, அந்தத் தகவலை உங்கள் காதருகே சொல்லிவிடும். இது படிப்பதற்கு, தெரிந்தவரை அடையாளம் கண்டுகொள்வதற்கு, என்ன பொருள் எனத் தெரிந்துகொள்வதற்கு என அனைத்து வகையிலும் உதவக்கூடியது. நாம் போகுமிடங்களில் எவ்வளவோ இருக்கும், அவற்றுள் பெரும்பாலானவை தேவையற்றவையாக இருக்கும், அந்த இடத்தில் அனைத்தையும் படித்து நம்மைக் குழப்பிவிடும் என நினைக்க வேண்டாம். எதைப் படிக்க வேண்டும் அல்லது எதைப்பற்றி அறிய வேண்டுமோ அதை விரலால் சுட்டிக்காட்டிய பின்னர் அதைப் படித்துக் காண்பிக்கும் (Touch Reading).

உதாரணமாக ஒரு புத்தகத்தைப் படிக்க வேண்டுமெனில் திறந்து வைத்த பின்னர் உங்கள் விரலை ஒரு வரியில் வைத்தால், அப்போது தான் படிக்கத் தொடங்கும். ஒரு நிமிடத்திற்கு 150 முதல் 160 வார்த்தைகளைப் படிக்கும் வேகத்தைக் கொண்டது. இந்த வேகத்தை 250 வார்த்தைகள் வரை நமக்கு ஏற்றவாறு மாற்றிக்கொள்ளலாம். புத்தகங்கள், செய்தித்தாள்கள், கணினி அல்லது செல்போன் திரையில் உள்ளவை என அனைத்தையும் இது படித்துச் சொல்லும். இந்தக் கருவி பார்வையை இழந்தவர்கள் மட்டுமல்லாது, படிப்பதற்குச் சிரமப்படுபவர்களுக்கும் பெரிதும் உதவியாக இருக்கும். 

தனக்குத் தெரிந்தவரின் முகத்தை அடையாளம் காணும்விதம் இன்னும் ஆச்சர்யத்திற்கு உரியது. முதல்முறை ஒருவரைச் சந்திக்கும்போது அவரது பெயரை நீங்கள் சொன்னால், அவரது முகம் மற்றும் பெயரை அப்படியே பதியவைத்துக்கொள்ளும். தேவையற்ற பெயர்கள் பதிவாகுமெனக் கவலை வேண்டாம். நீங்கள் கைகாட்டி சொல்லும் பெயரை மட்டுமே பதிவுசெய்து கொள்ளும். அடுத்தமுறை அதே முகத்தைப் பார்த்தவுடன் அவரது பெயரையும், அவர் இங்கே இருக்கிறார் என்பதையும் உங்கள் காதுகளில் சொல்லும். 

Photo Courtesy: OrCam

பொருட்கள் மற்றும் இடங்களின் பெயர்கள் இதேபோல் நீங்கள் சொல்லும்போதோ அல்லது முன்னரே பதிவு செய்தோ வைக்கப்பட்டு இருந்தால், அவற்றைப் பார்த்தவுடன் உங்களுக்குச் சொல்லும். இதேபோல் பணம் எவ்வளவு என உங்கள் விரலை அதன்மீது வைத்ததும் சொல்லிவிடும். எலக்ட்ரானிக் கருவி தானே, இதை ஹேக் செய்துவிட்டால் என்கிற பயம் தேவையற்றது. MY EYE இல் நடைபெறும் அனைத்துச் செயல்பாடுகளும் அந்தக் கருவியினுள்ளே நடைபெறுபவை. வெளியிலிருந்து எந்த இணைப்பும் தேவையில்லை மற்றும் கொடுக்கப்படுவதில்லை. இதனால் இதனை ஹேக் செய்வது இயலாத காரியம். 

இதை நாம “Medical Miracle” என்றே சொல்லலாம். ஆனால், உண்மையில் தொழில்நுட்பம் என்பது எல்லையற்றது. தண்ணீரில் மிதக்கும் பனிப்பாறையின் நுனியை மட்டும்தான் நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம். அதன் ஆழம் மிக அதிகமானது.



Trending Articles

Sponsored