லவ் ரொனால்டோ, லைக் மெஸ்ஸி, ஹஹா நெய்மர், இதயங்களை வென்ற அர்ஜென்டினா, போர்ச்சுகல்! #FIFAtrends



பிக்பாஸ்ல மமதிய வெளியேற்றிட்டாங்க... தமிழ்ப்படத்தோட லேட்டஸ்ட் போஸ்டர் பாகுபலி ஸ்பூப்னு ட்ரெண்டிங்கல பல விஷயங்கள் இருந்தாலும், தமிழ்நாடு இல்ல, இந்தியா இல்ல உலகமே இந்த மாசம் முழுக்க இருக்குற ட்ரெண்டு கால்பந்து உலகக் கோப்பைதான். ஆஃப் சைடுனா என்னனு தெரியுமா... ரெட் கார்டு வாங்குனா எத்தனை மேட்ச் ஆடக்கூடாதுனு தெரியுமா.. ரொனால்டோ, மெஸ்ஸி இவங்கள தவிர வேற யார தெரியும்னு இந்த புட்பால் ஃபேன்ஸ் அலப்பறை பண்ண, உலகமே கொண்டாடுற புட்பாலோட இந்தியா ட்ரெண்ட் என்னனு தெரியுமா?

Sponsored


லீக் மேட்ச்லாம் முடிஞ்சு முதல் காலிறுதில மோதப்போற அணி எதுனு முடிவு பண்ற க்ரூப் 16 ஆட்டத்துல உருகுவே - போர்ச்சுகல், மற்றும் அர்ஜெண்டினா- ஃப்ரான்ஸ் மோதின. இதில் அர்ஜெண்டினாவும், போர்ச்சுக்கலும் ஜெயிச்சு காலிறுதிக்கு போகணும்னுங்கறதுதான் இந்திய மக்களின் மனநிலையாக இருந்துள்ளது. கூகுளில் இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட அணி போர்ச்சுக்கலும், அர்ஜெண்டினாவும் தான். 

Sponsored


Sponsored


இந்தியாவில் இந்த உலகக் கோப்பை தொடர் முழுவதும் அதிகம் தேடப்பட்ட வீரர் கொலம்பியா வீரரான ஜேம்ஸ் ரோட்ரிகஸ்தான். அடுத்த இடத்தில் போர்ச்சுக்கல் கேப்டன் ரொனால்டோவும், 3வது இடத்தில் இங்கிலாந்து கேப்டன் ஹாரி கேனும் உள்ளனர். இந்தியாவின் முன்னணி தேடலில் மெஸ்ஸிக்கு இடமில்லை என்பதுதான் இங்கு ஆச்சர்யமான விஷயம். ஜூன் 30ம் தேதி அன்று போர்ச்சுக்கல், அர்ஜென்டினா இரு அணிகளுக்குமே ஆட்டம் இருந்தது. அன்று கூட ரொனால்டோவுக்குத்தான் இந்தியாவில் முதலிடம் கிடைத்தது.

ரவுண்டு ஆஃப் 16 பிரிவிலும் இந்தியர்கள் அதிகம் தேடியது போட்டியை விட்டு வெளியேறிய அணிகளான போர்ச்சுக்கலையும், அர்ஜென்டினாவையும்தான். மொத்தமாக உள்ள அணிகளில் 50% தேடலை அர்ஜென்டினா, போர்ச்சுகல், பிரேசில் கைப்பற்றின என்பது சுவாரஸ்யமான தகவல். உலக வரைபடத்தில் எந்தக் கால்பந்து அணிக்கு எந்த நாட்டில் மவுசு அதிகம் என்ற ட்ரெண்டில் இந்தியா ஆரம்பத்தில் அர்ஜென்டினாவையும், பின் போர்ச்சுகலையும், இப்போது பிரேசிலையும் அதிகம் விரும்பியுள்ளது. உலகமே அதிகம் விரும்பும் கால்பந்து அணியாக பிரேசில் உள்ளது. 

ரொனால்டோதான் இந்தியா விரும்பும் கால்பந்து வீரர் என்றால், மெஸ்ஸிக்கு அடுத்த இடம். ஆனால் நெய்மரை பொறுத்தவரையில் அவர் அடிபட்டது போல உருளும் காட்சிகளை ட்ரோல் செய்து வரும் மீம்கள்தாம் அதிகம். ரொனால்டோவுக்கு லவ் என்றால், மெஸ்ஸிக்கு லைக், ஆனால் நெய்மருக்கு இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதிலும் ஹஹா தான் என்கிறார்கள் நெட்டிசன்கள். உலகில் நெய்மர் குறித்து அதிகம் தேடப்பட்ட வார்த்தை நெய்மர் ரோலிங் என்பதுதான். ட்விட்டர் முதல் யூ-டியூப் வரை நெய்மரை கலாய்க்காத சமூக வலைதளங்களே இல்லை எனுமளவுக்கு நெய்மர் ரோலிங் ட்ரோல் செய்யப்பட்டுள்ளது. 

இந்தத் தேடலில் இன்னொரு முக்கியமான விஷயமும் இருக்கிறது. இந்தியா உலகக் கோப்பை கால்பந்துக்குத் தகுதி பெறுமா என்று அதிகமாகத் தேடும் மாநிலங்கள் கேரளாவும், மேற்குவங்கமும், தமிழ்நாடும்தான். மற்ற இரண்டு மாநிலங்கள் கால்பந்துக்குப் பெயர் பெற்றவை. அதில் தமிழகமும் இணைந்திருப்பது மகிழ்ச்சி. இந்தியாவில் கோலி, தோனி என்று இருந்த ரசிகர்கள் மெஸ்ஸி, ரொனால்டொ, ராட்ரிகஸ், கேன் எனப் பேசிக்கொண்டிருப்பது மகிழ்ச்சியான விஷயம்தானே.
 



Trending Articles

Sponsored