ஃபேக் நியூஸை கண்டறிய வாட்ஸ்அப்புக்கு உதவினால் $50,000... ரெடியா ஜென் Z?Sponsoredவாட்ஸ்அப்பில் பரவிய தவறான தகவலால் சிலர் கொல்லப்பட்ட சம்பவம், இந்தியாவில் ஓர் ஆண்டில் அதிகம் அரங்கேறியுள்ளன. எனவே, போலியான செய்திகள், தகவல்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய அரசு சில நாள்களுக்கு முன் வாட்ஸ்அப் நிறுவனத்தைக் கேட்டுக்கொண்டது. 

இதைத் தொடர்ந்து, புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது வாட்ஸ்அப் நிறுவனம். அதன்படி, வாட்ஸ்அப்பில் வெளியாகும் போலி செய்திகள், தகவல்களைத் தடுக்க அல்லது கண்டறிய யோசனை கூறுபவர்களுக்கு 50,000 டாலர் பரிசு அறிவித்துள்ளது. அவர்கள் கொடுக்கும் தகவல்கள் மற்றும் இது தொடர்பாக அவர்கள் மேற்கொள்ளும் ஆராய்ச்சிகளுக்கான முழு உரிமை அவர்களையே சாரும். இதற்கு, வாட்ஸ்அப் நிறுவனமும் உதவிசெய்யும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதில் கலந்துகொள்பவர்களுக்கான தகுதி வரம்பு, விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் ஆகியவற்றையும் குறிப்பிட்டுள்ளது. வாட்ஸ்அப் அதிமாகப் பயன்படுத்தும் இந்தியா, பிரேஸில், இந்தோனேசியா மற்றும் மெக்ஸிகோ போன்ற நாடுகளில் இருந்து வரும் பங்கேற்பாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது அந்நிறுவனம்.

Sponsored


இந்த விஷயம் வாட்ஸ்அப்பில் வைரல் ஆனால் நல்லது.

Sponsored
Trending Articles

Sponsored