``சாரி சார்... வேற இடம் பாத்துக்குங்க!" - பிட்காயின் மைனர்களுக்கு செக் வைத்த ஆப்பிள்கிரிப்டோ ஜாக்கிங்... கிரிப்டோகரன்சி மைனிங் தொடர்பான செய்திகளில் கடந்த சில ஆண்டுகளாக அதிகம் புழங்கும் வார்த்தை. மொபைல், டேப்லட், டெஸ்க்டாப் என எந்த சிஸ்டத்திலும், அதன் உரிமையாளருக்கே தெரியாமல், கிரிப்டோகரன்சியை மைனிங் செய்வதுதான் இந்த கிரிப்டோஜாக்கிங். போதுமான பாதுகாப்பில்லாத கணினிகள் மற்றும் மொபைல் போன்கள்தான் மைனர்களின் முதல் இலக்கு.(இந்த மைனர்கள் வேற. Mining செய்து க்ரிப்டோகரன்ஸியை உருவாக்குபவர்கள்) உடனே கைவரிசையைக் காட்டத்தொடங்கிவிடுவார்கள். இதேபோல மைனிங் செய்யும் மென்பொருள்கள், ஆப்ஸ், இணையதளங்களை நாம் தெரியாமல் பயன்படுத்தினாலும் கிரிப்டோஜாக்கிங் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு.

இப்படி நடக்கும் கிரிப்டோகரன்சி மைனிங்கால், கணினிகளுக்குப் பாதிப்பு ஏற்படும். இது கடந்த பல ஆண்டுகளாகவே நடந்துவரும் ஒரு விஷயம் என்றாலும், சமீபகாலமாகத்தான் கிரிப்டோஜாக்கிங் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சில மாதங்களுக்கு முன்பு ஸ்டார்பக்ஸ் காபி ஷாப்பின் வைஃபை மூலம்கூட கிரிப்டோஜாக்கிங் நடைபெற்றது உங்களுக்கு நினைவிருக்கலாம். இந்த கிரிப்டோஜாக்கிங் நிச்சயம் தடுக்கப்படவேண்டியதுதான் என்றாலும், டெக் நிறுவனங்களால் இதற்கு எதிராக உறுதியாக நடவடிக்கைகள் எடுக்கமுடியவில்லை. அதற்கு காரணம், போதுமான தொழில்நுட்ப சாத்தியங்கள் இல்லை என்பதுதான். ஆனால், தற்போது கிரிப்டோஜாக்கிங்கிற்கு தன்னுடைய டிவைஸ்களில், ``சாரி சார்... வேற இடம் பாத்துக்குங்க!" என ஸ்ட்ரிக்ட்டாக 'நோ' சொல்லியிருக்கிறது ஆப்பிள்.

Sponsored


Sponsored


மேக் கணினிகள், ஐபோன்கள், ஆப் ஸ்டோர், மேக் ஓ.எஸ் என ஆப்பிளின் எந்த டிவைஸிலும், ஓ.எஸ்.ஸிலும் இனி கிரிப்டோஜாக்கிங்கிற்கு அனுமதி கிடையாது. சமீபத்தில் நடந்துமுடிந்த WWDC 2018-க்குப் பின்பு, ஆப்பிளின் மென்பொருள் சேவைகளில் சில விதிகள் மாற்றியமைக்கப்பட்டன. அதன்படி, இந்த கிரிப்டோகரன்சிகளுக்கென தனி விதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

Sponsored


ஆப்பிளுக்கு இது புதிதல்ல!

இது கிரிப்டோகரன்சிகளுக்கு எதிராக ஆப்பிள் எடுக்கும் முதல் நடவடிக்கையல்ல; மேக் கணினிகளில் இருந்துகொண்டு, பேக்கிரவுண்டில் கிரிப்டோகரன்சிகளை மைனிங் செய்ததற்காக சில மாதங்களுக்கு முன்புதான் 'Calendar 2' என்ற ஆப்பை, மேக் ஸ்டோரில் இருந்து நீக்கியிருந்தது ஆப்பிள். தற்போது இன்னும் கூடுதல் கவனத்துடன் டெவலப்பர்களுக்கு நிறைய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அவற்றைப் பார்ப்போம்.

