தகவல்களைத் திருடும் மொபைல் ஆப்ஸ்... பர்மிஷன் கொடுப்பதில் இருக்கு சூட்சுமம்! #GadgetTipsSponsoredலகம் முழுவதிலும் பல மில்லியன் கணக்கிலான ஸ்மார்ட்போன்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. அவற்றில் பயன்படுத்துவதற்காக கிட்டத்தட்ட அதே அளவிலான மொபைல் ஆப்ஸ்கள் ப்ளே ஸ்டோரில் குவிந்து கிடக்கின்றன. கூகுளாக இருந்தாலும் சரி, ஆப்பிளாக இருந்தாலும் ஒரு ஆப்பை பல பரிசோதனைகளுக்கு உட்படுத்தி, அவற்றை இன்ஸ்டால் செய்து பயன்படுத்துவதால் எந்தவித பாதிப்புகளும் ஏற்படாது என்பது உறுதிசெய்யப்பட்டபிறகே ஸ்டோர்களில் பதிவேற்றம் செய்கின்றன. ஆப்பிள் பல வருடங்களாகவே இந்த நடைமுறையைக் கடைப்பிடித்து வருகிறது. கூகுளும் இதைச் செய்து வந்தாலும் கடந்த சில வருடங்களாக முன்பைவிடச் சற்று அதிகமாகவே இந்த விஷயத்தில் கவனமாக இருக்கிறது.  

'இந்த ஆப்களை இன்ஸ்டால் செய்யாதீர்கள்! தகவல்கள் திருடப்படலாம்!', 'இந்த ஆப், ஸ்மார்ட்போனின் இயக்கத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது'. இதுபோன்ற செய்திகளை அவ்வப்போது ஆன்லைனில் படித்திருப்போம். அனைத்து ஆப்களும் மால்வேர்கள் எதுவும் இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டபிறகே ஸ்டோர்களில் கிடைக்கிறது என்றால், ஆப்களுக்கு மொபைல்களில் இருந்து தகவல்களைச் சேகரிக்கும்/திருடும் வாய்ப்பு எப்படிக் கிடைக்கிறது? இந்த இடத்தில் நாம் கவனிக்க வேண்டிய விஷயம்தான் ஆப் பர்மிஷன் (App Permission). 

Sponsored


பர்மிஷன் என்றால் என்ன?

Sponsored


ஆப் பர்மிஷன் என்பது ஒரு ஆப். நமது மொபைலில் இருக்கும் தகவல்களையோ அல்லது செட்டிங்ஸ்களையோ பயன்படுத்துவதற்காகக் கேட்கும் அனுமதி என்று வைத்துக்கொள்ளலாம். ஒரு ஆப், மொபைலில் இயங்குவதற்கு சில முக்கியத் தகவல்கள் தேவைப்படும். ஆண்ட்ராய்டு இயங்குதளம், பயன்பாட்டிற்கு வந்த தொடக்கத்தில் இருந்தே ஆப் பர்மிஷன் என்ற விஷயம் நடைமுறையில்தான் இருக்கிறது. ஆனால் முன்னர் வெளியான பதிப்புகளில் இந்த அனுமதி கேட்கும் நடைமுறை மறைமுகமாகவே இருந்து வந்தது. ஆப்கள் ஓர் மொபைலில் என்னென்ன தகவல்களை அணுகுகின்றன என்பதைப் பரிசோதித்துத் தெரிந்துகொள்ளலாமே தவிர அதை மாற்ற முடியாது. இந்த நடைமுறையினால் ஆப்கள் தகவல் திருடுவது அதிகமாக நடைபெறுவதாக விமர்சனங்கள் எழுந்தன. அதைத் தொடர்ந்து கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்டு மார்ஷ்மெல்லோ (Marshmalllow) இயங்குதளத்திலிருந்து ஆப் பர்மிஷன் நடைமுறையை மாற்றியயமைத்தது. இதன் மூலமாக ஒரு ஆண்ட்ராய்டு பயனாளர் ஒரு ஆப் எந்தத் தகவல்களை அணுக வேண்டும் என்பதை அவர்களாகவே முடிவுசெய்து கொள்ளலாம். அதன் பிறகு, இந்த ஆப் பர்மிஷன் வசதியை மேம்படுத்திக்கொண்டே வருகிறது கூகுள். 

 எந்த ஆப்புக்கு என்ன பர்மிஷன் ?

ஒரு ஆப்பை மொபைலில் இன்ஸ்டால் செய்து பயன்படுத்தும்போதே தகலவல்களை அணுகுவதற்கு அனுமதி கேட்கும். பலர் அதைப் படித்துப்பார்க்காமல் "ALLOW" என்பதைத் தேர்ந்தெடுப்பார்கள். இது தவறான விஷயம். ஒரு ஆப் பர்மிஷன் கேட்கும்போது அது எதை எதையெல்லாம் பயன்படுத்த அனுமதி கேட்கிறது என்பதைக் கவனிக்க வேண்டியது அவசியம். எடுத்துக்காட்டாக, மொபைலில் இருக்கும் மேப்ஸ் (Maps) ஆப் செயல்படுவதற்கு Location என்ற பர்மிஷன் மட்டுமே போதுமானது, அதற்கு Contact என்பதோ, Telephone என்பதோ தேவையில்லாத  ஒன்றுதான். இது போல வாட்ஸ்அப் போன்ற ஆப்களுக்கு Contact-டை அணுகக்கூடிய பர்மிஷன் நிச்சயம் தேவைப்படும். ஸ்மார்ட்போன்களில் Location, Contacts, camera, storage, மற்றும் microphone போன்றவை முக்கியமாக கவனிக்க வேண்டியவை. ஒரு ஆப்பிற்கு Contacts-ஐ அணுக பர்மிஷன் தரப்படும்போது அந்த ஆப் மொபைலில் பதிவு செய்யப்பட்டிருக்கும் தொடர்பு எண்களை அதனால் ஆராய முடியும். microphone என்பதற்கு அனுமதி கொடுக்கப்பட்டால் மைக்கின் மூலமாக மொபைலைச் சுற்றிக் கேட்கும் ஒலிகளைப் பதிவு செய்ய முடியும். storage-க்கு கொடுக்கப்பட்டால் மொபைலில் பதிவுசெய்து வைத்திருக்கும் புகைப்படம், வீடியோ என அனைத்துத் தகவல்களையும் அந்த ஆப் அணுக முடியும். எனவே, ஒரு ஆப்பை இன்ஸ்டால் செய்து பயன்படுத்தும்போது அந்த ஆப் எதற்காக இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்கிறதோ அதற்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்தால் போதுமானது. அதன் மூலமாகவே நமது தகவல்களை ஆப் சேகரிப்பதை தடுக்க முடியும். அப்படித் தேவையற்ற விஷயங்களை அணுக ஒரு ஆப் பர்மிஷன் கேட்கிறது என்றால், உஷாராக இருக்க வேண்டியது அவசியம். அதே வேளையில் சில பர்மிஷன்களைத் தராமல் போனால் ஆப்பின் செயல்பாட்டில் சிரமம் இருக்கலாம். எனவே, அதற்குத் தேவைப்படும் அடிப்படையான பர்மிஷன் அனுமதிக்கப்பட வேண்டும். இந்த டிஜிட்டல் யுகத்தில் எப்போதும் கவனமாக இருத்தல் அவசியம்!Trending Articles

Sponsored