ஹூவாயின் 40 MP கேமரா மொபைல்... நோக்கியாவின் சாதனையை முறியடிக்குமா? #P20ProSponsoredமொபைல் என்றாலே பிறருடன் பேசுவதற்கு மட்டும்தான் என்று இருந்த காலம் ஒன்று இருந்தது. அதன் பிறகு ஸ்மார்ட்போன்கள் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் பலவித வசதிகளை உள்ளடக்கியதாக இருந்தது.  இப்பொழுதெல்லாம் ஒரு ஸ்மார்ட்போனை வாங்க விரும்புபவர்கள் கடைக்கு சென்றால் கேட்கும் கேள்வி, கேமரா குவாலிட்டி எப்படி இருக்கும் என்பதுதான். இப்பொழுது வெளியாகும் போன்களின் கேமரா குவாலிட்டி என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.  இன்றைக்கு ஒப்போ, விவோ, ஆப்பிள் என்று பல்வேறு  மொபைல் நிறுவனங்கள் போட்டோகிராபியில் தங்களுடைய கேமராதான் பெஸ்ட் என்று சொல்லிக்கொள்கின்றன. இதற்கு விதை போட்டது வேறு யாருமில்லை நோக்கியாதான்.

நோக்கியா 'தி லேஜென்ட்'

Sponsored


2012-ம் ஆண்டு ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் மெதுவாக சந்தையை படிப்படியாக ஆக்கிரமித்துக்கொண்டிருந்த காலகட்டம். ஆப்பிளும் , சாம்ஸங்கும் நோக்கியவிற்கு பெரிய போட்டியாளராக மாறத் தொடங்கியிருந்தார்கள். ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் நோக்கியா போன்களை வெளியிடவில்லை என்றாலும் தனது பங்கிற்கு அவ்வபோது சிம்பியான் இயங்குதளத்தில்  ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்திக்கொண்டுதான் இருந்தது. அப்பொழுதெல்லாம் எந்த மொபைலின் கேமரா நல்லா இருக்கும் என்று கேட்டால் பெரும்பாலோனோரிடம் இருந்து வரும் பதில் சோனியாகத்தான் இருக்கும். அந்தளவிற்கு கேமரா டிபார்ட்மெண்ட்டில் நல்ல பெயரை தக்கவைத்துக்கொண்டிருந்தது. அப்படிப்பட்ட நிலையில், சோனி நிறுவனம் மட்டுமல்ல ஒட்டுமொத்த மொபைல் சந்தையே வியந்து பார்க்கும்படி ஒரு போனை அறிமுகப்படுத்தியது நோக்கியா.

Sponsored


Nokia PureView 808 என்ற அந்த மொபைல் 41 மெகா பிக்ஸல் கேமராவைக் கொண்டிருந்தது. பெரும்பாலும் ஒற்றை இலக்கத்திலேயே மொபைல்களின் கேமரா இருந்து வந்த நிலையில் இரட்டை இலக்கத்தில் தனது மொபைலில் அறிமுகப்படுத்தி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியது நோக்கியா. கார்ல் செயிஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட கேமராவைப் பயன்படுத்தியிருந்தது. அதோடு நிற்கவில்லை நோக்கியா; அடுத்த வருடமே Nokia Lumia 1020 என்ற மொபைலையும் அறிமுகப்படுத்தியது. Nokia PureView 808 மொபைலின் அப்கிரேடாக வெளியிடப்பட்ட அது 2 GB ரேம், 64 GB இன்டர்னல் மெமரி, OIS , DOLBY Audio என அப்பொழுதே அசத்தியது.

அதிலும் 3-axis ஆப்டிகல் இமேஜ் ஸ்டபிலைசேஷன் வசதி இன்றைக்கு வெளியாகும் பெரும்பாலான மொபைல்களில் கூட கிடைப்பதில்லை. இப்படி ஒரு போனை நோக்கியா அறிமுகப்படுத்திய பின்னர்தான் மொபைல்களின் இருக்கும் கேமராவிற்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்ற எண்ணமே பல நிறுவனங்களுக்கு தோன்றியது. நோக்கியா வெளியிட்ட 41 MP கேமரா என்ற மைல்கல்லை, இதுவரைக்கும் எந்த நிறுவனமும் தொட்டதில்லை. ஆனால், தற்போது ஹூவாய் நிறுவனம் அதற்கு கிட்ட நெருங்கியிருக்கிறது. ஹூவாய் விரைவில் அறிமுகப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படும் புதிய ஸ்மார்ட்போன் 40 MP கேமராவைக் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நோக்கியாவை விஞ்சுமா ஹூவாய்


சமீபகாலமாகவே ஹூவாய் நிறுவனம் புதிய வசதிகளைக் கொண்ட ஸ்மார்ட்போன்களை உருவாக்குவதில் ஈடுபாடு காட்டி வருகிறது. அந்த வகையில் அந்நிறுவனம் விரைவில் அறிமுகப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படும் P20 Pro என்ற ஸ்மார்ட்போனில்  40-மெகா பிக்சல் கேமரா பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த போனில் LEICA நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட மூன்று கேமராக்கள் இருக்கலாம் என தெரிகிறது. இணையத்தில் வெளியாகியிருக்கும்  P20 Pro ஸ்மார்ட்போனின் படங்கள் அதை உறுதி செய்யும் வகையில் இருக்கின்றன. அதே வேளையில் முன்புறம் இரண்டு பின்புறம் மூன்று என மொத்தமாக ஐந்து கேமராக்களைக் கொண்ட ஸ்மார்ட்போனை தயாரிக்கும் முயற்சியில் நோக்கியாவும் இறங்கியிருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியாகியுள்ளது. ஹூவாய் நிறுவனம் உண்மையாகவே 40-மெகா பிக்சல் கேமரா கொண்ட ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தினாலும் Nokia Lumia 1020-வின் கேமராவிற்கு அருகில் செல்லத்தான் முடியுமே தவிர அதனை விஞ்ச முடியாதுTrending Articles

Sponsored