1. மின்சக்தியைத் திறமையாகக் கையாளும் வகையில் ஆப்ஸ் இருக்க வேண்டும். டிவைஸ்களின் பேட்டரியை தேவைக்கதிகமாக பயன்படுத்துவது, அதிக வெப்பத்தை உருவாக்குவது, டிவைஸ்களின் கருவிகளை அதிகளவில் பயன்படுத்துவது போன்ற விஷயங்களை புதிய ஆப்ஸ் கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும், ஆப்களின் பேக்கிரவுண்டில் கிரிப்டோகரன்சி மைனிங் போன்ற அனாவசியமான செயல்பாடுகள் எதுவுமே நடைபெறக்கூடாது.

2. முறையாகப் பதிவு செய்த நிறுவனங்களின் ஆப்களுக்கு மட்டும் விர்ச்சுவல் பணத்தைக் கையாள்வதற்கான அனுமதியளிக்கப்படும். பிற டெவலப்பர்களுக்கு கிடையாது.

3. கிரிப்டோகரன்சிகள் தவிர்த்த பிற பயன்பாடுகளுக்கான மைனிங் செய்யவேண்டுமென்றால், அதற்கு ஆப்பிள் அனுமதியளிக்கும். ஆனால், அதையும் ஐபோன் மற்றும் மேக்கின் பின்னணியில் செய்யமுடியாது; கிளவுடு மூலம் செய்யும் மைனிங்கிற்கு மட்டுமே அனுமதி.

4. கிரிப்டோகரன்சி ஆப்கள் பயனாளர்களுக்கு கிரிப்டோகரன்சிகளை வெகுமதியாக வழங்க அனுமதி கிடையாது. உதாரணமாக, கேமிங் ஆப்கள் தங்கள் பயனாளர்களை ஊக்குவிக்கும் வகையில் ரிவார்டுகளை வழங்கும். கேம் குறித்து சோஷியல் மீடியாவில் ஷேர் செய்தால், அதற்காக பிரத்யேக பாயின்ட்டுகள் கிடைக்கும். இந்த உத்திகளை எல்லாம் கிரிப்டோகரன்சிகள் வாயிலாக ஆப்கள் பயன்படுத்த முடியாது. 

5. கிரிப்டோகரன்சிகளின் பரிமாற்றத்தில், Initial coin offerings (ICO), பிட்காயின் பகிர்ந்துகொள்ளுதல், பிட்காயின் வர்த்தகம் போன்ற அனைத்துக்கும் அனுமதி உண்டு. ஆனால், வங்கிகள் போன்ற சட்டப்படியான அமைப்புகளிடம் வணிகம் செய்தால் மட்டுமே ஆப்பிள் அனுமதிக்கும். முறையற்ற வணிகத்தை அனுமதிக்காது.

மேக் கணினிகளைப் பொறுத்தவரைக்கும் இந்த மைனிங் தடுப்பு நடைமுறைகள் ஓரளவுக்கு பயனளிக்கக்கூடியவை. ஆனால், ஐபோன்களைப் பொறுத்தவரை இது பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தாது. காரணம், கிரிப்டோகரன்சிகளை அதிகளவில் மைனிங் செய்யவேண்டுமெனில் திறன்வாய்ந்த GPU-க்கள் வேண்டும். ஆனால், ஐபோன்கள் அந்தளவுக்கு திறன்மிகுந்தவை கிடையாது. எனவே, ஐபோன் மூலம் மைனிங் செய்வது மைனர்களுக்கு மிகக்குறைந்தளவே பயனளிக்கும். மேலும், அதற்கான செலவும் அதிகம். இதில் கவனிக்கவேண்டிய இன்னொருவிஷயம், இந்த விதிகள் ஆப்பிளின் எல்லா ஓ.எஸ்.களுக்கும் பொருந்தும் என்பதால், தற்போது ரகசியமாக மைனிங் செய்யும் ஆப்கள் ஏதாவது இருந்தால் வருங்காலத்தில் அவை தடைசெய்யப்படவும் வாய்ப்பிருக்கிறது. இதேபோல மைனர்களிடம் தன் யூசர்களைக் காப்பதற்கு கூகுளும் விரைவில் நடவடிக்கை எடுத்தால் நல்லது!Trending Articles

Sponsored