இனி விரல்கள்தாம் கீபோர்டு... எங்கும் எதையும் டைப் செய்யலாம்! #WearableTechnologySponsored PC: Tap Systems Inc

1980 களில் இணையம் ஆரம்பமானது. 1990 களில் இது அசுர வளர்ச்சி பெற்றது. இதைப் போலத்தான் AI யும். இதன் ஆரம்ப காலகட்டம் இது. இன்னும் சில வருடத்தில் நிச்சயம் அசுர வளர்ச்சியடையும். 

AI (Artificial Intelligence ) எனப்படும் செயற்கை நுண்ணறிவு மனிதனுக்குத் தேவையான வேலையை தொழில்நுட்பத்தின் மூலம் எளிதாக மாற்றக்கூடியது. ரோபோ போல Wearable Technologyயும் இதில் ஒரு வகைதான்.

இணையத்தின் ஈடுபாடு மக்களின் மத்தியில் அதிகரித்த உடனே Wearable Technology வளர்ச்சியும் அதில் மக்களின் பயன்பாடும் அதிகரிக்கத் தொடங்கிவிட்டன. Wearable device என்பது நமது உடம்பில் அணிந்துகொண்டு அதை உபயோகிப்பது. எடுத்துக்காட்டு ஸ்மார்ட்வாட்ச் . 

Sponsored


1975 ம் ஆண்டிலேயே இதற்கு பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பித்து விட்டனர். கால்குலேட்டர் வைத்த வாட்ச்சில்தொடங்கி படிப்படியாக Google Glass, Smart Watch வந்து தற்போது Wearable keyboard வரை இந்தத் தொழில்நுட்பம் முன்னேற்றமடைந்து நிற்கிறது. 

Sponsored


அப்படி என்னதான் ஸ்பெஷல்: 
இந்த wearable Keyboard ஐ புளுடூத் உடன் இணைத்து எந்தவிதமான இடத்திலும் பயன்படுத்த முடியும். இதை ஐந்து விரல்களிலும் மாட்டிக் கொள்ள வேண்டும். ஒவ்வொன்றிலும் தனித்தனி சென்சார்கள் (Sensors) உள்ளன. நீங்கள் கையில் அணிந்து ஆன்(ON) செய்தால் எழுத ஆரம்பிக்கலாம். முதலில் எப்படி, எந்த விரலுக்கு எந்த எழுத்து என்பதை விளக்க பயிற்சி வீடீயோக்கள் உதவும். அதன் மூலம் கற்றுக்கொள்ள முடியும். 

ஒவ்வாரு விரலுக்கும் ஆங்கில உயிரெழுத்தான (Vowels) எனப்படும் A,e,i,o,u கொடுக்கப்படுகிறது. கட்டை விரலுக்கு A என்றால் அப்படியே வரிசையாகச் சுண்டுவிரலுக்கு U முடியும். 

வேறொரு எழுத்தை type செய்ய வேண்டுமென்றால் இரண்டு விரல்களைச் சேர்த்து பயன்படுத்த வேண்டும். உதாரணமாக S என்றால் கட்டை விரல், சுண்டு விரலை ஒரே நேரத்தில் அழுத்த வேண்டும். எல்லா எழுத்தும் பழக அந்த tutorial Video கற்றுக்கொடுக்கும்.
இது type செய்வதற்கு மட்டுமல்லாமல் லேப்டாப் உபயோகித்தால் Mouse க்கு பதிலாக பயன்படுத்தலாம். கேமிங், VR Controller க்கும் பயன்படுத்தலாம். சுமார் 8-9 மணி நேரம் சார்ஜ் இருக்கும். விலை 150 டாலர். நம்ம ஊர் மதிப்பில் 9000 ரூபாய்க்கு விற்பனைக்கு வந்துள்ளது.

wearable Technology ஐ பயன்படுத்தி ஒரு பொருளைத் தயாரிப்பதற்கு முன் ஐந்து விஷயங்கள் அதில் இருக்கிறதா என்பதைக் கவனிக்கலாம்.

1. கைகள் தேவையில்லை. (Hands free)
2. எப்போதும் செயல்பட வேண்டும். (Always on)
3. சுற்றுப்புறச் சூழலுக்கு உகந்ததா? (Environment Aware)
4. தொடர்பிலே இருக்க வேண்டும். (Connected)
5. எந்த மென்பொருளின் அடிப்படையில் வேலை செய்யும்? (Development platform )

இணையத்தின் (Internet) பயன்பாடு அதிகரிக்க அதிகரிக்க அதைச் சார்ந்து பல wearable Technologyன் பொருளாதார மார்க்கெட் சந்தையும் அதிகரித்து வருகிறது. 2012 ல் wearable Technology ன் சந்தை சுமார் 17,000 கோடி($2.7 பில்லியன்) என்றும் 2018 ல் சுமார் 53,000 கோடி ($8.3 பில்லியன் ) வரை இதனின் உலக மார்க்கெட் சந்தையின் மதிப்பு உயர்ந்துகொண்டே வருகிறது. 

இப்படியே சென்றால் தற்போதுள்ள இணையத்தின் பயன்பாடு வாழ்வில் நீங்காத ஒன்றாக எப்படி மாறியிருக்கிறதோ, அதைப் போல இந்தத் தொழில்நுட்பமும் குறுகிய காலத்தில் மிகப்பெரிய வளர்ச்சி கண்டு மக்களின் மத்தியில் பரவலாகக் காணப்படும்.
 Trending Articles

Sponsored