300 MBPS வேகம்... 1200 ஜிபி டேட்டா... பிராட்பேண்டு அதிரடி! #AirtelSponsoredபுதிதாக வீடு வாங்கினாலோ அல்லது மாறினாலோ வீட்டுக்கு கேஸ் கனெக்‌ஷன், லேண்ட்லைன் கனெக்‌ஷன் வாங்கும் முன் பிராட்பேண்டு கனெக்‌ஷன் வாங்கிவிடுகிறோம். ’இணையம் ஒன்றி ஒரு பைட்டும் அசையாது” என்பதுதான் நெட்மொழி. மொபைல் டேட்டாவே தினமும் 1 ஜி.பி.க்கு மேல் கிடைக்கிறது என்றாலும் பிராட்பேண்டு இல்லாமல் ஒரு கை ஒடிந்தது போலத்தான் இருக்கும்.  ACT, Hathway என பல பிராட்பேண்டு நிறுவனங்களும் போட்டிப்போட்டுக் கொண்டு ஆயிரக்கணக்கில் ஜி.பி.க்களை அள்ளி இறைக்கிறார்கள். "இந்தப் போட்டியில் நாங்களும் தான் பாஸ் இருக்கோம்" என அவ்வப்போது ஏர்டெல், பி.எஸ்.என்.எல்லும் ஆஃபர்களை அறிவிப்பதுண்டு. இப்போது, அந்த வரிசையில் ஏர்டெல் ஒரு அதிரடியை இறக்கியிருக்கிறது.

முதலில் லேண்ட்லைனுக்குப் பயன்படுத்தப்படும் கேபிள் மூலமே பிராட்பேண்டு நம் வீட்டுக்கு வந்தது. அதன் பின் Coaxial cable என மாறி இப்போது  Fiber to the home வந்து நிற்கிறது. இதுவரை நாம் பார்த்த கேபிள்களில் ஃபைபர் கேபிள்தான் மெலிதானது. இந்த கேபிள் மூலம் இதுவரை 40 MBPS மற்றும் 100  MBPS வேகத்தில் 200 முதல் 700 ஜிபி வரை கொடுத்து வந்தது ஏர்டெல். இதைத் தவிர அவ்வப்போது போனஸ் டேட்டாவும் கிடைக்கும். இது ஒரு வீட்டுக்குத் தேவையான போதுமான டேட்டா என நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் “இதுவும் பத்தல” என்ற குரல்கள் ஆங்காங்கே எழுந்தன. புதிய புதிய கேட்ஜெட்களின் வருகையினாலும், எதையும் கிளவுட் சேவை மூலமே பயன்படுத்துவதாலும் இன்னும் சிறப்பான சேவையை வாடிக்கையாளர்கள் எதிர்பார்த்தனர். அதை ஈடுக்கட்டும் விதமாக இப்போது 300  MBPS வேகத்தில் மாதம் 1200 ஜிபி இணையத்தை வழங்குவதாக அறிவித்திருக்கிறது.

Sponsored


இதைத் தவிர இந்த பிளானுடன் ஓர் ஆண்டுக்கு அமேஸான் பிரைம் சப்ஸ்கிர்ப்ஷனும் இலவசமாக கிடைக்கும். கூடவே ஏர்டெல் வசம் இருக்கும் மற்ற கண்டென்ட்கள் ஆன வின்க் (Wynk) ம்யூஸிக், ஏர்டெல் டிவி ஆகியவையும் இலவசமாக கிடைக்கும். 

Sponsored


ஏர்டெல் ப்ளான்ஸ்

ACT

Hathway

மற்ற இணைய நிறுவனங்களுக்கும் ஏர்டெல்லுக்கும் இருக்கும் முக்கியமான வித்தியாசம் இதில் லேண்ட்லைன் சேவையும் உண்டு. அதுவும் அன்லிமிட்டெட் அழைப்புகளைத் தருகிறது ஏர்டெல். உள்ளூர் மற்றும் எஸ்.டி.டி அழைப்புகளை இதில் இலவசமாகச் செய்துகொள்ளலாம்.

“இன்னமும் பிராட்பேண்டு கனெக்‌ஷன் தான் வீட்டுக்குத் தேவையான இணையத்துக்கான சிறந்த வழியாக மக்கள் பார்க்கிறார்கள். அவர்களின் இணையப் பயன்பாடும் நாம் நினைத்தே பார்க்க முடியாத வேகத்தில் வளர்கிறது. இந்தச் சூழலில் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு விலை மற்றும் டேட்டாவில் பல சாய்ஸஸ் தரவே நினைக்கிறோம்” என்கிறார் ஏர்டெல்லின் சி.இ.ஒ ஜார்ஜ் மாதன்.

இன்ஸ்டலேஷன் கட்டணமாக 1000 ரூபாய் வாங்குகிறது ஏர்டெல். இந்த 1000 ரூபாயும் மாதம் 100 ரூபாயாக பில்லில் கழித்துக்கொண்டே வருகிறார்கள். நாம் வழக்கமாக பயன்படுத்தும்  wifi மோடம் இதற்கு பொருந்தாது. எனவே, ஏர்டெல்லே இலவசமாக மோடமையும் தருகிறது. 

பிராட்பேண்டு சேவை என்பது இன்னொரு சிம் கார்டு போன்றது கிடையாது. வாங்கியபின், வேண்டாமென்றால் மாற்றுவதும் எளிது கிடையாது. எனவே, கவனமாக தேர்ந்தெடுக்கவும். அதே சமயம், இருக்கும் சேவையில் பிரச்னை என்றால், மாற்றவும் தயங்க வேண்டாம். ஓர் ஆண்டுக்கு வாங்கினால், விலை குறைவு என்பார்கள். ஆனால், வாங்கிய இரண்டாவது மாதத்தில் இருந்தே பிரச்னை வரவும் செய்யலாம். ஓர் ஆண்டுக்கு பணம் செலுத்தியிருப்பதால், விலகவும் முடியாது. எனவே, மாதாந்திர பிளான்களே பெஸ்ட். சேவை சரியில்லையெனில் மாற்றிக்கொள்ள இது ஏதுவாக இருக்கும்.Trending Articles

Sponsored