``58 நாடுகள், 29 மாநிலங்கள், 5 லட்சம் தேடல்கள்!”- Search கருணாநிதிSponsored`இட்ஸ் ஏ மெடிக்கல் மிராக்கில்' என்ற வசனத்தைத் திரைப்படங்களில் மட்டுமே கேட்ட நமக்கு, நிஜத்தில் நிகழ்த்திக் காட்டியுள்ளார் `கருணாநிதி'. தமிழகத்தில் ஜூலை 29 ம் தேதி இரவு, வெளியில் சென்றிருந்த மக்கள் அனைவரும் தங்களது வீடுகளை நோக்கி விரைந்து கொண்டிருந்தனர். வீட்டிலிருந்த மக்கள் அனைவரும் தொலைக்காட்சி பெட்டியின் முன் அமர்ந்து செய்தி சேனல்களை மாற்றி மாற்றிப் பார்த்துக் கொண்டிருந்தனர். தமிழகம் முழுவதும் பதற்றம் நிலவியது. இவை அனைத்துக்கும் ஒரே காரணம். முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உடல்நிலையில் ஏற்பட்ட பின்னடைவின் காரணமாக சமூக வலைதளங்களில் பரவி வந்த வதந்திகள்தாம். ஆனால், அவை அனைத்தையும் தவிடு பொடியாக்கிவிட்டார் கருணாநிதி. அவரைப் பார்க்க மாநிலம் முழுவதுமுள்ள தொண்டர்கள் பலர் சென்னைக்கு வந்த வண்ணம் உள்ளனர். 29 ம் தேதி இருந்த பதற்றம் இப்போது இல்லை என்றாலும், தலைவர் எழுந்து வருவார் அவரைப் பார்த்த பிறகுதான் வீடு திரும்புவோம் என்கிறார்கள் உடன் பிறப்புகள். கட்சித் தொண்டர்கள், நிர்வாகிகளைத் தாண்டிப் பொதுமக்களும் கருணாநிதி நலமாக இருக்கிறாரா என்பதைத் தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டினார்கள். 

கூகுள் தேடலின் இந்திய அளவிலான சமீபத்திய ட்ரெண்ட்ஸில், `கருணாநிதி' என்ற பெயர் 5 லட்சத்துக்கும் அதிகமாகத் தேடப்பட்டுள்ளது. அதேபோல `கலைஞர்' என்ற சொல் 2 லட்சத்துக்கும் மேலாகத் தேடப்படுள்ளது. கருணாநிதி, காவேரி மருத்துமனையில் சேர்க்கப்பட்ட அன்று (ஜூலை 28) 20 ஆயிரத்துக்கும் மேலானோர் `காவேரி ஹாஸ்பிட்டல்' என்று கூகுளில் தேடியுள்ளனர். 

Sponsored


உலக அளவில் `கலைஞர்' என்ற சொல் இந்தியாவுக்குப் பின் அதிகம் தேடப்பட்டது தமிழர்கள் அதிகம் வாழும் நாடுகளான கத்தார், ஐக்கிய அரபு நாடுகள், ஒமன் மற்றும் சிங்கப்பூர் ஆகியவைதாம். கருணாநிதி என்ற பெயரை மட்டும் 58 நாடுகளில் தேடியுள்ளனர். 

Sponsored


இந்திய அளவில், தமிழ்நாட்டுக்குப் பின் அதிகம் தேடியது புதுச்சேரியில்தான். அதற்கடுத்த இடங்களில் தென் மாநிலங்களான கர்நாடகா, கேரளா, ஆந்திரா ஆகிய மாநிலங்கள் இடம்பெற்றிருக்கின்றன. கடந்த 7 நாள்களில், இந்தியா முழுவதும் சுமார் 24 மாநிலங்களில் இவரைப் பற்றி தேடியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. காவேரி மருத்துவமனையிலிருந்து முக்கிய அறிக்கை வெளியான ஜுலை 29ம் தேதியன்றே `கலைஞர்' மற்றும் `கருணாநிதி' ஆகிய பெயர்கள் மிக அதிகமாகத் தேடப்பட்டுள்ளன. `கருணாநிதி' என்ற பெயரும் இதே இடங்களில்தாம் அதிகம் தேடப்பட்டுள்ளது. தமிழகத்தில், தஞ்சாவூர் மாவட்டத்தில் திருமலைசமுத்திரம் என்ற ஊரில் அதிகம் தேடியுள்ளனர். வாணியம்பாடி,புதுப்பாக்கம் ஆகிய ஊர்களிலும் அதிகம் தேடியுள்ளனர். 

`கலைஞர்' மற்றும் `கருணாநிதி' ஆகிய வார்த்தைகளோடு சேர்த்து பல வார்த்தைகளை கூகுளில் தட்டியுள்ளனர் நம் நெட்டிசன்கள். `கலைஞர் ஹெல்த்',`கருணாநிதி ஹெல்த் லைவ் அப்டேட்', `கலைஞர் கருணாநிதி' ஆகியவை அதிகம் தேடப்பட்டுள்ளன. இவற்றோடு, காவேரி மருத்துவமனை அறிக்கையில் இடம்பெற்ற `Transient Setback' என்ற வார்த்தைக்கான பொருளும் அதிகம் தேடப்பட்டுள்ளது.

கருணாநிதி மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு, ஃபேஸ்புக்,வாட்ஸ் அப், ட்விட்டர் எனத் திரும்பும் பக்கமெல்லாம் அவர் புகைப்படங்கள்தாம். அதற்காக நிறைய புகைப்படங்களை கூகுளில் தேடியிருக்கிறார்கள் அவரது ரசிகர்கள். இந்தியளவில், கருணாநிதியின் புகைப்படங்கள் அதிகம் தேடப்பட்டது புதுச்சேரியில்தான். அதைத் தொடர்ந்து தமிழகம் மற்றும் கர்நாடகம் ஆகிய மாநிலங்கள் இடம்பெற்றிருக்கின்றன. தமிழகத்தில், திருவள்ளுர் மாவட்டம் மணவாளநகரை அடுத்து கருணாநிதியின் புகைப்படங்கள் அதிகம் தேடப்பட்டது அவரின் சொந்தத் தொகுதியான திருவாரூரில்தான். அதைத் தொடர்ந்து தென்காசி, மன்னார்குடி, அரக்கோணம் ஆகிய ஊர்களிலும் அதிகம் தேடப்பட்டுள்ளது.  

யூ-டியூபில் கருணாநிதி குறித்த வீடியோக்களை அதிகம் தேடிய மாநிலம் தமிழகம்தான். அதைத் தொடர்ந்து புதுச்சேரி, கர்நாடகம் மற்றும் தெலங்கான ஆகியவை இடம்பெற்றிருக்கின்றன.தமிழகத்தில், முறையே கோயம்புத்தூர், திருச்சி, ஈரோடு ஆகிய ஊர்களில் அதிகம் தேடப்பட்டுள்ளது. எல்லாரும் கேட்க நினைப்பது கலைஞரின் குரலைத்தான். அந்தக் கரகரக்குரலுக்காகத்தான் காவேரி மருத்துவமனை தொடங்கி கலிபோர்னியா வரை காத்திருக்கிறார்கள். Trending Articles

Sponsored