இதைச் செய்தாலே டோரன்ட் இல்லாமல் டவுன்லோடு செய்யலாம்! #LeechingSponsoredனி உங்களுக்குத் தேவையான ஃபைலை டோரன்டில் இருந்து டவுன்லோடு செய்ய டோரன்ட் சாப்ட்வேர் (Torrent Software) இன்ஸ்டால் செய்யத் தேவையில்லை. அதற்குப் பதிலாக IDM (Internet Download Manager) மூலமாக Torrent Leeching தளங்கள் உதவியுடன் பைலை நேரடியாக உங்கள் பிரவுசரிலேயே டவுன்லோடு செய்துகொள்ளலாம்.

டோரன்ட் லீச் தளங்கள் வழியாக டோரென்ட்ஸை பதிவிறக்கம் செய்வதன் நன்மைகள்:

  • டோரன்ட் டிராஃபிக் உங்கள் நெட்வொர்க்கில் பிளாக் செய்யப்பட்டிருந்தால்கூட டோரன்ட்டை கொண்டு டவுன்லோடு செய்யலாம்.
  • உங்கள் torrent file/magnet லிங்கை லீச்சிங் தளத்தில் இணைத்துவிட்டால் போதும் அது தானாகவே லீச் செய்துவிடும்.
  • இந்த முறையில் டவுன்லோட் செய்வதால் torrent health ஒரு விஷயமே இல்லை. இதனால் நீங்கள் குறைந்த சீட்ஸ் (Seeds) கொண்டே பதிவிறக்க முடியும்
  • IDM வழியாக டவுன்லோட் செய்வதால் உங்கள் டவுன்லோடை எப்போது வேண்டுமானாலும் pause/resume செய்துகொள்ளலாம்.
  • உங்களுக்கு இணையச் சேவை அளிக்கும் நிறுவனத்தால் (Internet Service Provider - ISP) டோரண்ட் டிராஃபிக்கை கண்டறிய முடியாது.
  • சட்டரீதியாக டோரன்டிலிருந்து காப்புரிமையற்ற ஒரு ஃபைலை டவுன்லோட் செய்வது குற்றம் கிடையாது. தனிப்பட்ட ஃபைல் ஷேரிங்கிற்காக இதைத் தாராளமாக பயன்படுத்தலாம்.

டாப் 5 இலவச டொரண்ட் லீச் தளங்கள்

BitPort.io

Sponsored


இது அதிகம் பேரால் பரிந்துரைக்கப்படும் டோரன்ட் லீச்சிங் தளம். இது டோரன்ட் ஃபைலை அதிக வேகத்தில் அதன் அதிவேக சர்வர்களுள் இருந்து டோரன்ட் க்லைன்ட் (Torrent Client) இல்லாமல் டவுன்லோட் செய்கிறது. இதை நீங்கள் எந்த டிவைஸிலிருந்தும் அணுக இயலும். நீங்கள் அவற்றைப் பதிவிறக்கம் செய்யாமல் மொபைல் அல்லது லேப்டாப்பில் உங்கள் திரைப்படங்களை ஸ்ட்ரீம் செய்ய முடியும்! இதனால் பதிவிறக்கும் நேரம் சேமிக்கப்படுகிறது.

Sponsored


Zbigz.com

இது கிளவுட் கம்ப்யூட்டிங் அடிப்படையாகக் கொண்ட டோரன்ட் லீச்சிங் தளங்களில் முதன்மையானது. நீங்கள் செய்ய வேண்டியது உங்கள் .torrent ஃபைலை அல்லது Torrent URL Magnet இணைப்பைப் பதிவேற்றம் செய்து "Go" பட்டனை கிளிக் செய்யவும். பின்னர் கேச்சிங்  (Caching) முடிந்தவுடன் நீங்கள் எளிதாகப் பதிவிறக்க "Download as Zip" பட்டனை கிளிக் செய்யவும். இந்தத் தளத்தில் நீங்கள் sign up செய்யாமலும் டவுன்லோட் செய்துகொள்ளலாம்.

FileStream.me

இந்தத் தளம் பாதுகாப்பான டவுன்லோட் சேவைகளில் சிறந்து விளங்குகிறது. இது சாதாரண HTTP சார்ந்த பதிவிறக்கம் மட்டுமின்றி மிகவும் பாதுகாப்பான HTTPS புரொட்டோகால் (HTTPS protocol download) பதிவிறக்கத்தையும் வழங்குகிறது. இதை உங்கள் ISP-யால் கண்டுபிடிக்க இயலாது. தவிர இந்தத் தளம் டோரன்டில் இருந்து தனிப்பட்ட கோப்புகளைப் பிரித்து தேர்ந்தெடுப்பதற்கான விருப்பத்தை அளிக்கிறது, தேர்ந்தெடுக்கப்பட்ட பைலை zip பைலாக பதிவிறக்க உதவுகிறது.

Seedr.cc

இவ்வகையான தளங்களிலேயே இது சிறந்த யுஸர் இன்டர்பேஸை (User Interface) கொண்டுள்ளது. மிகவும் குறைவான வரம்புகளைக் கொண்ட மிகப்பெரிய இலவச டோரன்ட் லீச்சீங் இணையதளம் இதுதான். இது மிகவும் உறுதியான தளமாக விளங்குகிறது. இது மட்டுமின்றி, மேக்னட் URL அப்லோட் (Magnet URL Upload) மற்றும் ஆன்லைன் ஸ்ட்ரீமிங்கையும் தருகிறது. பல ஃபைல்களை உள்ளடக்கியிருக்கும் ஒரு டோரன்ட்டிலிருந்து உங்களுக்குத் தேவையான ஃபைல்களை மட்டும் ZIP ஃபைலாக பதிவிறக்கும் வசதியையும் கொண்டுள்ளது.

Direct-torrents.com

இலவச டோரன்ட் லீச்சிங் சேவைகளை பயன்படுத்த இது எளிதான தளமாகும். உங்களது டோரன்ட் URL அல்லது மேக்னட் இணைப்பை உள்ளிட்டு, உங்களுக்குத் தேவையான ஃபைலை இதன் மூலம் நேரடியாக டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

மேற்கண்ட தளங்களை பயன்படுத்தி உங்கள் கருத்துகளை கமென்ட் செய்யுங்கள்.Trending Articles

Sponsored