பட்ஜெட் செக்மெண்டில் கவனம் செலுத்தும் லாவா! - ரூ.5,750 விலையில் Z61 ஸ்மார்ட்போன்இந்திய மொபைல் தயாரிப்பு நிறுவனமான லாவா Z61 என்ற புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இதுதொடர்பான அறிமுக நிகழ்ச்சியில் பேசிய அந்நிறுவனத்தின் தயாரிப்பு பிரிவின் தலைவரான கௌரவ் நிகம், தாங்கள் ஹைஎண்டு ஸ்மார்ட்போன்களில் கவனத்தைச் செலுத்தாமல் 10,000 ரூபாய்க்குக் குறைவான பட்ஜெட் செக்மெண்டில் மட்டும் கவனம் செலுத்தி வருவதாகவும், அதில் 40 சதவிகித்தைக் கைப்பற்ற  இலக்கு நிர்ணயித்திருப்பதாகவும் தெரிவித்தார்.

Sponsored


Sponsored


சாதாரண மொபைல்களிலிருந்து புதிதாக ஸ்மார்ட்போனை பயன்படுத்த தொடங்குபவர்களுக்கு Z61 ஸ்மார்ட்போன் ஏற்றதாக இருக்கும் என லாவா தெரிவித்திருக்கிறது. 5.45 இன்ச் 18:9 டிஸ்ப்ளேவைக் கொண்ட இதில் 16 ஜிபி இன்டர்னல் மெமரி மற்றும் 1 ஜிபி ரேம் இருக்கிறது. 3,000 mAh பேட்டரியை ஒரு முறை சார்ஜ் செய்தால் ஒரு நாளைக்கு மேல் மொபைலை பயன்படுத்த முடியும். ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளம் இதில் இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.5,750. ஆன்லைனில் மட்டுமின்றி ரீடெயில் ஸ்டோர்களிலும் இதே விலைக்கு ஸ்மார்ட்போனை வாங்கிக்கொள்ள முடியும். ஒரு வருடத்துக்குள் டிஸ்ப்ளே உடைந்துவிட்டால் அதை மாற்றிக்கொள்ள முடியும் என்ற சலுகையையும் ஜியோ கேஷ்பேக் ஆஃபரும் இந்த மொபைலோடு சேர்ந்து தரப்படுகிறது. 

Sponsored
Trending Articles

Sponsored