2 ஃபேஸ்புக்... 42 ட்விட்டருக்குச் சமம்... யாரும் தொடாத உச்சம் தொட்ட ஆப்பிள்!ஆப்பிள் நிறுவனத்தின் மொத்த மதிப்பு மோடியின் ஆண்டு சம்பளத்தோடு ஒப்பிட்டால் 3.8 கோடி மடங்கு அதிகமாம். ஃபேஸ்புக்கின் மதிப்போடு ஒப்பிட்டால் 2 மடங்கு அதிகம். இந்தத் தொகையை வைத்து 4.2 கோடி புதிய கார்களை வாங்க முடியும், 1.8 கோடி ஆசிரியர்களுக்கு ஆறாண்டுச் சம்பளம் வழங்க முடியும் எனப் பட்டியல் நீள்கிறது. ஆப்பிள் நிறுவனத்தின் இப்போதைய சந்தை மதிப்பு எவ்வளவு தெரியுமா? 6,87,55,00,00,00,000 ரூபாய் ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் சந்தை மதிப்பு கொண்ட உலகின் முதல் நிறுவனம் என்ற பெயரையும் ஆப்பிள் நிறுவனம் பெற்றுள்ளது.

``ஆப்பிள்... இந்த வார்த்தைய சொன்னா மூணு விஷயம் ஞாபகம் வரும், ஒண்ணு ஐசக் நியூட்டன், இரண்டாவது ஆப்பிள் பழம், மூன்றாவது ஆப்பிள் நிறுவனம்'' என்ற வரிகள் கடந்த 10 வருடங்களாக ஃபேமஸ். ஆனால், இப்போது நிலை அப்படியே தலைகீழ் ஆப்பிள் என்றதும் ஐபோனும் ஆப்பிள் நிறுவனமும்தான் முதலில் கண்முன் நிற்கிறது. 

Sponsored


1976 ம் ஆண்டு ஸ்டீவ் ஜாப்ஸ் ஆரம்பித்த  நிறுவனம் கணினி தயாரிப்பு நிறுவனமாக அறிமுகமானது. புதுமையாக ஏதாவது செய்ய வேண்டும் என்பதுதான் ஜாப்ஸின் ஒரே எண்ணம். அதனால்தான் சந்தையில் எப்போதும் ஆப்பிள் தயாரிப்புகளுக்கு அதிக வரவேற்பு இருக்கிறது. 1976ல் ஆரம்பிக்கப்பட்ட ஆப்பிள் நிறுவனத்தில் 1985 வரை ஜாப்ஸ்தான் தலைமை செயல் அதிகாரியாக இருந்தார். 1985ல் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நிறுவனத்தை விட்டு வெளியேறிய ஜாப்ஸ் மீண்டும் 1997ல் ஆப்பிளுக்குத் திரும்பினார். காரணம் அப்போது ஆப்பிள் நிறுவனம் மிகவும் மோசமான சூழலில் இருந்தது. 

Sponsored


Sponsored


அதன்பின் எல்லாமே வெற்றிதான். ஆப்பிள் நிறுவனம் ஸ்மார்ட்போன் சந்தையில் கால்பதித்தது. ஐபோன் விற்பனை என்பது உலகின் மிகப் பெரிய ஆச்சர்யமிக்க விஷயமாகப் பார்க்கத் துவங்கினர். முதல் நாளே கடை வாசலில் காத்திருந்து ஐபோன் வாங்கும் நபர்கள் அதிகரிக்க துவங்கினர்.

ஒருமுறை ஐபோனைத் தயாரித்து விட்டு ஜாப்ஸிடம் அதன் இன்ஜினீயர்கள் காட்டியுள்ளனர். அந்த மாடலே சற்று சிறிய அளவிலானதுதான். அப்போது ஜாப்ஸ் அந்த போனை தண்ணீரில் போட்டு அதில் வரும் நீர் குமிழ்களை கவனிக்கச் சொல்லியிருக்கிறார். இவ்வளவு இடம் காலியாக உள்ளது இதைக் குறைத்தால் இன்னமும் போனின் அளவு குறையும் என்று கூறியிருக்கிறார். அந்த அளவுக்குத் தனது தயாரிப்பின் மீது நுண்ணிய விஷயங்களில் கவனம் செலுத்துவாராம் ஜாப்ஸ்.

ஜாப்ஸ் மறைவுக்குப் பின்னர் 2011 ம் ஆண்டு முதல் டிம் குக் ஆப்பிளின் தலைமைச் செயல் அதிகாரியாக உள்ளார். ஐபோன் விற்பனைதான் ஆப்பிளின் 60 சதவிகித வருமானத்துக்குக் காரணமாக உள்ளது. இதுவரை 18 மாடல்களில் 1.2 பில்லியன் ஆப்பிள் ஐபோன்கள் விற்கப்பட்டுள்ளன. ஐபோன் விற்பனை மட்டுமல்ல ஐபாட், ஐபேட் மினி, மேக் லேப்டாப்கள் என ஆப்பிளின் தயாரிப்புப் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. வெறும் ஒரு கேட்ஜெட்டாக மட்டுமல்லாமல், ஐபோன் வைத்திருப்பது ஸ்டேட்டஸ் சிம்பலாகவே பார்க்கும் நிலையை ஐபோன் உருவாக்கி வைத்திருந்தது. 

புதுமையில் கொஞ்சம் தனது இடத்தை குறைத்துக் கொள்ளாத ஆப்பிள் நிறுவனத்துக்கு இது இன்னொரு பெருமை. ஆப்பிள் இந்தச் சாதனையோடு பல புதுமைகளை படைக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஆப்பிளின் அடுத்தத் தயாரிப்பு வரும் செப்டம்பரில் அறிமுகமாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. Trending Articles

Sponsored