சொன்னது போல் “பாஸ்போர்ட் புரட்சி”யை ஏற்படுத்துமா அரசின் புதிய ஆப்? #mPassportSevaApp



Sponsored



இனிமேல் பாஸ்போர்ட் பெறுவதற்கு பாஸ்போர்ட் மண்டல அலுவலகங்களில் நீண்ட வரிசையில் காத்துக்கொண்டிருக்க  வேண்டிய அவசியமில்லை. நாட்டின் எந்தப்  பகுதியிலிருந்தும் பாஸ்போர்ட்டைப் பெற விண்ணப்பிக்க முடியும் வகையில் சமீபத்தில் மத்திய அரசு ‘பாஸ்போர்ட் சேவா ஆப்’ (mPassport Seva App) என்ற செயலியை வெளியிட்டுள்ளது. இது ஒரு பாஸ்போர்ட் புரட்சி என்றெல்லாம் சொல்லப்பட்ட இந்தச்  செயலியில் அப்படி என்னவெல்லாம் இருக்கிறது என்பதைப்  பற்றிய ஒரு குவிக் அலசல் உங்களுக்காக..

கடந்த செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தப்பட்ட இந்தச்  செயலி கடந்த சில வருடங்களாகவே ப்ளே-ஸ்டோரில் இருக்கும் ஒன்றுதான் என்றாலும் அதில், பாஸ்போர்ட்டைப் பெற விண்ணப்பிப்பதற்கான வசதி இருந்ததில்லை. மாறாக  பாஸ்போர்ட் சம்மந்தப்பட்ட தகவல்களைத் தருகின்ற ஒரு செயலியாகத்தான் இருந்துவந்தது. ஆனால் தற்போது, பாஸ்போர்ட் விண்ணப்பிப்பதற்கான வசதியும் இணைக்கப்பட்டு புதிய வடிவில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ் (iOS) ஆகிய இரண்டு இயங்குதளங்களிலும் இந்தச்  செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதில் காணப்படும் சிறப்பம்சங்கள்:

Sponsored


  1. புதியதாக நமக்கான அக்கவுன்டினை தொடங்குவதற்கு ‘New User Registration’.
  2. ஏற்கனவே அக்கவுன்ட் உள்ளவர்களுக்கு “Existing User Login”.
  3. நமது விண்ணப்பத்தின் நிலையினை அறிவதற்கு “Status Tracker”.
  4. விண்ணப்பிப்பதுடன்  சமர்ப்பிப்பதற்குத்  தேவையான ஆவணங்களைக் குறித்து அறிய “Document Advisor”.
  5. விண்ணப்பிப்பதற்கான செலவினைக் கணக்கிட “Fee Calculator’.
  6. பாஸ்போர்ட் சேவை மையத்தில் ஆவணங்களை சரிபார்ப்பதற்கான நேரத்தினை அறிந்துகொள்வதற்கு  “Appointment Availability”.
  7. நமக்கு அருகிலுள்ள பாஸ்போர்ட் அலுவலகங்கள், ‘பாஸ்போர்ட் சேவா கேந்திரா’ மற்றும் காவல் நிலையங்கள் குறித்து தெரிந்துகொள்வதற்கு “Location Centre”.
  8. மேலும் பின்னிணைப்புகளுக்காக  Annexures/Affidavits. 
  9. பாஸ்போர்ட் சேவைகள் குறித்த புகார்கள் மற்றும் சந்தேகங்களுக்கு 1800-258-1800 ( Toll Free) எண்ணும் இதில் தரப்பட்டுள்ளது.

Sponsored


விண்ணப்பிப்பது எப்படி?
புதியதாக இந்தச்  செயலியினை உபயோகிப்பவரென்றால் முதலில் தமக்கான ஓர் அக்கவுன்டினை ‘New User Registration’இல் தொடங்க வேண்டும். பின்னர் புதிய பாஸ்போர்டிற்கான விண்ணப்பத்தையோ அல்லது பாஸ்போர்ட் புதுப்பிப்பதற்கான (Passport Reissue) விண்ணப்பத்தையோ ‘Existing User Login’ உள்ளே சென்று பூர்த்திசெய்து சமர்ப்பிக்க வேண்டும். பின்னர் அதற்குத் தேவையான கட்டணத்தைச் செலுத்தி அதனை  Save செய்து வைத்துக்கொள்ளவேண்டும். இறுதியாக பாஸ்போர்ட் சேவை மையத்தில் ( PSKs- Passport Seva Kendras) ஆவணங்களைச் சரிபார்ப்பதற்கான நேரத்தினைப் பதிவு செய்து கொள்ளவேண்டும்.  

இதன் மூலமாகவே காவல்துறை அனுமதி சான்றிதழையும் (Police Clearance Certificate) விண்ணப்பித்துக்கொள்ளலாம். நமது விண்ணப்பத்தின் தற்போதைய நிலையினை ஃபைல் நம்பர் (File number) மற்றும் பிறந்த தேதி (Date of birth) ஆகியவற்றைக்கொண்டு அறிந்துகொள்ளும் வசதியும் உள்ளது. இறுதியாக இந்தச் செயலியில் குறிப்பிட்டிருக்கும் முகவரிக்கு வந்து போலீஸார் சரிபார்ப்புப் பணிகளை மேற்கொண்டதன் பிறகு பாஸ்போர்ட் வழங்கப்படும்.

நிறைகள்-குறைகள்:
இதுவரைக்கும் ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் இந்தச் செயலியினை பயன்படுத்தி வருகின்றனர். பாஸ்போர்ட் சேவை மையங்கள் இல்லாத மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் பக்கத்து மாவட்டங்களுக்கோ அல்லது மாநிலங்களுக்கோ சென்று விண்ணப்பிக்கும் நிலை தற்போது காணப்படுகிறது. இத்தகைய இடர்பாடுகள் அனைத்தும் இந்தச் செயலியின் மூலம் களையப்படும். மேலும் நாட்டின் எந்தப் பகுதியிலிருந்தும் புதிய பாஸ்போர்டிற்காக விண்ணபிக்க முடியும். இதனால் மக்கள் மிக எளிதாக தங்களுக்கான பாஸ்போர்ட் சேவையினைப் பெறமுடியும் என்பவையே இதன் நன்மைகளாகச் சொல்லப்படுகிறது. 

அதே வேளையில் இந்தச் செயலியானது, இந்திய அரசாங்கத்தின் வெளியுறவுத் துறையின் கீழ் செயல்படும் ‘தூதரக, பாஸ்போர்ட் மற்றும் விசா பிரிவினால்’ (Consular, Passport & Visa Division) செயல்படுத்தப்பட்டாலும் இதன் பராமரிப்பு பணியானது தனியார் நிறுவனத்தால் மேற்கொள்ளப்படுவதால் தங்களின் சொந்த விபரங்கள் இதன் மூலம் திருடப்படும் வாய்ப்பு இருப்பதாகவும், இதன் நம்பகத்தன்மையின்மீது சந்தேகம் வருவதாகவும் இதன் பயனாளர்கள் பலர் கருதுகின்றனர். பாஸ்போர்ட் அலுவலகத்திலும் சில வேலைகளை தனியார் நிறுவனம்தான் அவுட்சோர்ஸிங் முறையில் செய்துவருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆண்ட்ராய்டு லிங்க்

ஆப்பிள் லிங்க்



Trending Articles

Sponsored