``உண்மைதான்... லாக்அவுட் செஞ்சாலும் இந்த வழிகளில் கண்காணிக்கிறோம்!” - ஒப்புக்கொண்ட ஃபேஸ்புக்Sponsoredடேட்டா. சில வருடங்களாக அதிகம் பேசப்பட்டு வரும் சொல். கடந்த சில வாரங்களாக இன்னும் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. காரணம் ஃபேஸ்புக். வரும் காலங்களிலும் இன்னும் இன்னும் பேசப்படும். ஏனெனில், உலக பொருளாதாரத்தில் 20 சதவிகிதத்தை முடிவு செய்வது நம்மைப் பற்றிய இந்த டேட்டாதான்.

கடந்த வாரம் மார்க் சக்கர்பெர்க் 500க்கும் அதிகமான கேள்விகளுக்கு செனட்டர்கள் முன் பதிலளித்தார். பல கேள்விகளுக்கு “அப்புறம் சொல்றேன்” என வாய்தா வாங்கினார். கடைசிவரை ஃபேஸ்புக் எப்படி செயல்படுகிறது என்பது பற்றி வாயே திறக்கவில்லை மார்க். இப்போது, பதில் சொல்லாத கேள்விகளுக்கான பதிலை அனுப்பி வருகிறது ஃபேஸ்புக். அதிலிருந்து சில விஷயங்களை மட்டும் தனது பிளாகில் வெளியிட்டு வருகிறது. அந்த வரிசையில் ஃபேஸ்புக் இப்போது ஒத்துக்கொண்டிருக்கும் விஷயம்தான் ``நீங்க ஃபேஸ்புக்கில் லாக் இன் செய்யாதபோதும் உங்களைக் கண்காணிக்கிறோம்” என்பது.

Sponsored


இந்தப் பதிவில் நான்கு முக்கியமான டூல்களைப் (Tool) பற்றி பேசியிருக்கிறது ஃபேஸ்புக்

Sponsored


1) Social plugins:

  எந்த இணையதளத்துக்குச் சென்றாலும் “எங்களை லைக் பண்ணுங்க பாஸ்” என ஃபேஸ்புக்கின் லைக் சிம்பிள் முன்னால் வந்து நிற்கும். அந்த ப்ளக் இன் இருக்கும் எந்த இணையதளத்துக்குச் சென்றாலும் ஃபேஸ்புக்கும் நம்மை பின்தொடர்கிறது என்று அர்த்தம். 

2) Facebook Login:

இது பெரும்பாலும் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். நிறைய இணையதளங்களில் புதிதாக ரெஜிஸ்டர் செய்யாமல், ஃபேஸ்புக் அல்லது கூகுள் லாக் இன்களைப் பயன்படுத்தி உள்ளே நுழையலாம். அபப்டி நுழையும்போது ஃபேஸ்புக் நமது நடவடிக்கைகள் ஒன்றை விடாமல் கவனிக்கிறது.

3) Facebook Analytics:

 நிறைய நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களைப் பற்றி அறிந்துகொள்ள ஃபேஸ்புக் தரும் சேவைகளைப் பயன்படுத்துவதுண்டு. அந்த இணையதளங்களில் நம் கண்களுக்கு ஃபேஸ்புக்கின் எந்த விஷயமும் தெரியாது. ஆனால், அப்போதும்  நாம் என்னவெல்லாம் செய்கிறோம் என்பதை உன்னிப்பாக நோட்ஸ் எடுத்துக்கொண்டுதான் இருக்கும். 

4) Facebook ads and measurement tools:

 ஃபேஸ்புக் விளம்பரதாரர்களில் விளம்பரங்களைப் பயன்படுத்தும் இணையதளங்கள் மற்றும் மொபைல் ஆப்ஸை நாம் பயன்படுத்தினாலும் ஃபேஸ்புக்கின் ராடாரின் கீழ் நாம் வந்துவிடுவோம். சுருக்கமாகச் சொன்னால் ஃபேஸ்புக் ஒரு டிஜிட்டல் பிக் பாஸ். நம்மால் ஓடவும் முடியாது; ஒளியவும் முடியாது.

ஒரு இணையதளத்துக்குள் நாம் நுழைந்தால் என்னவெல்லாம் நடக்கிறது?:

இப்போது நாம் ஒரு இணையதளத்துக்கு செல்ல நினைக்கிறோம். அப்போது, நாம் பயன்படுத்தும் பிரவுசர் நம் ஐபி முகவரி, என்ன பிரவுசர் வெர்ஷன், எந்த ஆப்ரேட்டிங் சிஸ்டம் பயன்படுத்துகிறோம், குக்கீஸ் மூலம் இதற்கு முன் என்ன என்ன இணையதளத்தைப் பார்த்திருக்கிறோம் போன்ற தகவல்களுடன் சென்று அந்தத் தளத்தின் சர்வரின் கதவைத் தட்டும். இப்போது அந்த இணையதளம் பதிலுக்கு இரண்டு விஷயங்களைத் தரும். ஒன்று, அந்தத் தளத்தின் கண்டென்ட்; இரண்டாவது ”இந்த எல்லா தகவல்களையும் நான் சொல்லும் நிறுவனங்களுக்கும் கொடுத்துவிடு” என்ற கட்டளை. ஆக, அந்த இணையதளம் ஃபேஸ்புக்கின் எதாவது ஒரு சேவையைப் பயன்படுத்தினாலும் நம் ஐபி முகவரி, நமது குக்கீஸ் உள்பட மொத்த டிஜிட்டல் டேட்டாவும் ஃபேஸ்புக் கைவசம் வந்துவிடும்; ஆனால் நாம் போகவே இல்லை.

நம்மைப் பற்றிய தகவல்களை வைத்து வியாபாரம் செய்வது சரியா தவறா என்பது ஒருபுறமிருக்கட்டும். ஆனால், நமக்கே தெரியாமல் இதுபோன்ற தகவல்களை எடுப்பது சரியா? நீங்கள் என்ன நினைக்கறீர்கள்? கமென்ட் பாக்ஸில் உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள்.Trending Articles

Sponsored