ஷியோமியின் உடல்... கூகுளின் உயிர்... #MiA2 ஸ்மார்ட்போன் சொல்லி அடிக்கிறதா?!



டந்த வருடம் கூகுளோடு இணைந்து ஷியோமி நிறுவனம் அறிமுகப்படுத்திய Mi A1 ஸ்மார்ட்போன் பெரிய வரவேற்பைப் பெற்றது. அந்த ஸ்மார்ட்போன் வெளியாகி ஒரு வருடம் கடந்துவிட்ட நிலையில் அதன் அப்டேடட் வெர்ஷன் ஸ்மார்ட்போனான Mi A2-வை இந்தியாவில் வெளியிட்டிருக்கிறது ஷியோமி. கடந்த மாதம் ஸ்பெயினில் இந்த ஸ்மார்ட்போன் ஏற்கெனவே அறிமுகப்படுத்தப்பட்டுவிட்ட நிலையில் சில நாள்கள் கழித்து இங்கே வெளியாகியிருக்கிறது. முந்தைய மாடலில் இருந்ததை விட Mi A2 ஸ்மார்ட்போனில் என்னென்ன வசதிகள் அப்டேட் ஆகியிருக்கின்றன, விலைக்குத் தகுந்த வசதிகள் இருக்கின்றதா, குறைகள் என்ன? 

Mi A2 ஸ்மார்ட்போன் 

Sponsored


ஷியோமி ஸ்மார்ட்போன்களின் வசதியைப் பலர் விரும்பினாலும் அதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் miui சிலருக்குப் பிடிக்காமல் இருந்தது. அந்தக் குறையைச் சரி செய்ய வந்ததுதான் ஷியோமியின் ஆண்ட்ராய்டு ஒன் வரிசை ஸ்மார்ட்போன்கள். அதன்படி மொபைல் போனை உருவாக்குவது ஷியோமியாக இருந்தாலும் அதில் பயன்படுத்தப்படுவது ஸ்டாக் ஆண்ட்ராய்டு இயங்குதளம்தான். ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போன் என்பதால் கூடுதலாகச் சில வசதிகளும் இதன் மூலமாகக் கிடைக்கும்.

Sponsored


Sponsored


கூகுள் கொண்டு வரும் புதிய வசதிகளைத் தாமதமின்றி பெற முடியும், அப்டேட்கள் உடனுக்குடன் கிடைக்கும், போட்டோக்களை அன்லிமிடட்டாகச் சேமித்து வைத்துக்கொள்ள முடியும். 5.99 இன்ச் FHD+ டிஸ்ப்ளே இதில் இருக்கிறது இது இந்த செக்மென்ட்டில் இருக்கும் பொதுவான டிஸ்ப்ளே அளவு. இதன் முந்தைய மாடலான Mi A1-க்கும் இதற்கும் சில ஒற்றுமைகள் இருக்கின்றன. முதலில் இதன் கட்டமைப்பு. Mi A2 ஸ்மார்ட்போன் முழுமையான மெட்டல் பாடி கட்டமைப்பைக் கொண்டிருக்கிறது. இதன் மூலமாக மொபைலின் உறுதித் தன்மை மேம்படுவது மட்டுமன்றி மொபைலுக்கு ஒரு ப்ரீமியம் லுக்கையும் கொடுக்கிறது.

அடுத்தது டூயல் கேமரா, கடந்த முறை இந்த செக்மென்ட்டில் ஷியோமி அறிமுகப்படுத்திய முதல் மொபைல் Mi A1 தான். Mi A2 ஸ்மார்ட்போனில் 12+20 மெகா பிக்சல் கேமராக்கள் இருக்கின்றன. எனவே, இதன் மூலமாக எடுக்கப்படும் புகைப்படங்கள் ஒன் பிளஸ் 6 போனில் எடுக்கப்பட்ட புகைப்படங்களோடு ஒப்பிடும் வகையில் இருக்கிறது என்கிறார்கள் இதைப் பயன்படுத்திப் பார்த்த சிலர். முந்தைய மாடலான Mi A1-ல் செல்ஃபி போட்டோக்கள் தெளிவாக இல்லையென்று சில கருத்து தெரிவித்திருந்தார்கள் அதைச் சரி செய்யும் விதமாக இந்த மொபைலில் 20MP முன்புற கேமரா கொடுக்கப்பட்டிருக்கிறது. Snapdragon 660 புராஸசர் இதில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

கேமராவில் சிறப்பு கவனம் செலுத்திய ஷியோமி பேட்டரியில் அதைச் சற்றே தவறவிட்டிருக்கிறது. Mi A2 -வில் 3010mAh பேட்டரி இருக்கிறது. பேட்டரி பேக்அப்பிற்கு பெயர் போன ஷியோமி ஸ்மார்ட்போன்கள் அளவுக்கு இதில் சார்ஜ் நிற்கவில்லை. எப்படி இருந்தாலும் ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் ஒரு நாள் பயன்பாட்டுக்குப் போதுமானதாக இருக்கும். இது தவிர இதில் இரண்டு மிகப்பெரிய மைனஸ்கள் இருக்கின்றன. ஒன்று இதில் மெமரி கார்டைப் பயன்படுத்த முடியாது, மற்றொன்று 3.5mm ஹெட்போன் ஜாக் இல்லாத காரணத்தால் இயர்போனை பயன்படுத்த முடியாது. இந்த இரண்டுமே இந்திய வாடிக்கையாளர்களுக்குக் குறிப்பாக பட்ஜெட் ஸ்மார்ட்போன்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு இவை புதிய விஷயங்கள்தாம்.

மெமரி கார்டு விஷயத்தைக் கூட எப்படியாவது சமாளித்து விடலாம். ஆனால், 3.5 mm ஹெட்போன் ஜாக்தான் சிக்கல் ஏற்படுத்தலாம். இதனால் இந்த ஸ்மார்ட்போனை வாங்குவதற்கு சிலருக்குத் தயக்கம் ஏற்படவும் வாய்ப்புண்டு. ஆனால், அதைச் சரி செய்யும் விதமாக Type-c யிலிருந்து 3.5mm இயர்போனை பயன்படுத்தும் வகையில் அதற்கான அடாப்டர் ஒன்றும் இந்த மொபைலுடன் தரப்படுகிறது. இந்த அடாப்டர் மூலமாக வழக்கமான இயர்போன்களை பயன்படுத்தலாம். ஆனால், அதற்காக ஒவ்வொரு தடவையும் அடாப்டரை கையில் வைத்துக்கொள்ள வேண்டியிருக்கும். தற்பொழுது 4GB+64GB வேரியன்ட்டை 16,999 ரூபாய்க்கு வாங்கலாம், இதைத் தவிர்த்து 6GB+128GB வேரியன்ட் கூடிய விரைவில் விற்பனைக்குக் கொண்டு வரப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். கேமராவுக்காகச் சில குறைகளை அட்ஜஸ்ட் செய்து கொள்ளலாம் என்பவர்களுக்கு Mi A2 சிறந்த தேர்வாக இருக்கும்.



Trending Articles

Sponsored