டிஜிட்டல் பாக்ஸ் ஆபீஸ் கில்லி... கரிகாலனா... வெற்றிமாறனா? #Kaala



மிழ் சினிமா ரசிகர்கள் படம் ரிலீஸ் ஆவதைக் கொண்டாடும் அளவுக்கு ஃபர்ஸ்ட் லுக், டீசர், ட்ரெய்லர் என எல்லாவற்றையும் கொண்டாட ஆரம்பித்துவிட்டார்கள். ஒரு படத்துக்கான எதிர்பார்ப்பு அதன் யூடியூப் வியூஸ்களால் நிர்ணயிக்கப்படும் அளவுக்கு இன்றைய சினிமாவை டிஜிட்டல் உலகம் ஆள்கிறது. முன்னணி நடிகர்களின் பட டீசர்கள் வெளியாகும்போது இரவு 12 மணிக்குக் கண்விழித்து ட்விட்டர் ட்ரெண்டிங்கில் நம்பர் 1 கொண்டு வருவது ரசிகர்களின் கொண்டாட்டமாக மாறிவிட்டது. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வெளியாகவுள்ள காலா படத்தின் டீசர் நேற்று வெளியானது. முன்னரே சமூக வலைதளங்களில் டீசர் கசிந்ததால், குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே டீசரை அதிகாரப்பூர்வமாகவே வெளியிட்டது படக்குழு. 

Sponsored


Sponsored


ரஜினிகாந்தின் முந்தைய படமான கபாலியின் 24 மணி நேரச் சாதனையை 12 மணி நேரத்தில் காலா தாண்டியது. காலா டீசர் 12 மணி நேரத்தில் 35 லட்சம் யூ-டியூப் வியூஸையும், 2.4 லட்சம் லைக்ஸையும், 28 ஆயிரம் டிஸ் லைக்ஸையும் பெற்றது.

Sponsored


சென்ற வருடத்தின் யூ-டியூப் ஹிட்டாகப் பார்க்கப்பட்ட மெர்சல் முதல் 24 மணி நேரத்தில் 1.12 கோடி யூ-டியூப் வியூஸையும், 7.28 லட்சம் லைக்ஸையும், 1.59 லட்சம் டிஸ் லைக்ஸையும் குவித்தது. இந்தச் சாதனையை காலா டீசர் நெருங்கவில்லை. இது 24 மணி நேரத்தில் 96 லட்சம் வியூஸையும், 3.2 லட்சம் லைக்ஸையும் மட்டுமே குவித்தது. டிஸ்லைக்ஸை பொறுத்தமட்டில் 43 ஆயிரம் என்ற அளவில்தான் உள்ளது. 

காலா டீஸர் வெளியானவுடன் இணையத்தில் அதிகம் தேடப்பட்ட வார்த்தைகளில் கபாலி டீசர், மெர்சல் டீசர் சாதனை, வீடியோ மீம்ஸ் ஆகியவை இடம்பிடித்துள்ளன. வேங்கை மகன் ஒத்தையில வந்திருக்கேன் என்ற வசனம் இடம் பெற்றிருப்பதால் தனுஷ் நடித்த வேங்கை படம் பற்றியெல்லாம் தேடியிருக்கிறார்கள் நெட்டிசன்கள். 

காலா டீசர் இந்தியாவின் 18 மாநிலங்களில் மட்டுமே தேடப்பட்டுள்ளது. அதிகம் தேடப்பட்ட மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. கதைக்களமான மும்பை 7-வது இடத்தில் உள்ளது. டீசரின் வடிவேலு, தோனி, மோடி வெர்ஷன்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன. டீசர் தேதி தள்ளிப்போனது, சமூக வலைதளங்களில் வெளியானது போன்ற காரணங்களால் காலாவால் மெர்சல் சாதனையை முறியடிக்கவில்லை. இவையெல்லாம் இருந்தாலும் டிவிட்டர் ட்ரெண்டிங்கில் இந்தியா உட்பட 8 நாடுகளில் நம்பர் 1 ட்ரெண்டிங்கைப் பிடித்திருக்கிறார் காலா. 



Trending Articles

Sponsored